1990-2021 வரை பணியாற்றியவர்களுக்கு ரூ.12 லட்சம் கிடைக்குமாம்.. பரவும் போலி செய்தி
சென்னை: 1990 முதல் 2021வரை பணியாற்றியவர்களுக்கு மத்திய அரசின் தொழிலாளர் அமைச்சகம், ரூ .12 லட்சம் வழங்குவதாக ஒரு வெப்சைட்டில் தகவல் இடம் பெற்று அது சிலரால் பரப்பப்படுகிறது. ஆனால் அது போலி தகவல்.
1990 மற்றும் 2021ம் ஆண்டுக்கு இடையில் நிறுவனங்களில் பணியாற்றியவர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திலிருந்து ரூ .12 லட்சம் திரும்பப் பெற உரிமை உண்டு என்று குறிப்பிட்ட வெப்சைட் கூறுகிறது. உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் அது கூறுகிறது.

மேலும், அந்த வெப்சைட் மூன்று எளிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி கேட்கிறது. உங்கள் பாலின விவரங்களைக் கேட்கிறது.
இந்த செய்தி முற்றிலும் போலியானது. மத்திய அரசு ஊழியர்களுக்காக அரசு அத்தகைய அறிவிப்பை வெளியிடவில்லை. இதுபோன்ற ஏதாவது அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளதா என்பதை நாங்கள் கூகுளில் சோதித்தோம். அத்தகைய அறிவிப்பை நாங்கள் காணவில்லை.
அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தால், அது பெரிய அளவுக்கான செய்திகளை உருவாக்கியிருக்கும். மேலும், அனைத்து முக்கிய செய்தி நிறுவனங்களாலும் வெளியிடப்பட்டிருக்கும்.
எனவே இதுபோன்ற போலி செய்திகளில் ஜாக்கிரதையாக இருங்கள். இதுபோன்ற எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://labour.gov.in. இந்த இணையதளத்தில் மட்டுமே அப்டேட்களை பின்பற்றுங்கள் மற்றும் இதுபோன்ற போலி தளங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்.

Fact Check
வெளியான செய்தி
சொல்லப்படுவது: 1991-2021 வரை பணியாற்றிய ஊழியர்களுக்கு அரசு ரூ .12 லட்சம் அளிக்கிறது
முடிவு
கண்டறிந்தது: இந்த தகவல் போலியானது. அரசாங்கம் அத்தகைய அறிவிப்பை வெளியிடவில்லை
ரேட்டிங்
-
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
சென்னையில் எந்த பொண்டாட்டியும் இப்படி ஏமாத்தக்கூடாது.. சினிமாவையே மிஞ்சும் சம்பவம் -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications