FACT CHECK - பாஜக ஆட்சிக்கு வந்தால் “தமிழ்த்தாய் வாழ்த்து இருக்காது” - அண்ணாமலை இப்படி சொன்னாரா?
சென்னை: தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்காது என்றும், தேசிய கீதம் மட்டுமே சட்டமன்றத்தில் ஒலிக்கும் எனவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார் என செய்தி பகிரப்பட்டு வரும் நிலையில் அதன் உண்மைத்தன்மை குறித்து பார்ப்போம்.
தமிழ்நாடு சட்டசபை 2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் கடந்த 12 ஆம் தேதியுடன் தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்கத் தொடங்கிய நிலையில் அதை அவர் முழுவதும் வாசிக்காமல் நிறுத்தினார். உரையில் அரசின் சாதனைகள் குறித்து இடம்பெற்ற அறிவிப்புகளை ஆளுநர் வாசிக்காமல் உரையை நிறுத்தினார். இதன் காரணமாக சபாநாயகர் அப்பாவு ஆளுநரின் முழு உரையையும் வாசித்தார். கூட்டத்தின் இறுதியில் தேசிய கீதம் ஒலிக்கப்படும் நிலையில் முன்கூட்டியே ஆளுநர் ஆர்.என்.ரவி அங்கிருந்து கிளம்பி சென்றார்.

ஆளுநரின் செயலுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் இது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது. அதில், "பிப்ரவரி 12, 2024 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது நடந்த நிகழ்வுகள் பின்வருமாறு:
1) கடந்த 09.02.2024 அன்று அரசிடமிருந்து ஆளுநரின் வரைவு உரை ஆளுநர் மாளிகையில் பெறப்பட்டது. ஆளுநர் உரையில் உண்மைக்கு மாறான தகவல்கள் பல பத்திகளில் இடம் பெற்றிருந்தன.
2) மாண்புமிகு ஆளுநர் கீழ்க்கண்ட கருத்துக்களைத் தெரிவித்து கோப்பைத் திருப்பி அனுப்பினார்.
(அ) தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும் மற்றும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும், முடிவிலும் அதை இசைத்திட வேண்டும். இது தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் ஆகியோருக்கு ஆளுநர் கடந்த காலங்களிலும் கடிதங்களை எழுதியிருந்தார்.

(ஆ) ஆளுநரின் உரை என்பது அரசின் சாதனைகள், கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பிரதிபலிக்க வேண்டும் மற்றும் "சட்டமன்றம் கூடுவதற்கான காரணங்களை" சட்டமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டும். இதை தவிர்த்து உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்புவதற்கும், பாகுபாடான அரசியல் கருத்துக்களை தெரிவிப்பதற்காக இருக்கக்கூடாது.
3) மாண்புமிகு ஆளுநர் அளித்த அறிவுரையை தமிழ்நாடு அரசு புறக்கணித்து விட்டது.
4) மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இன்று (பிப்ரவரி 12, 2024) காலை 10:00 மணியளவில் சட்டப்பேரவையில் ஆற்றிய உரையில், மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர், மாண்புமிகு முதலமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். ஆளுநர் உரையில் முதல் பத்தியை படித்தார். அதில் திருவள்ளுவரின் திருக்குறள் (738) அடங்கியுள்ளது. அதன்பிறகு ஆளுநர் உரையில் உண்மைக்கு புறப்பான தகவல்கள் பல பத்திகளில் இடம் பெற்றிருந்ததை கருத்தில் கொண்டு, அரசியலமைப்பை கேலி குறியாக்கி விடும் என்ற காரணத்தால் உரையை முழுமையாக படிக்க இயலாமைக்கான விளக்கத்தை ஆளுநர் தெரிவித்தார். சட்டப்பேரவைக்கு தனது மரியாதையை வெளிப்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக இந்த பேரவை கூட்டத் தொடர் பயனுள்ளதாக அமைய வேண்டும் என வாழ்த்துத் தெரிவித்து தனது உரையை முடித்தார்.
5) அதன் பிறகு ஆளுநரின் முழு உரையின் தமிழாக்கத்தை மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் வாசித்தார். மாண்புமிகு ஆளுநர் உரை முடியும் வரை அமர்ந்திருந்தார்.
6) மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஆளுநரின் உரையை வாசித்து முடித்தவுடன், நிகழ்ச்சி திட்டமிடப்பட்டபடி, மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தேசிய கீதத்திற்கு எழுந்து நின்றார். அச்சமயம், மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஆளுநருக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து மற்ற கருத்துகளோடு நாதுராம் கோட்சேவை பின்பற்றுபவர் என தெரிவித்தார். மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் தனது பொருத்தமற்ற நடவடிக்கையால் தனது பதவியின் கண்ணியத்தையும், சபையின் மாண்பையும் குறைத்துவிட்டார்.
மாண்புமிகு ஆளுநருக்கு எதிராக சட்டப் பேரவை தலைவர் தனது நீண்ட விமர்சனத்தை வெளிப்படுத்திய நிலையில், மாண்புமிகு ஆளுநர் தனது பதவியின் கண்ணியத்தையும் மற்றும் சட்டப்பேரவையின் கண்ணியத்தையும் கருத்தில் கொண்டு சபையை விட்டு வெளியேறினார்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து நடைமுறையில் இருக்காது என்றும், சட்டமன்றத்தில் தேசிய கீதம் மட்டுமே ஒலிக்கும் எனவும் பேசியதாக ஒரு தனியார் தொலைக்காட்சி வெளியிட்டதாக படம் ஒன்று பகிரப்படுகிறது. திமுகவினர் இதனை அதிகளவில் பகிர்ந்து அண்ணாமலையை விமர்சித்து வருகிறார்கள். இதன் உண்மைத் தன்மை குறித்து நாம் ஆய்வு செய்தபோது அண்ணாமலை எந்த பேட்டியிலும் இப்படி ஒரு தகவல் தெரிவித்ததாக தெரியவில்லை. வேறு ஊடகங்களிலும் இதுபோன்ற செய்தி வரவில்லை.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட தனியார் தொலைக்காட்சியே தங்கள் சமூக வலைதள பக்கங்களில் இந்த செய்தியை தாங்கள் வெளியிடவில்லை என்று குறிப்பிட்டு மறுப்பு தெரிவித்து உள்ளது. இதன் மூலம் அண்ணாமலை பேசியதாக பரவும் தகவல் வதந்தி என்பது உறுதியாகிறது.

Fact Check
வெளியான செய்தி
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்காது என்றும் அண்ணாமலை பேசியதாக பரவும் நியூஸ் கார்டு
முடிவு
அப்படி ஒரு செய்தியை தாங்கள் வெளியிடவில்லை என தனியார் தொலைக்காட்சி மறுப்பு
ரேட்டிங்
-
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி












Click it and Unblock the Notifications