சட்டுபுட்டுனு அள்ளிப் போடுங்க! தங்கத்தை வாங்கி குவிக்கும் ரிசர்வ் வங்கிகள்.. குறுக்கே வந்த மலேசியா!
சென்னை: உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார அபாயங்கள் அதிகரித்து வரும் சூழலில், பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களின் தங்க சேமிப்பை அதிகரிக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, முன்பு தங்கம் வாங்காத அல்லது நீண்ட காலமாக வாங்காமல் இருந்த மத்திய வங்கிகள் கூட தற்போது மீண்டும் தங்கத்தை சேமிக்கத் தொடங்கியுள்ளன என்று உலக தங்க கவுன்சில் ( World Gold Council - WGC) தெரிவித்துள்ளது.
உலகளாவிய ரிசர்வ் (சேமிப்பு) கொள்கைகளில் ஒரு பெரிய மாற்றம் நடைபெற்று வருவதாகவும், இதன் ஒரு பகுதியாக தங்கத்தின் முக்கியத்துவம் மீண்டும் அதிகரித்து வருவதாகவும் அந்த அமைப்பின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
குறிப்பாக அமெரிக்க டாலர் மீது மட்டும் சார்ந்து இருப்பதை குறைக்க வேண்டும் என்ற நோக்கமும், உலகளாவிய அரசியல் பதற்றங்கள் அதிகரிப்பதும் தங்க சேமிப்பை அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளதாக மதிப்பிடப்படுகிறது.

உலக பொருளாதார அபாயம்
உலக தங்க கவுன்சில்-ன் உலக மத்திய வங்கி பிரிவு தலைவரான ஷாகாய் ஃபேன் ( Shaokai Fan) கூறுகையில், கடந்த சில மாதங்களில் புதிய மத்திய வங்கிகள் தங்க சந்தையில் நுழைந்திருப்பது குறிப்பிடத்தக்க மாற்றமாக உள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக கவுதமாலா, இந்தோனேசியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளின் மத்திய வங்கிகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அல்லது முதன்முறையாக தங்கத்தை வாங்கத் தொடங்கியுள்ளதாக அவர் கூறினார்.
மத்திய வங்கிகள்
இந்த போக்கு 2026ஆம் ஆண்டிலும் தொடரும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சில நாடுகள் தங்களின் உள்ளூர் சிறிய அளவிலான தங்க உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக தங்கத்தை வாங்கி, அந்தத் துறையை ஊக்குவிக்க முயற்சி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சட்டவிரோத வர்த்தகத்தை கட்டுப்படுத்தவும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ட்ராய் அவுன்ஸ் தங்கம்
இதே நேரத்தில், தங்கத்தின் விலையிலும் சமீப காலத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாதத்தில் மட்டும் தங்கத்தின் விலை ஒரு ட்ராய் அவுன்ஸ் (troy ounce) ஒன்றுக்கு 1,000 டாலருக்கு மேல் சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஒரு ட்ராய் அவுன்ஸ் தங்கம் சுமார் 4,340 டாலர் அளவில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாத இறுதியில் தங்கம் ஒரு ட்ராய் அவுன்ஸ் ஒன்றுக்கு சுமார் 5,600 டாலர் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மார்ஜின் கால்
இந்த விலை சரிவுக்கு 'மார்ஜின் கால்' காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்றது ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். இதற்கு முன்பும், கடந்த அக்டோபர் மாதத்தில் தங்க விலை சரிந்தபோது, பல மத்திய வங்கிகள் அதிக அளவில் தங்கத்தை வாங்கியிருந்தன. இந்த முறைவும் அதே போக்கு தொடருமா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை என்று WGC தெரிவித்துள்ளது.
தங்கம் விலை
மேலும், தங்கம் விலை அதிகமாக இருப்பது சில நேரங்களில் மத்திய வங்கிகளின் வாங்கும் ஆர்வத்தை குறைக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே தங்களிடம் உள்ள தங்கத்தின் மதிப்பு அதிகரிப்பதால், மொத்த ரிசர்வில் அதன் பங்கு உயர்ந்து காணப்படும். இதுவும் புதிய வாங்குதல்களை சற்றே மந்தமாக்கும் ஒரு காரணமாக இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.
உலக தங்க கவுன்சில்
உலக தங்க கவுன்சில் கணக்குகளின்படி, 2025ஆம் ஆண்டில் மத்திய வங்கிகள் சுமார் 863 மெட்ரிக் டன் தங்கத்தை வாங்கியிருந்தன. ஆனால் 2026ஆம் ஆண்டில் இது சுமார் 850 மெட்ரிக் டன் அளவுக்கு குறையலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், 2022ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த அளவுடன் ஒப்பிடும்போது, இன்றும் மத்திய வங்கிகளின் தங்க வாங்குதல் உயர்ந்த நிலையில் தொடரும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் உலகளாவிய தங்க தேவையில் சுமார் 17 சதவீதம் மத்திய வங்கிகளின் வாங்குதலால் ஏற்பட்டதாகவும் உலக தங்க கவுன்சில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications