அனைத்து பயணிகள் ரயில் சேவையும் விரைவில் தொடங்குகிறதா? நம்பாதீங்க மக்களே
டெல்லி: அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் விரைவில் தொடங்கும் என்று ஒரு வதந்தி வேகமாக பரவி வருகிறது. இந்த பொய் செய்தி பல முறை பரப்பப்பட்டது, இதனால் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படுமா என்று பல நபரும் கேட்டு வருகிறார்கள். மக்கள் யாரும் இந்த பொய் செய்தியை நம்ப வேண்டாம்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து அரசாங்கம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. மே 3 வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் மே 3ம் தேதிக்கு பிறகு ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்தும் அரசு எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை.. விமான சேவைகள் தொடங்குவது குறித்தும் இதுவரை முடிவு எடுக்கவில்லை.
ரயில் மற்றும் விமான சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்தியுள்ளது.
இன்று நடைபெற்ற முதலமைச்சர்களுடன் பிரதமர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், மாநிலங்களுக்கு இடையேயான பயணம் தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் என்று பெரும்பாலான மாநிலங்கள் கருத்து தெரிவித்தன. பொருளாதாரம் புத்துயிர் பெற வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர். எனினும் மத்திய அரசு அனைத்து மாநிலங்களுடன் கலந்தாலோசித்து மாநிலங்களுக்கு இடையேயான பயண விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்றார்கள்.
எனவே பொதுமக்கள் யாரும் மீண்டும் ரயில்கள் மற்றும் விமான சேவைகள் தொடங்கப்படும் என்று பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications