என்னது மாணவர்களுக்கு மத்திய அரசு இலவச ஸ்மார்ட் போன் தரப்போகிறதா? எல்லாமே பொய்
டெல்லி: மாணவர்களுக்கு மத்திய அரசு இலவசமாக ஆன்ட்ராய்டு செல்போன்களை வழங்கப் போவதாக ஒரு பொய்யான தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் செய்திகளில் ஒன்றுதான் மாணவர்களுக்கு மத்திய அரசு இலவசமாக செல்போன்களை வழங்கப் போகிறது என்பது. கொரோனா லாக்டவுன் காலத்தில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதால் இலவச செல்போன்களை மத்திய அரசே வழங்கப் போகிறதாம்.

இப்படித்தான் அந்த செய்தி வைரலாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இத்துடன் நிற்காமல் இன்னொரு தகவலையும் இதில் சேர்த்துள்ளனர்.
உங்களுக்கு இலவச செல்போன் வேண்டும் எனில் குறிப்பிட்ட முகவரியில் பதிவு செய்ய வேண்டும் என்கிற லிங்கும் இணைத்துவிடுகின்றனர். அதாவது உங்களைப் பற்றிய தகவல்களை திருடுவதற்காகத்தான் இப்படியான வேலையை செய்கிறார்கள்.
இத்தகைய ஒரு அறிவிப்பே பொய்யானது; போலியானது என மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. மத்திய அரசு இதுபோல இலவச செல்போன் வழங்கும் அறிவிப்பு எதனையுமே வெளியிடவில்லை என கூறியுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
மாணவர்களுக்கு மத்திய அரசு இலவச செல்போன்கள் வழங்குகிறது
முடிவு
மாணவர்களுக்கு இலவச செல்போன் வழங்கும் திட்டத்தை அறிவிக்கவில்லை மத்திய அரசு












Click it and Unblock the Notifications