தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 28 ரூபாய் உயர்த்தப்படுமா? மத்திய அரசு விளக்கம்
டெல்லி: மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாக இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பைச் சரிசெய்ய பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ₹25 முதல் ₹28 வரை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்று கோடாக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸ் வெளியிட்டிருந்த செய்தி பொய் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது
கோடாக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸ் என்ற ஆய்வு நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில், உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் (குறிப்பாக மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாக), இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பைச் சரிசெய்ய பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ₹25 முதல் ₹28 வரை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்று குறிப்பிட்டிருந்தது.

ஏனெனில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 120 டாலரை நெருங்கியுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் ₹26-ம், டீசலுக்கு சுமார் ₹81-ம் இழப்பைச் சந்திப்பதாகக் கூறப்படுகிறது. தமிழகம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தல் முடிந்த பிறகு, இந்த விலையேற்றம் படிப்படியாக அமல்படுத்தப்படலாம் என்று கோடாக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸ் அறிக்கையில் கணித்திருந்தது.
ஆனால் இந்தச் செய்தி நேற்று காலையில் இருந்தே காட்டுத்தீ போல பரவியது. தேர்தலுக்காகவே விலையேற்றம் செய்யாமல் மத்திய அரசு தள்ளிப்போடுகிறதோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்தது. அத்துடன் மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் தேர்தலுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படும் என்று பரவிய செய்தி பெரும் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியது.
இந்நிலையில் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் இன்று அதிகாரப்பூர்வமாக ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. அதில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ₹25-28 உயர்த்தும் எண்ணம் அரசிடம் ஏதுமில்லை என்று மறுத்துள்ளது. இத்தகைய பொய் செய்திகள் மக்களிடையே தேவையற்ற பயத்தை உருவாக்கப் பரப்பப்படுபவை என்றும், இவை "தவறானவை மற்றும் திசைதிருப்பக்கூடியவை" என்றும் அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக சர்வதேச விலை உயர்ந்த போதும், இந்தியாவில் விலை உயராமல் அரசு கட்டுக்குள் வைத்துள்ளதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.

பரவிய செய்தி : ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாக இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பைச் சரிசெய்ய பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ₹25 முதல் ₹28 வரை உயர்த்த வேண்டிய கட்டாயம் என செய்திகள் வெளியானது.
உண்மை என்ன?
பெட்ட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ₹25-28 உயர்த்தும் எண்ணம் ஏதுமில்லை என்று மத்திய அரசு மறுத்துள்ளது. இத்தகைய பொய் செய்திகள் மக்களிடையே தேவையற்ற பயத்தை உருவாக்கப் பரப்பப்படுபவை என்று பெட்ரோலிய அமைச்சகம் கூறியுள்ளது

Fact Check
வெளியான செய்தி
ட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ₹25 முதல் ₹28 வரை உயர்த்தப்படும் என சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது..
முடிவு
சமூக ஊடகங்களில் பரவும் செய்தி தவறானது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ₹25-28 உயர்த்தும் எண்ணம் அரசிடம் ஏதுமில்லை என மத்திய அரசு மறுத்துள்ளது.
ரேட்டிங்
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications