இந்த கலவரம் மேற்கு வங்கத்தில் நடக்கவில்லை.. பாகிஸ்தானில் நடந்தது.. வைரல் போட்டோவின் பின்னணி

மேற்கு வங்க கலவரத்தில் பட்டியலினத்தவர்கள் தாக்கப்பட்டதாக பொய்யான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்க கலவரத்தில் பட்டியலினத்தவர்கள் தாக்கப்பட்டதாக பொய்யான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது.

கொரோனா நாடு முழுக்க பரவி வரும் நிலையில் இன்னொரு பக்கம் வதந்திகளும் தீவிரமாக பரவி வருகிறது. அந்த வகையில் மேற்கு வங்கத்தில் இருக்கும் ஹூக்ளி பகுதியில் கலவரம் நடப்பதாக நேற்று இணையத்தில் செய்தி வெளியானது.

Fake News Buster: Images circulating as West Bengal riot are really from Pakistan

இடைநிலை ஜாதியினருக்கும், பட்டியலினத்தவர்களுக்கும் இடையே கலவரம் நடப்பதாக செய்திகள் வெளியானது. இது தொடார்பாக புகைப்படங்களும் இணையத்தில் வெளியானது. வீடுகள் இடிக்கப்பட்ட புகைப்படம், பெண்களின் மண்டை உடைக்கப்பட்ட புகைப்படம் ஆகியவை வெளியானது.

இது ஹூக்ளி கலவர புகைப்படம் என்று கூறப்பட்டது. ஆனால் உண்மையில் இந்த புகைப்படம் ஹூக்ளியை சேர்ந்தது இல்லை. இது பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும். கடந்த மே 11ம் தேதி பாகிஸ்தான் சிறுபான்மையினர் பக்கம் ஒன்று இந்த புகைப்படத்தை வெளியிட்டது.

அங்கு கலவரம் ஒன்றில் இந்துக்கள் தாக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும். அந்த பெண் அங்கு கலவரக்காரர்களால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அங்கு இந்த கலவரத்தில் 21 வீடுகள் கொளுத்தப்பட்டது. இந்த மத கலவரம் தொடர்பாக தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த கலவர புகைப்படத்தைதான் தற்போது பொய்யாக மேற்கு வங்க கலவரத்தில் பட்டியலினத்தவர்கள் தாக்கப்பட்டதாக இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.இந்த புகைப்படங்களை மக்கள் யாரும் நம்ப வேண்டாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+