மபி பாஜக முதல்வர் பேசும்போது.. மேடைக்கு பறந்து வந்த செருப்பு! பகீர் வீடியோ உண்மையா? FACT CHECK
சென்னை: மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மேடையில் பேசும்போது அவர் மீது காலனி வீசப்பட்டதாக வெளியான வீடியோவின் உண்மை தன்மை பற்றி அலசுவோம்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் பாஜக ஆளும் மாநிலமான மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்த தேர்தலில் பாஜகவை வெற்றிபெற வைக்கும் முனைப்புடன் அவர் தற்போது பல்வேறு இடங்களுக்கு சென்று பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஒரு பொதுக்கூட்ட மேடையில் பேசிக்கொண்டு இருக்கும்போது, கூட்டத்தில் இருந்து செருப்பு பாய்ந்து வந்து அவர் மீது விழுகிறது. உடனே பாதுகாவர்கள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹானை மேடையில் சுற்றி வளைத்துக்கொள்கிறார்கள்.
இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த "ஜீரோ நானே" என்ற ஐடி, "#சம்பவம்: மத்தியப்பிரதேச பாஜக கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த பாஜக முதல்வர் மீது செருப்பு வீச்சு. மபியில் இருந்து பாஜகவை செருப்பால் அடித்து விரட்ட மக்கள் தயாராகிவிட்டார்கள்." என்று குறிப்பிட்டு உள்ளார். இதேபோல் பலரும் இந்த வீடியோ பதிவிட்டு வருகிறார்கள்.
வீடியோ பார்க்கையில் உண்மைபோல் தெரிந்தாலும் அதன் உண்மை தன்மை என்னவென்று நாம் ஆராய்ந்தோம். இந்த செய்தி மற்றும் வீடியோ வேறு எங்கெல்லாம் வெளியாகி உள்ளது என இணையத்தில் தேடினோம். அப்போதுதான் பிரபல ஆங்கில தொலைக்காட்சியான NDTV யின் யூடியூப் பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டு இருந்தது. ஆனால், 5 ஆண்டுகளுக்கு முன்.
#சம்பவம்: மத்தியப்பிரதேச பாஜக கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த பாஜக முதல்வர் மீது செருப்பு வீச்சு🔥
— ஜீரோ நானே⭕ (@Anti_CAA_23) September 7, 2023
* மபியில் இருந்து பாஜகவை செருப்பால் அடித்து விரட்ட மக்கள் தயாராகிவிட்டார்கள்👏👏 pic.twitter.com/ZLc0quIRkw
கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த சிவராஜ் சிங் சவுஹான் சித்தி என்ற பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது நடந்த சம்பவம் இதுவாகும். கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதி இந்த வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
அதில் செருப்பு வீசியதாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதேபோல் முதலமைச்சர் சென்ற பேருந்தின் மீது கற்களும் வீசப்பட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தாக்குதல்களுக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் எனவும் சிவராஜ் சிங் சவுஹான் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பழைய வீடியோவை புதியது போல் பரப்பி வந்தது உறுதியாகிறது.

Fact Check
வெளியான செய்தி
மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சவுகான் மீது பொதுமக்கள் செருப்பு வீசியதாக பரவும் வீடியோ
முடிவு
வீடியோ உண்மையானது. ஆனால், 5 ஆண்டுக்கு முன் நடந்த சம்பவத்தை புதியது போல் பரப்புகிறார்கள்.
ரேட்டிங்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications