காயத்ரி ரகுராம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டாரா? சமூக வலைதளங்களில் பரவும் அறிக்கை உண்மையா?
சென்னை: அதிமுகவில் மகளிரணி துணை செயலாளர் காயத்ரி ரகுராம் அண்மையில் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான போராட்டத்தில் பங்கேற்றார். மேடையில் அவர் ஓரங்கட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அதிமுகவில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கம் செய்யப்பட்டதாக சமூக வலைதளத்தில் எடப்பாடி பெயரில் அறிக்கை ஒன்று உலாவுகிறது. அது உண்மையா இல்லை என்று பார்ப்போம்.
நடிகையும், நடனக் கலைஞருமான காயத்ரி ரகுராம் பல ஆண்டுகளாக பாஜகவில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். தமிழக பாஜகவில் வெளிநாடு மற்றும் பிற மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவு தலைவராகவும் காயத்ரி ரகுராம் இருந்து வந்தார். இந்தச் சூழலில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜகவில் இருந்து விலகினார். விசாரணைக்கு வாய்ப்பு கொடுக்காத, பெண்களுக்கு சம உரிமையும் மரியாதையும் கொடுக்காத காரணங்களுக்காக தமிழக பாஜகவில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அப்போது அறிவித்திருந்தார். பாஜகவில் இருந்து விலகிய பின்னர் காயத்ரி ரகுராம் சமூக வலைதளங்களில் தமிழக பாஜக நிர்வாகிகளையும், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையையும் கடுமையாக விமர்சித்து வந்தார். இதற்கு பாஜகவினரும் கடும் எதிர்வினையாற்றினார்கள்.

தொடர்ந்து நடிகை காயத்ரி ரகுராம் கடந்த ஆண்டு அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். இதையடுத்து நடிகை காயத்ரி ரகுராமுக்கு அதிமுகவின் மகளிர் அணி துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. காயத்ரி ரகுராம் அதிமுகவில் சார்பில் சமூக வலைதளங்களில் தீவிரமாக களமாடி வந்தார். அவ்வப்போது அதிமுக சார்பில் நடத்தப்படும் போராட்டங்களில் பங்கேற்று வந்தார்.
அப்படித்தான் அதிமுகவில் மகளிரணி துணை செயலாளர் காயத்ரி ரகுராம் அண்மையில் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான போராட்டத்தில் பங்கேற்றார். மேடையில் அவர் ஓரங்கட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதிமுக நிர்வாகிகள் சிலர் பேசிய வார்த்தைகள் அவருக்கு பிடிக்கவில்லை என்றும், மேடையில் அவரை சிலர் அவமதித்ததாகவும் புகார் எழுந்தது.அதேநேரம் உட்கட்சி பிரச்சனையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று அப்போது காயத்ரி ரகுராம் கூறினார்.
இந்த சூழலில் அதிமுகவில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கம் என எடப்பாடி பழனிசாமி கையெழுத்து போட்ட அதிமுக லெட்டர் பேட் அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த அறிக்கையில் கட்சியின் கொள்கைக்கும், குறிக்கோளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை பாஜகவினர் பலர் பரப்பி வருகிறார்கள்.
இதை கண்டு கொதித்து போன காயத்ரி ரகுராம், இந்த அறிக்கை போலியானது என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும் அந்த போலி அறிக்கையை டேக் செய்துள்ள காயத்ரி ரகுராம் வெளியிட்ட பதிவில், "அண்ணாமலை வார்ரூமிடம் அழ செய்தாய். அய்யா எடப்பாடியார் கடிதத் தலைப்பை தவறாகப் பயன்படுத்தி உங்களுக்காக அவர்கள் ஆபாச குற்றம் செய்ய தொடங்கினர். இது உங்கள் ஆலோசனையுடன், வழிகாட்டுதலின் படியா? இது குற்றம் என்று அவர்களுக்குத் தெரியாதா? உன் வீரம் என்னை நோக்கி மட்டுமே, திமுகவுடன் இல்லை. புல் தடுக்கி பயில்வான் செயல். என்னை அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். அது நடக்காது. உங்கள் வார்ரூம் ஜோக்கர்களுக்காக உங்களுக்கு நீங்களே சவுக்கடி கொடுக்க வேண்டும். நான் அதை தலைகீழாக செய்வேன், நான் ஜோக்கர்களுக்கு பயப்படவில்லை என்று சொல்லுங்கள். உங்கள் சில்லறை யோசனையால் எந்த பயனும் இல்லை" இவ்வாறு காயத்ரி ரகுராம் ஆவேசமாக கூறியுள்ளார்.
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]

Fact Check
வெளியான செய்தி
அதிமுகவில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்து போட்ட அதிமுக லெட்டர் பேட் அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
முடிவு
அதிமுக லெட்டர் பேடில் எடப்பாடி பழனிசாமி பெயரில் வெளியான அறிக்கை போலியானது என்பது காயத்ரி ரகுராமின் பதிவினை அடுத்து தெரியவந்துள்ளது. அதிமுக தலைமையில் இருந்து அப்படி எந்த அறிக்கையும் வெளியகவில்லை என்பது
ரேட்டிங்
-
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications