ஜோ பைடனிடம் வேண்டுமென்றே கைக்குலுக்க மறுத்த மோடி? பரவும் ஜி7 மாநாட்டு வீடியோ.. பின்னணி என்ன?
டெல்லி: லோக்சபா தேர்தலில் அமெரிக்காவின் தலையீட்டால் இத்தாலியில் நடந்த ஜி7 உச்சி மாநாட்டின்போது அந்நாட்டின் அதிபர் ஜோ பைடனை வேண்டுமென்றே பிரதமர் மோடி தவிர்த்து கைக்குலுக்காமல் நடந்து சென்றதாக வீடியோ பரவி வருகிறது. இந்த வீடியோவின் உண்மை நிலை பற்றி இங்கு பார்ப்போம்.
3வது முறையாக பிரதமராகி உள்ள நரேந்திர மோடி தனது முதல் வெளிநாட்டு பயணத்தை இத்தாலிக்கு மேற்கொண்டார். அதாவது இத்தாலியில் நடைபெற்ற 2 நாள் ஜி7 உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்றார். ஜி7 என்ற கூட்டமைப்பில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

இதில் இந்தியா இடம்பெறாத நிலையில் உச்சி மாநாட்டை நடத்தும் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியோ மெலோனி விடுத்த அழைப்பில் பிரதமர் மோடி அங்கு சென்று பங்கேற்றார். இத்தாலியில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன்பிறகு இத்தாலியின் அபுலியா நகரில் ஜுன் 13 முதல் ஜுன் 15ம் தேதி வரை நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த சுற்றுப்பயணத்தின்போது பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உள்பட உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார். மேலும் போப் பிரான்சிஸை சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்நிலையில் தான் தற்போது இணையதளத்தில் வீடியோ ஒன்று எக்ஸ் பக்கத்தில் பரவி வருகிறது. அதாவது ஜி7 உச்சி மாநாட்டின்போது பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் கைக்குலுக்க மறுத்துவிட்டார் என்று பரப்பப்பட்டு வருகிறது. மேலும் அந்த வீடியோ பதிவில், ‛‛ஜோ பைடனிடம் கைக்குலுக்க மோடி மறுத்துவிட்டார். தேர்தலில் அமெரிக்காவின் தலையிட்டால் விளைவு இப்படித்தான் இருக்கும் என்பதை காட்டினார். அதுமட்டுமின்றி எனது மதிப்பு என்னவென்று உலகுக்கு காட்டுவதாக மோடியின் செயல் இருந்தது'' என கூறப்பட்டு இருந்தது.
இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் மோடியின் முகம் தெளிவாக தெரியும் நிலையில், ஜோபைடன் என கூறப்படும் நபரின முகம் என்பது தெளிவாக தெரியவில்லை. இதனால் சந்தேகம் கிளப்பியது. இதுபற்றி ஜி 7 உச்சி மாநாட்டின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கமான ‛ஜி7 இத்தாலி 2024'ல் இடம்பெற்ற வீடியோவை பார்த்தால் அது போலியான செய்தி என்பது தெளிவாகி உள்ளது.
அதாவது ஜி 7 உச்சி மாநாட்டின்போது கடந்த 14ம் தேதி பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் அனைவரும் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு நடந்து சென்றனர். ஒவ்வொரு தலைவர்களும் தனித்தனியாக வந்தனர். இந்த வேளையில் தலைவர்களுக்கு வழிக்காட்டும் வகையில் ஒருவர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை நோக்கி கையை காட்டி அனுப்புகிறார். அந்த நபரின் முகத்தை ‛ப்ளர்' செய்து ஜோ பைடன் என்று பரப்பியது தெரியவந்தது.
மேலும் அந்த நபரும் பிரமதர் மோடிக்கு கைக்குலுக்கவில்லை. மாறாக அவர் நிகழ்ச்சி நடக்கும் இடத்தை சுட்டிக்காட்ட கையை நீட்டுகிறார். அதோடு அந்த நபர் பிரதமர் மோடி மட்டுமின்றி அனைத்து தலைவர்களுக்கும் கையை நீட்டி பணிவாக நிகழ்ச்சி நடக்கும் இடத்தை சுட்டிக்காட்டியது வீடியோ மூலம் தெளிவாகி உள்ளது.

Fact Check
வெளியான செய்தி
இத்தாலி ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கைக்குலுக்க மறுத்ததாக வீடியோ வெளியாகி உள்ளது.
முடிவு
இத்தாலி ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடிக்கு நிகழ்ச்சி நடக்கும் இடத்தை சுட்டிக்காட்ட ஒருவர் கையை அசைத்தி வழிக்காட்டினார். அந்த நபரை ஜோ பைடன் எனக்கூறி முகத்தை ‛ப்ளர்’ செய்து வீடியோ வெளியிடப்பட்டுள்
ரேட்டிங்
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications