Fact Check: மழையில் நெல்மூட்டைகள் நனைந்து சேதம் என பகிரப்படும் போட்டோ.. உண்மை என்ன?
சென்னை: தமிழ்நாட்டில் மழையால் விவசாயிகள் நெல்மூட்டைகள் நனைந்து சேதமடைவதாகவும் தமிழ்நாடு அரசு கார் ரேஸ் உள்ளிட்டவற்றை நடத்துவதில்தான் கவனம் செலுத்துகிறது எனவும் சமூக வலைதளங்களில் படம் ஒன்று பகிரப்பட்டு வருகிறது. இந்த படத்தின் உண்மை தன்மை என்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசின் பேக்ட்செக் டீம் விளக்கம் அளித்துள்ளது.
சமூக வலைதளப் பக்கங்களில் " அன்று துபாய் முதலீடு ஈர்ப்பு..
அப்புறம் சிங்கப்பூர் முதலீடு ஈர்ப்பு.... பின் ஜப்பான், இப்போது அமெரிக்கா முதலீடு ஈர்ப்பு .. கார் ரேஸ் என..... ஆனால் எங்களுக்கு மட்டும் என்றைக்கு கிடைக்குமோ பாதுகாப்பு? என விவசாயி ஒருவர் மழையில் நனைந்து மிதக்கும் நெல் மூட்டை ஒன்றின் மீது அமர்ந்து கேட்பதாக ஒரு படம் பகிரப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்கா பயணம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சென்னை கார் பந்தயம் ஆகியவற்றை விமர்சிக்கும் வகையில் இந்த படத்துடன் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் பேக்ட்செக் டீம் விளக்கம் அளித்துள்ளது. அதில், 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் திடீரென பெய்த மழையால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்குக் கொண்டு வந்த நெல் மூட்டைகள் சேதமடைந்தபோது எடுக்கப்பட்ட படம்தான் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல் மூட்டைகள் சேதமடைந்திருப்பதாக காட்டப்படும் படம் 5 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டது; பொய்யான தகவலைப் பரப்ப வேண்டாம் எனவும் பேக்ட்செக் டீம் தெரிவித்துள்ளது.

பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]

Fact Check
வெளியான செய்தி
விவசாயிகள் நெல்மூட்டைகள் மழையில் நனைவதால் வேதனை
முடிவு
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட படம்
ரேட்டிங்
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications