Fact Check: சென்னை மெரினா கடற்கரைக்குள் நுழைய ரூ 30 கட்டணம்? வெளியாகும் செய்தி உண்மையா?
சென்னை: சென்னை மெரினா கடற்கரைக்கு வருவோரிடம் இருந்து ரூ 30 நுழைவுக் கட்டணம் வசூலிக்க முடிவு என வதந்தி பரப்பப்படுவதாக தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது.

ஆசியாவிலேயே மிக நீண்ட கடற்கரை மெரினா கடற்கரையாகும். இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். அது போல் பண்டிகை, விடுமுறை காலங்களில் லட்சக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள்.
இங்கு காலை வேளையில் நடைப்பயிற்சி செய்யவும் ஏராளமானோர் வருகிறார்கள். அது போல் கடலின் மணற்பரப்பில் அமர்ந்து யோகா, தியானம் செய்யவும் வருகிறார்கள். இன்னும் பலர் மாலை வேளைகளில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு விளையாட வருகிறார்கள்.
சிறு குழந்தைகள்
அப்படியே சிறு குழந்தைகள் என்றால் அவர்களுக்கு சாப்பாடும் கொண்டு வந்துவிட்டு அதை விளையாட்டு காட்டியபடியே ஊட்டிவிடுகிறார்கள். இதற்காக மெரினாவுக்கு வரும் மக்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. அது போல் தற்போது கிரிக்கெட் போட்டிகள் எல்இடி திரையில் வைத்து ஒளிபரப்பப்படுகின்றன. இதனால் ஏராளமான ரசிகர்கள் அமர்ந்து பார்த்து வருகிறார்கள்.
மெரினா கடற்கரை
இந்த நிலையில் மெரினா கடற்கரையில் நீலக் கொடி (blue flag) கடற்கரை திட்டத்தின் கீழ் ரூ 6 கோடியில் மேம்பாட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. எனவே 250 ஏக்கர் நீளமுள்ள மெரினா கடற்கரையில் 50 ஏக்கர் நிலத்தை சென்னை மாநகராட்சி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.
சாய்வு இருக்கை
இங்கு சாய்வு இருக்கைகள், சிற்றுண்டி கடைகள், ஜிம், தோட்டம், கழிவறை உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன. அது போல் சர்வீஸ் லேனிங்கில் பார்க்கிங் வசதியும் அமைக்கப்படுகிறது. மேலும் ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படவுள்ளது.
இந்த பணிகள் எல்லாம் மே மாதத்திற்குள் முடியும் என்கிறார்கள். இந்த கடற்கரை 5 பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றாக புதுப்பிக்கப்படும் என்றும் மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
25 தொழிலாளர்கள்
கடற்கரையை கண்காணிக்க தனியார் ஒப்பந்ததாரர் மூலம் 25 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கடற்கரையை கண்காணிக்கும் செலவு, ஊழியர்களுக்கான ஊதியம், இயந்திரங்கள் உள்பட ரூ 6 லட்சம் செலவாகும் என சொல்லப்படுகிறது.
மெரினா கடற்கரைக்கு கட்டணம்
இந்த செலவுகளை ஈடுகட்ட மெரினா கடற்கரைக்கு வருவோரிடமும் பணம் வசூலிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த நிலையில் இதை சென்னை மாநகராட்சி மறுத்துள்ளது. சென்னை மாநகராட்சி வருவாய் அதிகம் உள்ள மாநகராட்சி என்பதால் பராமரிப்பு பணிகளுக்கான கட்டணத்தை மாநகராட்சியே ஈடு செய்யும் என்பதால் கட்டணம் வசூலிக்கப்படாது என சென்ன மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்தும் மீண்டும் மீண்டும் மெரினாவுக்குச் செல்ல கட்டணம் என்பது போல் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதை தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பு அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
Fact Check
வெளியான செய்தி
சென்னை மெரினாவுக்கு வருவோரிடம் கட்டணம் வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முடிவு
மெரினா கடற்கரை செல்லக் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவல் தவறானது. நீலக் கொடி கடற்கரைத் திட்டத்தின் கீழ் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது. சென்னை மாநகராட்சியே கடற்கரைப் பராமரிப்பு பணிகளுக்கான கட்டணத்தை செலுத்தும் என மாநகராட்சி ஆணையர் விளக்கமளித்துள்ளார்.
ரேட்டிங்
False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
-
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது












Click it and Unblock the Notifications