Fact Check: கீழக்கரையில் சிவன் கோயிலை மசூதியாக மாற்றியதாக பரவும் வதந்தி! உண்மை இதுதான்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள சிவன் கோயில் ஒன்று, மசூதியாக மாற்றப்பட்டுவிட்டதாக வதந்தி பரவி வருகிறது. கோயில் பாணியில் இந்த மசூதி கட்டப்பட்டிருக்கிறது என்று ஆய்வாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.
ரமேஸ்வரத்திலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில், கீழ்க்கரையில் அமைந்துள்ள மசூதி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த மசூதி குறித்து விளக்கும் தொல்லியல் துறை அதிகாரிகள், 17ம் நூற்றாண்டில் சேதுபதி மன்னர் காலத்தில் இந்த மசூதி கட்டப்பட்டது என்று கூறியுள்ளனர். சேதுபதி மன்னர் ஆட்சி காலத்தில், அவரது அமைச்சரவையில் சீதக்காதி இடம் பெற்றிருந்தார்.

இவர் காலத்தில்தான் கீழக்கரை நடுத்தெருவில் மசூதி ஒன்று கட்டப்பட்டது. இந்த மசூதி மற்ற மசூதிகளை விட கட்டிடக்கலையில் வேறுபட்டதாகும். குறிப்பாக மசூதியில் உள்ள தூண்களில் செதுக்கப்பட்டுள்ள வேலைப்பாடுகள் கோயில்களை போன்றே இருக்கின்றன. கோயில்களில் சிலைகள் இருக்கும், ஆனால் இது மசூதி என்பதால் சிலைகளுக்கு பதில் இலை சிற்பங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இந்த மசூதி திராவிட கட்டிடகலையில் கட்டப்பட்டிருக்கிறது. ஐந்து வாசல்களுடன், ஒரே நேரத்தில் 300 பேர் வரை தொழுகை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
அப்போது தொடங்கி இப்போது வரை இந்த பகுதியில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இப்படி இருக்கையில், இந்த மசூதி குறித்து சிலர் அவதூறு பரப்பி வருகின்றனர். அதாவது, “பாண்டிய மன்னர் கட்டிய இராமநாதபுரம் கீழக்கரை சிவன் கோயிலை அபகரித்த இஸ்லாமியர்கள்” என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு மசூதியின் காணொளி பகிரப்பட்டு வருகிறது.
இது குறித்து தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கமளித்திருக்கிறது. அதில், “காணொளியில் காண்பிப்பது கீழக்கரையில் உள்ள பழமையான ஓடைக்கரை மசூதியாகும். இது 1850 ஆம் ஆண்டு ஹபீப் முஹம்மது மரைக்காயர் மற்றும் அப்துல் காதர் மரைக்காயர் ஆகியோரால் திராவிட கட்டிடக் கலை பாணியில் கட்டப்பட்டது. கோயில் தூண்களைப்போல் உருவங்கள் எதுவும் இல்லாமல், பூ வேலைப்பாடுகள் நிறைந்த ஏராளமான தூண்கள், தமிழ் மாத அடிப்படையில் தொழுகை நேரத்தைக் குறிக்கும் பழங்கால கல்வெட்டும் இந்த மசூதியில் உள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு அரசின் அருங்காட்சியகங்கள் துறை கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியிட்ட "Islamic Architecture in Tamil Nadu" என்ற நூலில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இப்படி வதந்தி பரப்பப்படுவது இது முதல்முறை அல்ல.. இதற்கு முன்னர் கடந்த ஜனவரி மாதமும் இதேபோல இந்து முன்னணி வதந்தியை பரப்பியிருந்தது. அதில்,
“இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசாமி திருக்கோயிலும் கீழக்கரை பள்ளிவாசலும் ஒரே நேரத்தில் கட்டப்பட்டது என வரலாற்று ஆதாரம் இல்லாத பொய் செய்தி மக்கள் மத்தியில் பரப்பப்படுகிறது. 2000 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசாமி திருக்கோயிலும் சுமார் 350 வருடங்களுக்குள்ளேயே கட்டப்பட்ட மசூதியும் எப்படி ஒரே சமயத்தில் கட்டப்பட்டதாக இருக்க முடியும்...?
அயோத்தி, மதுரா, காசியை, போன்று கீழக்கரை மசூதியும் முன்பு இந்து ஆலயமாக இருந்தது என அந்தப் பகுதி மக்கள் பேசிக் கொள்கின்றனர். கீழக்கரை பள்ளிவாசல் பற்றிய உண்மை செய்தியை மக்களுக்கு தெரியப்படுத்த தேசிய தொல்லியல்துறை பள்ளிவாசலை ஆய்வு செய்ய வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வதந்தி எழுந்தபோதே விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இதேபோன்று விமர்சனங்கள் மீண்டும் மீண்டும் எழுந்துள்ளன.

Fact Check
வெளியான செய்தி
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள சிவன் கோயில் ஒன்று, மசூதியாக மாற்றப்பட்டுவிட்டதாக குற்றச்சாட்டு
முடிவு
இது 1850 ஆம் ஆண்டு ஹபீப் முஹம்மது மரைக்காயர் மற்றும் அப்துல் காதர் மரைக்காயர் ஆகியோரால் திராவிட கட்டிடக் கலை பாணியில் கட்டப்பட்ட மசூதியாகும்.
ரேட்டிங்
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications