"ஐஐடி மாடல்".. ஜூலை 1 முதல் நாடு முழுக்க கொரோனா லாக்டவுனா?.. "கிளப்பிவிட்ட" கும்பல்.. உண்மை என்ன?
டெல்லி: இந்தியாவில் நாளையில் இருந்து ஜூலை 31 வரை தேசிய அளவில் லாக்டவுன் போடப்படும் என்று பொய்யான செய்தி இணையத்தில் வைரலாகிக் கொண்டு இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது கேஸ்கள் பெரிய அளவில் குறைந்துள்ளது. தினசரி கேஸ்கள் 50 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளது.
இந்தியாவில் கொரோனா காரணமாக 3,03,67,056 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,35,280 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 2,94,21,314 குணமடைந்துள்ளனர். 3,98,547 பேர் இந்தியாவில் பலியாகி உள்ளனர்.

கேஸ்கள்
இந்தியாவில் கேஸ்கள் குறைந்துள்ள நிலையில் விரைவில் மூன்றாம் அலை ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை முடிந்து 8 வாரங்களில் மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்புள்ளது என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால் இது இரண்டாம் அலையை போல தீவிரமாக இருக்காது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

மூன்றாம் அலை
இந்த நிலையில் மூன்றாம் அலை காரணமாக இந்தியாவில் ஜூலை 1 முதல் ஜூலை 31 வரை தேசிய அளவில் முழு லாக்டவுன் போடப்படுவதாகவும், இது தொடர்பாக பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும் இணையத்தில் பொய்யான செய்தி பரவி வருகிறது. ஐஐடி கான்பூரில் நடத்திய கொரோனா சோதனை மாடலில் லாக்டவுன் குறித்து பரிந்துரை செய்துள்ளதாகவும்.

நிலை
ஜூலை 15ல் கொரோனா மூன்றாம் அலை தாக்கும் என்று இந்த ஐஐடி மாடல் கூறுவதாகவும் இணையத்தில் தவறான தகவல் பரவிக்கொண்டு இருக்கிறது. ஆனால் இணையத்தில் பரவும் இந்த செய்தி பொய்யானது ஆகும். ஐடிடி கான்பூர் லாக்டவுன் குறித்து எந்த பரிந்துரையும் செய்யவில்லை.

லாக்டவுன்
அதேபோல் மத்திய அரசும் லாக்டவுன் போடுவது குறித்த அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. ஜூலை மாதத்தில் தேசிய அளவில் லாக்டவுன் போடுவதற்கான திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. இணையத்தில் பரவும் இந்த செய்தி முழுக்க முழுக்க பொய்யானது ஆகும்.

Fact Check
வெளியான செய்தி
இந்தியாவில் நாளையில் இருந்து ஜூலை 31 வரை தேசிய அளவில் லாக்டவுன் போடப்படும் என்று செய்தி இணையத்தில் வைரலாகிக் கொண்டு இருக்கிறது.
முடிவு
மத்திய அரசும் லாக்டவுன் போடுவது குறித்த அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. ஜூலை மாதத்தில் தேசிய அளவில் லாக்டவுன் போடுவதற்கான திட்டம் எதுவும் அரசிடம் இல்லை.
ரேட்டிங்
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications