Fact Check: புர்ஜ் கலிஃபாவில் ராமர் படமா? சோஷியல் மீடியாவில் வேகமாக பரவும் போட்டோ.. உண்மை இதுதான்!
சென்னை: அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்திருக்கும் நிலையில், இது தொடர்பான உண்மைக்கு மாறான தகவல்கள் பல பரவி வருகின்றன. குறிப்பாக உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் ராமரின் உருவம் ஜொலிக்க வைக்கப்பட்டது என படங்கள் வெளியாகியிருந்தன. இதன் உண்மை தன்மை குறித்து விவாதங்கள் எழுந்திருக்கின்றன.
ராமர் பிறந்ததாக நம்பப்படும் அயோத்தியில் அவருக்கான கோயிலை கட்ட கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள் என பிரமாண்டமாக ரூ.1,100 கோடியில் பாரம்பரிய நாகரா பாணியில் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோயிலின் பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று பால ராமர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ராமரின் சிலையின் பீடம் 3 அடி உயரத்தைக் கொண்டது. இச்சிலை மக்ரானா மாா்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது. ராமர் சிலையை பிரதிஷ்டை செய்த பிரதமர் நரேந்திர மோடி, 'இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம்' என்று கூறியுள்ளார்.
கும்பாபிஷேகத்தை நேரலையில் கண்டுகளிக்க நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கோயில்களில் எல்இடி திரை அமைக்கப்பட்டு நேரலை செய்யப்பட்டது. பாஜக ஆளும் மாநிலங்களில் நேற்று பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தினந்தோறும் சுமார் 3 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ராமர் கோயில் கும்பாபிஷேகம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் சில தவறான தகவல்கள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான துபாயில் உள்ள உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில், ராமரின் உருவம் ஜொலிப்பதை போன்று புகைப்படங்கள் பரவின. பொதுவாக பெரிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படங்கள் தங்கள் படத்தின் புரமோஷனுக்காக, படத்தின் பெயர், ஹீரோவின் உருவம் போன்றவற்றை இப்படி ஜொலிக்க வைப்பார்கள். அந்த வகையில் நேற்று ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றதால், ராமரின் உருவம் புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் ஜொலிக்க வைக்கப்பட்டது என்று கூறி புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வேகமாக ஷேர் செய்யப்பட்டது.
நெட்டிசன்களை தாண்டி, ஒரு சில முன்னணி செய்தி ஊடகங்களே இந்த படத்தை பகிர்ந்திருந்தன. இந்நிலையில் இது தொடர்பாக உண்மை கண்டறியும் ஊடகங்கள் சோதனை செய்ததில் உண்மை வெளிவந்திருக்கிறது. அதாவது நேற்றிரவு புர்ஜ் கலிஃபாவில் ராமரின் உருவம் எதுவும் புரொஜக்ஷன் செய்யப்படவில்லை.

Fact Check
வெளியான செய்தி
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்ற நிலையில், இதற்காக துபாயின் புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் ராமரின் உருவம் ஜொலிக்க வைக்கப்பட்டது.
முடிவு
நேற்று புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் ராமர் உருவம் ஏதும் ஜொலிக்கவைக்கப்படவில்லை. டிஜிட்டல் முறையில் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் பரவி வருகிறது.
ரேட்டிங்
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications