2038ல் பூமியை தாக்குகிறதா விண்கல்? அதுவும் 72% சான்ஸ் இருக்கா? ஆய்வாளர்கள் சொன்ன விளக்கம்
சென்னை: பூமியை நோக்கி விண்கல் ஒன்று வந்துக்கொண்டிருப்பதாகவும், இது பூமியை தாக்க 72% வாய்ப்பு இருப்பதாகவும், இதனை தடுக்க முடியாது என்றும் சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த செய்திகள் குறித்த உண்மை தன்மையை சரிபார்த்தபோது, சில மாறுபட்ட தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
விண்கற்கள் குறித்து அவ்வப்போது செய்திகள் வந்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட தினத்தை சொல்லி, அன்றுதான் கடைசி நாள் என்றும், அன்றைய தினம் விண்கல் பூமியின் மீது மோதப்போகிறது என்றும் இந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படியாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் இதேபோன்ற செய்திகள் அதிகம் ஷேராகியிருந்தன. ஆனால் இந்த செய்தியின் உண்மை தன்மை குறித்து சில அப்பேட்கள் இப்போது கிடைக்கப்பெற்றிருக்கின்றன.

செய்தி: “பூமிக்கு நெருக்கமாக விண்கல் ஒன்று வந்துக்கொண்டிருக்கிறது. இந்த விண்கல் இன்றையிலிருந்து 14 ஆண்டுகளில் பூமியை தாக்கும். அதாவது சரியாக சொல்வதெனில் 2038ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி இந்த விண்கல் பூமியை தாக்கும். இதற்கான வாய்ப்பு 72% இருக்கிறது. இதை தடுக்கவே முடியாது. மட்டுமல்லாது இந்த விண்கல்லின் அளவு குறித்து தற்போது வரை எந்த தகவலும் இல்லை” என்று செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆய்வு: இதுகுறித்து MR.GK தனது யூடியூப் சேனலில் விளக்கமளித்துள்ளார். அதாவது, அமெரிக்காவின் கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம் (Planetary Defense Coordination Office), ஃபெடரல் எமர்ஜென்சி மேனேஜ்மென்ட் ஏஜென்சி (Planetary Defense Coordination Office), அமெரிக்க விண்வெளி விவகாரங்களுக்கான மாநில அலுவலகம் (us department of state office of space affairs) உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து டேபிள்டாப் எக்சசைஸை (tabletop exercise) நடத்தியுள்ளன.
n Office), ஃபெடரல் எமர்ஜென்சி மேனேஜ்மென்ட் ஏஜென்சி (Planetary Defense Coordination Office), அமெரிக்க விண்வெளி விவகாரங்களுக்கான மாநில அலுவலகம் (us department of state office of space affairs) உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து டேபிள்டாப் எக்சசைஸை (tabletop exercise) நடத்தியுள்ளன.
விளக்கம்: டேபிள்டாப் எக்சசைஸ் என்பது, பேரழிவு காலத்தில் எப்படி செயல்படுகிறோம் என்பது குறித்து முன்கூட்டியே பயிற்சி செய்து பார்ப்பதுதான். இது ஒத்திகை நிகழ்ச்சி போன்றது. கடலோர காவல்துறையினர், பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்டோர் அடிக்கடி இதுபோன்ற பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். அப்படித்தான் நாசாவும் ஒரு கற்பனையான சூழலை உருவாக்கி, அதனை எதிர்கொள்ள நாம் எப்படி செயல்படுகிறோம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
விவாதம்: இந்த விவாதத்தில், இன்றைய தேதியிலிருந்து 14 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு விண்கல் பூமியை தாக்கினால் நாம் என்ன செய்ய வேண்டும் என்று விரிவாக பேசப்பட்டது. அதில் பேரழிவு ஏற்படும்போது அதை எப்படி பொதுமக்களுக்கு தெரிவிப்பது, பாதிப்புக்கு உள்ளான மக்களை எப்படி மீட்பது, அவர்களுக்கு எந்த மாதிரியான சிகிச்சைகளை அளிப்பது? பேரழிவை தடுக்க என்ன நடவடிக்கைகளை எடுப்பது உள்ளிட்ட அமசங்கள் விவாதிக்கப்பட்டன. இதற்கு முன்னர் இதேபோல 4 ஒத்திகை விவாதங்கள் நடைபெற்றுள்ளன, இது 5வது.
ஆய்வாளர்கள் சொன்னது என்ன?: இப்படி விவாதிக்கும்போது, 14 ஆண்டுகளுக்கு முன்னரே பூமியை விண்கல் தாக்கும் என்று நாம் தெரிந்துக்கொண்டால் கூட ஏற்பட போகும் பேரழிவை நம்மால் தடுக்க முடியாது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதாவது, பேரழிவை தடுக்க 14 ஆண்டுகள் போதாது என்பதுதான் இந்த விவாதத்தின் சாராம்சம். இதனை MR.GK தெளிவாக விளக்கியிருக்கிறார்.
இப்படி இருக்கையில் உண்மையிலேயே பூமியை விண்கல் தாக்குகிறது என செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பது உண்மைக்கு மாறானது என்பது தெரிய வருகிறது.

Fact Check
வெளியான செய்தி
2038ம் ஆண்டு பூமியை விண்கல் தாக்க 72% வாய்ப்பிருக்கிறது என நாசா கூறியுள்ளது.
முடிவு
விண்கல் பூமியை தாக்குவதை போல கற்பனையான சூழலை உருவாக்கி விவாதம் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications