Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பைக் டாக்ஸிக்கு தடை விதிப்பா.. கொதிக்கும் பொதுமக்கள்.. அமைச்சர் சிவசங்கர் சொன்னது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறும் பைக் டாக்சி ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக வாகன சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேநேரம் பைக் டாக்ஸிக்கு தடை விதிக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மை என்று தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் பைக் டாக்ஸி இயங்கலாம் என்றும் விதிமீறல் கூடாது என்றும் அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, சேலம், மதுரை உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் பைக் டாக்ஸி சேவைகள் இயங்கி வருகிறது. ஆட்டோவில், காரில் சென்றால் பல மடங்கு கட்டணம் செலுத்த வேண்டியுள்ள நிலையில், பைக் டாக்ஸியில் சென்றால் மிக குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இதனால் தனி நபர்கள், பைக் டாக்ஸியை பெரிதும் விரும்புகிறார்கள். இதனால் தமிழ்நாடு முழுக்க பைக் டாக்ஸி சேவைக்கு பெரும் வரவேற்பு உள்ளது.

fact check bike taxi minister sivasankar

வேலையில்லாத பட்டதாரிகள், கல்லூரி மாணவர்கள், பகுதி நேர வேலை செய்வோர் போன்றோர் ரேபிடோ என்ற ஆப் மூலம் நடத்தப்படும் இந்த பைக் டாக்ஸி சேவையை இயக்கி வருகின்றனர். இந்த சேவை, சென்னை மற்றும் கோவையில் பெரிய அளவில் வளர்ந்துவிட்டது. மற்ற நகரங்களில் இன்னும் அந்த அளவிற்கு வளரவில்லை.. இந்த சூழலில் ஆட்டோ டிரைவர்கள் 'பைக் டாக்சி' சேவைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி , நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த நிலையில். தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை கமிஷனர் சுன்சோங்கம் ஜடக் சிரு அனைத்து மண்டல அதிகாரிகள் மற்றும் அனைத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு (ஆர்.டி.ஓ.க்கள்) சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார்.

அதில் அவர் கூறுகையில், "தமிழ்நாடு சாலை போக்குவரத்துத் தொழிலாளர் சங்கங்கள் சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவில், வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால் (பைக் டாக்சி) மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகள் பல்வேறு வழிகளில் மீறப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் விதிகளை அமலாக்குவதற்கும், சட்டப்படி தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சிறப்பு வாகன சோதனைகளை நடத்துமாறு கள அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், மண்டல வாரியாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் அறிக்கையை மறு உத்தரவு வரும் வரை தினமும் 7 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் நேற்று முதல் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் வாகன சோதனையை முடுக்கி விட்டு தீவிரப்படுத்தினார்கள். இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது ஒருபுறம் எனில் பைக் டாக்ஸிக்கு தடைவிதிக்கப்பட்டதாக செய்திகள் பரவின. அரசின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் கடுமையாக விமர்சித்தனர். பைக் டாக்ஸிக்கு தடை விதிப்பது நியாயமற்ற செயல் என்றும், ஒருவர் வந்தால், பைக் டாக்ஸி, இருவர் மூவர் என்றால் ஆட்டோ, நான்கு பேர் என்றால் கார் என்று சரியாகவே உள்ளது என்றும், ஆட்டோ கட்டணம் மக்களுக்கும் கட்டுப்படியாக வேண்டும்.. காலமாற்றத்தை ஏற்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். சமூக வலைதளங்களில் பலரும் ஆட்டோ ஓட்டுநர்களின் போராட்டத்தை கடுமையாக விமர்சித்தனர். பைக் டாக்ஸி சேவையை தடை செய்யக்கூடாது என்றும் குரல் எழுப்பினார்கள்.

இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பைக் டாக்ஸி சேவை குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், பைக் டாக்ஸியால் ஆட்டோ ஓட்டுநர்கள் அவர்களுடைய தொழிலுக்கு பாதிப்பாக உள்ளதாக கூறினார்கள். அதற்காக அவர்கள் போராட்டம், ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம. தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிகளை விதிமீறலில் ஈடுபடாமல் இயக்குவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு, நீதிமன்றம் ஆகியவை எந்த அடிப்படையில் சொல்கிறார்களோ, அந்த அடிப்படையில் இயங்க வேண்டிய சூழல் வரும்.

எனவே அதனை எதிர்நோக்கி அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்.. தமிழ்நாட்டில் பல்வேறு விஷயங்களில் தனித்துவமாக இருக்கிறோம்.. ஆம்னி பேருந்துகளையே எடுத்துக் கொண்டாலும் இந்தியா முழுவதும் இருக்கின்ற ஒரே நடைமுறைதான் தமிழ்நாட்டிலும் செயல்படுத்தப்படுகிறது.. ஆம்னி பேருந்துகள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் இயங்கக்கூடாது..

வாடகை ஒப்பந்தத்தில் இயங்கக்கூடிய ஊர்தியாகவே இருக்க வேண்டும்.. ஆனால் மக்கள் பயன்பாட்டிற்கு தேவைப்படுகின்ற இடங்களில் மக்கள் கூடுதலாக பயணிக்கின்ற நேரங்களில் நீதிமன்றத்தில் வழிகாட்டுதல்படி செயல்படுகிறோம்... எனவே இதையும் நீதிமன்றங்கள் என்ன வழிகாட்டுகிறதோ அதன்படி செயல்படுவோம்.. இப்போதைக்கு இயங்குகின்ற ஊர்திகள் (பைக் டாக்ஸிகள்) இயங்கலாம்.. விதிமீறல் இருக்கக்கூடாது என்பது தான் எதிர்பார்ப்பாக உள்ளது. இன்சூரன்ஸ் இருக்க வேண்டும். ஓட்டுநரிடம் லைசென்ஸ் இருக்க வேண்டும்" இவ்வாறு கூறினார்.

Fact Check

வெளியான செய்தி

தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிக்கு அரசு தடைவிதித்து உள்ளதாகவும், மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறும் பைக் டாக்சி ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டதாகவும் நேற்று ஊடகங்களில் செய்திகள் பர

முடிவு

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டி ஒன்றில், பைக் டாக்ஸி சேவைக்கு தடை இல்லை என்று தெளிவுப்படுத்தி உள்ளார். அதேநேரம் விதிமீறல் இருக்கக்கூடாது என்பது தான் எதிர்பார்ப்பாக உள்ளது. இன்சூரன்ஸ

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+