Fact check: இந்து சமய அறநிலையத்துறை கோயில் வளாகத்தில் பிரியாணி கடை இயங்குகிறதா? உண்மை என்ன?
சென்னை: இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயிலில் "அல் பிஸ்மி பிரியாணி கடை" செயல்பட்டு வருவதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இது வதந்தி என தமிழக அரசின் உண்மைச் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. இதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவிலில் அல் பிஸ்மி பிரியாணி கடை செயல்படுகிறது என ஒரு புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்தப் பதிவுகளில் ஏராளமானோர், திமுக அரசையும், அறநிலையத்துறையையும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

பரவிய வதந்தி: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயிலில் பிரியாணி கடை செயல்பட்டு வருவதாகப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?: இது முற்றிலும் பொய்யான தகவல் என தமிழக அரசின் உண்மைச் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. இந்தப் புகைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது சென்னை மாதவரத்தில் அமைந்துள்ள தனியார் கோயிலாகும். இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமானது அல்ல.
இந்தக் கோயிலைச் சுற்றி கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அதில் ஒரு கடையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரியாணி கடை இருந்துள்ளது. படத்தில் இடம்பெற்ற அந்த பிரியாணி கடையும் தற்போது அங்குச் செயல்படவில்லை. வதந்தியைப் பரப்பாதீர்! என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
மேலும், மாதவரத்தில் அந்தக் கோவில் வளாகத்தின் தற்போதைய புகைப்படத்தையும் இதற்கு ஆதாரமாக வெளியிட்டுள்ளது உண்மை சரிபார்ப்பகம். அந்த இடத்தில் தற்போது டீ மற்றும் ஜூஸ் கடை உள்ளது.

Fact Check
வெளியான செய்தி
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோவிலில் அல் பிஸ்மி பிரியாணி கடை செயல்படுகிறது என ஒரு புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.
முடிவு
இந்தக் கோவில் இந்து சமய அறநிலையத்துக்கு சொந்தமானது அல்ல. தனியாருக்கு சொந்தமான அந்தக் கோவிலின் முன்பு பிரியாணி கடை இருந்த நிலையில், தற்போது அங்கு பிரியாணி கடை இல்லை.
ரேட்டிங்
-
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications