அமெரிக்காவை கதறவிட முடிவெடுத்த சீனா.. தங்க மார்க்கெட்டில் சூறாவளியை கிளப்பும் சம்பவம்.. போச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வதேச தங்கச் சந்தையில் சீனா ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது. இது எதிர்காலத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்திற்கு சவால் விடலாம் என வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அப்பல்லோ குளோபல் மேனேஜ்மென்ட்டின் தலைமைப் பொருளாதார நிபுணர் டோர்ஸ்டன் ஸ்லோக், மத்திய வங்கிகளின் கொள்முதல், ஆர்பிட்ரேஜ் வர்த்தகம், சீனக் குடும்பங்களின் அதிகரித்த தேவை போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை உயர்வில் சீனா முக்கியப் பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்டார். சீனா தொடர்ந்து தங்கத்தை வாங்கி குவிக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் அமெரிக்காவின் வர்த்தக சாம்ராஜ்ஜியம் காலியாகும்.

gold rate silver investment

டாலர் மொத்தமாக அழியும் - தங்கம்

இதனால் டாலருக்கு பெரிய சிக்கல் ஏற்படும். டாலர் மொத்தமாக அழியும் நிலையம் ஏற்படலாம். உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக, உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் விரைவில் அமெரிக்க டாலரை விட அதிக தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கலாம். தற்போது டாலர் தான் முக்கிய உலகளாவிய இருப்பு நாணயமாக உள்ளது.. அது மாறும் நிலை ஏற்படலாம் என்றும் ஸ்லோக் விளக்கினார். தங்கச் சந்தையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது குறித்த எச்சரிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.

ஸ்ப்ராட் அசெட் மேனேஜ்மென்ட்டின் ETF தயாரிப்பு மேலாண்மை இயக்குநர் ஸ்டீவ் ஸ்காஃப்ஸ்டால், உலக நாடுகள் பொருளாதாரத் தடைகளைத் தவிர்ப்பதற்கான ஒரு வழியாக தங்கத்தைப் பார்க்கின்றன அரசாங்கங்களும் மக்களும் புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார அபாயங்களிலிருந்து தங்களைப் பாதுகாக்க தங்கத்தை ஒரு வாய்ப்பாக பார்க்கின்றன. 2022 முதல் சீனா தனது மத்திய வங்கியில் அதிக அளவிலான தங்கத்தை தொடர்ந்து வாங்கி வருகிறது. இது உலகப் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்து அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தைக் குறைக்கலாம்.

தங்கத்தின் விலை மற்றும் சந்தை எதிர்வினைகள்

நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து கிட்டத்தட்ட 50% உயர்ந்து, தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $4,000 ஐ தாண்டியது. இந்த உயர்வு 2025 இல் தங்கச் சுரங்க நிறுவனங்களுக்கு அதிக லாபம் ஈட்ட உதவியது. தங்கம் 2026 க்குள் $5,000 ஆகவும், 2030 க்குள் $10,000 ஆகவும் உயரக்கூடும், என்று தெரிவித்து உள்ளார்.

சீனாவின் தங்க இருப்பு, அக்டோபர் 8, 2025 நிலவரப்படி 2,298.5 டன்களாக உயர்ந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியும் தனது தங்க இருப்பை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அக்டோபர் 8, 2025 நிலவரப்படி, இந்தியாவின் தங்க இருப்பு 880 டன்களாக பதிவாகியுள்ளது.

தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. முன்பு ஒரு பவுன் (சுமார் 11.66 கிராம்) தங்கம் ₹70,000-க்கும் குறைவாக வர்த்தகமான நிலையில், 2025-ல் ₹1.25 லட்சத்தைத் தாண்டிவிட்டது. இது உலகளாவிய பொருளாதார பதட்டங்கள், பணவீக்க அழுத்தங்கள் மற்றும் மத்திய வங்கிகளின் மூலோபாயக் கொள்கைகள் ஆகியவற்றின் பிரதிபலிப்பாகும். சீன மக்கள் வங்கி, 2025 ஜனவரி முதல் செப்டம்பர் வரை சுமார் 39.2 டன் தங்கத்தை வாங்கியுள்ளது. சீனா மாதத்திற்கு 2 முதல் 5 டன் வரை தங்கத்தை சேர்த்து வருகிறது. செப்டம்பரில் மட்டும் 0.4 டன் தங்கத்தை வாங்கியுள்ளது.

அமெரிக்க டாலரின் மீதான சார்பைக் குறைப்பதே சீனாவின் முக்கிய நோக்கம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். டாலர் கையிருப்பை வைத்திருந்தாலும், அமெரிக்கப் பொருளாதாரத்துடன் இணைக்கப்பட்ட ஒரு நாணயத்திலிருந்து வேறுபட்ட சொத்துக்களைப் பன்முகப்படுத்துவதில் சீனா ஆர்வமாக உள்ளது. டாலரை தீவிரமாக நம்பி இருப்பதை சீனா விரும்பவில்லை. தங்கம் உலகளவில் நடுநிலை மற்றும் நிலையான மதிப்பை பாதுகாக்கும் ஒரு பொருளாகும்.

பணவீக்கக் கவலைகள் தங்கத்தின் கவர்ச்சியை மேலும் வலுப்படுத்துகின்றன. 2025-ல் அவுன்ஸ் தங்கம் சுமார் $3,900-ஐ எட்டியுள்ள நிலையில், தங்கம் வாங்கும் சக்தியைப் பாதுகாக்கிறது. இது சீனாவின் நாணயத்தின் உலகளாவிய நிலையை வலுப்படுத்தும் ஒரு வழியாகவும் பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+