Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை எய்ம்ஸ் தாமதத்துக்கு தமிழ்நாடு அரசு காரணமில்லை.. உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தற்போது தான் தமிழக அரசாங்கம் கொடுத்துள்ளது என்றும், தமிழ்நாடு அரசே எய்ம்ஸ் தாமதத்துக்கு காரணமென்று சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல் பொய்யானது எனறு தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது.

மதுரை பெரியார் நிலையத்தில் இருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடியே நேரில் வந்து அடிக்கல் நாட்டினார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை ரூ.1977.8 கோடி பட்ஜெட்டில் அமைக்க ஜப்பான் நாட்டு ஜெய்கா நிதிநிறுவனத்துடன், கடந்த 2021ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பீட்டில் 82% சதவீத தொகையான ரூ.1627.70 கோடி, ஜெய்கா நிறுவனம் மூலம் கடனாக பெறப்படும் எனவும், மீதமுள்ள மீதமுள்ள 18% தொகையை மத்திய அரசு வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

Is the Tamil Nadu government responsible for the delay in the construction of AIIMS Madurai

ஆனால் கடந்த ஐந்து வருடங்களில் சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்டது. வேறெந்த கட்டுமான பணிகளும் நடைபெறாமல் இருந்த நிலையில், கடந்த 17 ஆகஸ்ட் 2023 அன்று மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டர் அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. ஜெய்கா நிறுவனத்திடமிருந்து கடன் தொகை வரப்பெற்றுள்ளதாக அறிவித்த எய்ம்ஸ் நிர்வாகம், அடுத்த 33 மாதங்களில் விரைந்து மருத்துவமனை கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது..

இதற்கிடையே, ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மதுரை எய்ம்ஸ் மாணவர்களுக்கு மதுரை அருகே, திருமங்கலம் அரசு மருத்துவமனையில் செய்முறை வகுப்பு நடத்த திட்டமிட்டு விடுதி, வகுப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் வாடகை கட்டிடம் பிடிக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

மறுபக்கம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகளுக்கான தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் முதற்கட்ட பணிகள் கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கியது. எய்ம்ஸ் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் படங்கள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் நீண்டகாலம் கழித்து கட்டுமான பணிகள் தொடங்கிய நிலையில் இதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை என தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியானது. இதையடுத்து கடந்த 2-ம் தேதி சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆய்வறிக்கையை தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் எய்ம்ஸ் நிர்வாகம் சமர்ப்பித்ததது. இந்தத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என கடந்த 10-ம் தேதி சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு பரிந்துரை வழங்கியது. அதன்படி, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதியை தமிழ்நாடு அரசு சமீபத்தில் வழங்கியது.

இதையடுத்து தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. எல் & டி நிறுவனம் சார்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தினை சமன் செய்யும் வாஸ்து பூஜை போடப்பட்டிருக்கிறது. முதல் கட்டமாக மருத்துவமனை, அவசர சிகிச்சை பிரிவு, ஹாஸ்டல் ஆகியவை கட்டுப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பொய்: இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தற்போது தான் தமிழக அரசாங்கம் கொடுத்துள்ளது என்றும், தமிழ்நாடு அரசே எய்ம்ஸ் தாமதத்துக்கு காரணமென்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வேகமாக பரவியது.

உண்மை என்ன: இது தொடர்பாக தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு வெளியிட்ட பதிலில், இது முற்றிலும் பொய்யான தகவல். 02,05.2024 அன்று எய்ம்ஸ் கட்டுமானத் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வேண்டி எய்ம்ஸ் நிர்வாகம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையிடம் விண்ணப்பம் சமர்பித்தது. இதையடுத்து 20.05,2024 அன்று தமிழ்நாடு அரசு எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியிருக்கிறது. மதுரை எய்ம்ஸ் தாமதத்துக்கு தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் அனுமதிடியே காரணரணம் எனப்ப் பரவும் தகவல் பொய்யானது. வதந்திகளை நம்பாதீர்" இவ்வாறு தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு கூறியுள்ளது.

Fact Check

வெளியான செய்தி

மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தற்போது தான் தமிழக அரசாங்கம் கொடுத்துள்ளது என்றும், தமிழ்நாடு அரசே எய்ம்ஸ் தாமதத்துக்கு காரணமென்று என பரவும் தகவல் பரவுகிறது

முடிவு

மே 2ல் சுற்றுச்சூழல் அனுமதி வேண்டி எய்ம்ஸ் விண்ணப்பம் சமர்பித்தது. இதையடுத்து மே 20ல் தமிழக அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியிருக்கிறது என உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம்

ரேட்டிங்

Mostly False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+