Fact check: கேலோ இந்தியா போட்டிக்கு தமிழக அரசு கேட்டது வெறும் ரூ.10 கோடிதானா? உண்மை என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேலோ இந்தியா போட்டிக்காக மத்திய அரசிடம், தமிழக அரசு வெறும் ரூ.10 கோடிதான் கேட்டதாகவும், எனவே அந்த தொகையை மட்டும் மத்திய அரசு விடுவித்ததாகவும் சோஷியல் மீடியாக்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் இது குறித்த உண்மை தகவல்கள் வெளியாகியுள்ளது.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி முதன் முறையாக இந்த முறை தமிழ்நாட்டில் நடத்தப்பட்டது. கடந்த ஜனவரியில் 6வது போட்டி சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெற்றது. ஜனவரி 19ம் தேதி முதல் 31ம் தேதி வரையில் இப்போட்டிகள் நடைபெற்றன. பல்வேறு வகையிலான விளையாட்டு பிரிவுகளில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மொத்தம் 13 நாட்கள் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

Tamil Nadu

இதில் தமிழகம், 38 தங்கம், 21 வெள்ளி மற்றும் 39 வெண்கலம் என மொத்தமாக 98 பதக்கங்களை வென்று இரண்டாம் இடம் பிடித்தது. முதல் இடத்தை மகாராஷ்டிராவும், மூன்றாம் இடத்தை ஹரியானாவும் பிடித்திருந்தன.

போட்டி கடந்த ஜனவரி மாதமே முடிந்திருந்தாலும் இது குறித்த சர்ச்சைகள் தற்போது வரை நீண்டு வருகின்றன. குறிப்பாக இந்த போட்டி உத்தரப் பிரதேசத்தில் நடத்தப்பட்டபோது ரூ.400 கோடி வாரி வழங்கப்பட்டது என்றும், அதே தமிழ்நாட்டில் நடத்தப்பட்டபோது குறைவான நிதி ஒதுக்கியதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதியநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

"இதுகுறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவு: கேலோ இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது முதல் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு நிதி வழங்கப்பட்டுள்ளது என மத்திய விளையாட்டு மற்றும் இளைஞா் நலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள புள்ளிவிவரம், ஓரவஞ்சனையின் மொத்த வடிவம் மத்திய பாஜக அரசு என்பதற்கான சான்றாக உள்ளது.

கடந்த 7 ஆண்டுகளில், பாஜக ஆளும் உத்தர பிரதேசத்துக்கும், குஜராத்துக்கும் தலா ரூ.400 கோடிக்கு மேல் அளித்து தாராளம் காட்டியிருக்கிற மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு மிகக் குறைவான நிதியை மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. உலக செஸ் போட்டி, ஆசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப், தேசிய சீனியா் ஆடவா் ஹாக்கி சாம்பியன்ஷிப், கேலோ இந்தியா 2023 உள்ளிட்ட பல்வேறு சா்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்தியிருக்கிறோம்.

சா்வதேச அரங்கில் இந்திய விளையாட்டுத் துறையின் முகமாக தமிழ்நாடு மாறி வருகிறது. விளையாட்டுத் துறையில் இத்தனை ஆக்கபூா்வமாக செயல்படும் தமிழ்நாட்டுக்கு குறைவான நிதியை ஒதுக்கியிருப்பதை மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டாா்கள். இது தமிழ்நாட்டு விளையாட்டு வீரா்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி. தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவதில் தொடா்ந்து பாரபட்சம் காட்டும் பாஜகவின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

வாக்களிக்காத மாநிலங்களுக்கு எதிரான மனநிலையை மத்திய பாஜக அரசு உடனடியாக கைவிட வேண்டும்" என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இப்படி இருக்கையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்காக தமிழ அரசு வெறும் ரூ.10 கோடி மட்டுமே கேட்டதாகவும், எனவேதான் ரூ.10 கோடியை மட்டும் மத்திய அரசு வழங்கியதாகவும் சோஷியல் மீடியாக்களில் தகவல்கள் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இதில் உண்மை இல்லை என்று தெரியவந்திருக்கிறது.

அதாவது, தமிழ்நாட்டில் 'கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023' நடத்த ரூ.25 கோடி வழங்க வேண்டும் என்று ஒன்றிய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறைக்கு தமிழ்நாடு அரசு கோரியிருந்தது. அதேபோன்று, போட்டிகள் தொடர்பாக மைதானங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.69.7 கோடி கோரியும் தமிழ்நாடு அரசால் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Fact Check

வெளியான செய்தி

கேலோ இந்தியா விளையாட்டை தமிழ்நாட்டில் நடந்த ரூ.10 கோடி மட்டுமே தமிழக அரசால் கேட்கப்பட்டது. அதனால்தான ரூ.10 கோடியை மட்டும் மத்திய அரசு ஒதுக்கியது.

முடிவு

தமிழ்நாட்டில் 'கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023' நடத்த ரூ.25 கோடி வழங்க வேண்டும் என்றும், மைதானங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.69.7 கோடி கோரியும் தமிழ்நாடு அரசால் கடிதம் அனுப்பப்பட்

ரேட்டிங்

Mostly False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+