நாடார் சமுதாய மக்கள் தமிழர்களே அல்ல என்று ஹெச் ராஜா பேசினாரா? தமிழிசை கண்டித்தாரா.. உண்மை என்ன?
சென்னை: நாடார் சமுதாய மக்கள் தமிழர்களே அல்ல என்று பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா பேசியதாக சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதேபோல் எக்ஸ் வலைத்தளவாசி ஒருவர், தனது பக்கத்தில் நியூஸ் கார்ட் ஒன்றை பதிவிட்டார். அதில் நாடார்கள் தமிழர்கள் அல்ல என எச்.ராஜா பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன். என் மீதும் தமிழிசை சவுந்தரராஜன் மீதும் எச் ராஜாவுக்கு இருக்கும் கோவத்தை ஒரு சமூகத்தின் மீதே காட்டுவது தவறு என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியதாக குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டுமே வதந்தி என்பது தெரியவந்துள்ளது. இதுபற்றி பார்ப்போம்.
ஒன்றிய எலி என்ற பெயரில் உள்ள வலைதள பயனர் ஒருவர் ஹெச் ராஜா பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதற்கு கேப்சனும் வெளியிட்டுள்ளார். அதில் ஹெச் ராஜா நாடார் சமுதாய மக்கள் தமிழர்களே கிடையாது என்று கூறியதாக கூறியுள்ளார். அதை நம்ப வைப்பதற்காக ஹெச் ராஜா பேசிய காணொளி ஒன்றை இணைத்துள்ளார். மேலும் தமிழிசை இப்படி நினைத்து தான் இந்திக்கு சப்போர்ட் செய்கிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் நாடார் சமுதாய மக்களை பாஜக இழிவுப்படுத்திவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த வீடியோவை உண்மை என்று நம்பி நேற்று முழுவதும் பலர் சமூக ஊடகங்களில் பரப்பி வருகிறார்கள்.

இதேபோல் ஆதரன் என்ற எக்ஸ் வலைத்தளவாசி ஒருவர், தனது பக்கத்தில் ஒரு நியூஸ் கார்ட் ஒன்றை பதிவிட்டார். அதில் "நாடார்கள் தமிழர்கள் அல்ல என எச்.ராஜா பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன். என் மீதும் தமிழிசை சவுந்தரராஜன் மீதும் எச் ராஜாவுக்கு இருக்கும் கோவத்தை ஒரு சமூகத்தின் மீதே காட்டுவது தவறு" என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியதாக குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு பதிவின் உண்மை தன்மையை அறிய விசாரித்தோம். குறிப்பிட்ட தனியார் சேனலில் கார்டு உள்ளதா என்று அதிகாரப்பூர்வ பக்கத்தில் போய் பார்த்தோம். அப்படி எந்த ஒரு பதிவும் இல்லை.. அதேபோல் ஹெச் ராஜா பேசியதை குறித்த வீடியோக்களையும் ஆய்வு செய்தோம்.
நாடார் சமுதாய மக்கள் தமிழர்களே அல்ல என்று ஹெச் ராஜா பேசியதாக பரவும் வதந்தி #hraja #bjp #nadar #factchecks pic.twitter.com/lkHP8WDk5D
— velmurugan (@velmurugantheni) March 25, 2025
அதில் ஹெச் ராஜா பேசியதை திரித்து வெளியிட்டிருக்கிறார்கள் என்பதும், பொன் ராதா கிருஷ்ணனன் கண்டனம் தெரிவித்ததாக பொய்யான கார்டு உருவாக்கி பதிவிட்டுள்ளார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.. ஹெச் ராஜா உண்மையில் என்ன பேசினார் என்றால், "சான் ஆப் தி திருநெல்வேலி என்ற புத்தகம் எழுதியிருக்கிறார்கள்.. அந்த புத்தகம் திருநெல்வேலி சாணார்கள் என்று தமிழிலும் வந்துள்ளது. அந்த புக்கத்தில் கால்டுவெல் சொல்கிறார்.. நாடார் சமுதாய மக்கள் தமிழர்கள் அல்ல என்று கூறுகிறார்.. ஏன் கால்டுவெல் அப்படி சொல்கிறார்.. ஏன் அவருக்கு அப்படி கோபம் வருகிறது என்றால்.. அவர் அங்கு வந்து திருநெல்வேலியில் இறங்கிய உடனேயே, பெரும்பான்மையாக இருந்த நம்முடைய நாடார் சமுதாய மக்களை மதம் மாறச்சொன்னார்.. ஆனால் அவர்கள் மதம் மாற மறுத்துவிட்டார்கள்.. அதற்காகவே அப்படி சொல்லியிருக்கிறார் கால்டுவெல் " இவ்வாறு ஹெச் ராஜா பேசியிருந்தார். ஆனால் இதனை சிலர் குறிப்பிட்ட வரிகளை மட்டும் வெட்டி ஹெச் ராஜாவிற்கு எதிராக வதந்தி பரப்பி வருகிறார்கள்..

Fact Check
வெளியான செய்தி
வெளியான செய்தி : நாடார் சமுதாய மக்கள் தமிழர்களே அல்ல என்று பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா பேசியதாக சமூக ஊடகங்களில் வீடியோ பரவி வருகிறது. அதேபோல் நாடார்கள் தமிழர்கள் அல்ல என எச். ராஜா பேசியதை வன்மையாக கண
முடிவு
முடிவு : மதம் மாறுவதை விரும்பாத நாடார்களை தமிழர்களே அல்ல என்று கால்டுவெல் கூறியதாக புத்தகத்தில் உள்ளது என்று ஹெச் ராஜா கூறியிருந்தார். அதேபோல் நாடார்களை இழிவுபடுத்தி விட்டதாக ஹெச் ராஜாவிற்கு பொன்னார












Click it and Unblock the Notifications