உலக தங்க மார்க்கெட்டை.. கதறவிட முடிவெடுத்த சீனா.. ஜின்பிங் கட்டுப்பாடில் வரும் "தங்கம்".. போச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வதேச தங்க சந்தையை ஆட்டிப்படைக்க போகும் பிளான் ஒன்றை சீனா கையில் எடுத்துள்ளது. உலக தங்க மார்க்கெட்டை சீனாவின் இந்த முடிவு கதற விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகில் அதிகம் தங்கம் கொள்முதல் செய்யும் நாடுகளில் ஒன்று சீனா. தங்கம் வாங்குவது மட்டுமின்றி சீனா தனக்கு என்று தங்க வர்த்தக மார்க்கெட் ஒன்றை வைத்து உள்ளது. ஷாங்காய் கோல்டு எக்சேஞ்ச் என்ற அமைப்பை சீனா நடத்தி வருகிறது. இதை SGE என்று கூறுவார்கள்.

gold rate silver investment

சீனா தங்கம்

இந்த SGE வழியாக உலக நாடுகள் வாங்கும் தங்கத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க சீனா முடிவு செய்துள்ளது. அதாவது தங்களின் நட்பு நாடுகள், அணிசேரா நாடுகள் வாங்கும் தங்கத்தை SGE அமைப்பின் கீழ் இயங்கும் வேர்ஹவுஸ்களில் வைக்க சீனா அழுத்தம் கொடுத்து வருகிறதாம்.

உதாரணமாக இலங்கையை எடுத்துக்கொள்வோம். அது அமெரிக்காவிற்கும் நெருக்கம், சீனாவிற்கும் நெருக்கம். இப்போது இலங்கை 100 டன் தங்கத்தை வாங்குகிறது. அதாவது இலங்கையின் மத்திய வங்கி வாங்குகிறது. இது இலங்கையின் பண மதிப்பை உயர்த்தும். ஆனால் இந்த தங்கத்தை வைக்க ஒரு இடம் தேவை.

உலக நாடுகள் இப்படி தங்கம் வாங்கும் போது அதை சர்வதேச அளவில் வேர் ஹவுஸ்களில் சேமித்து வைக்கும். இந்தியாவும் கூட அதன் ரிசர்வ் வங்கி தங்கத்தில் பெரும்பாலான அளவை அமெரிக்காவில் வைத்துள்ளது.

இப்போது இலங்கையின் இந்த தங்கத்தை சீனா எங்களிடம் கொடுங்கள் நாங்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்வோம் என்று கூறும். அதாவது தங்களின் நட்பு நாடுகள், அணிசேரா நாடுகள் வாங்கும் தங்கத்தை SGE அமைப்பின் கீழ் இயங்கும் வேர்ஹவுஸ்களில் வைக்க சீனா அழுத்தம் கொடுத்து வருகிறதாம். இது ஒரு வங்கி போல செயல்படும். அதே சமயம் வங்கிகள் பணத்தை வைத்து எப்படி வருமானம் பார்க்கிறதோ அப்படி சீனாவும் மற்ற நாடுகள் தங்களிடம் சேமிக்கும் தங்கத்தை வைத்தும் வருமானம் பார்க்கும்.

அதாவது உலக நாடுகளுக்கு தங்க வங்கி போல சீனாவின் SGE செயல்படும். 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஷாங்காய் கோல்ட் எக்ஸ்சேஞ்ச் (SGE), தற்போது உலகின் மிகப்பெரிய தங்க வர்த்தக மையமாக விளங்குகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 54,000 டன் தங்கத்தை இது கையாண்டுள்ளது. இது உலகளாவிய தங்க வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 75% ஆகும்.

இப்படிப்பட்ட நிலையில்தான் இதை ஆதரிக்கும் முனைப்பில் சீனா தனது நட்பு நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம், உலக தங்கச் சந்தையில் சீனாவின் நிலை மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டு தங்கத்தை கட்டுப்பாட்டில் எடுக்கும் சீனா

ஷாங்காய் கோல்ட் எக்ஸ்சேஞ்ச் (SGE) மூலம் வெளிநாட்டு தங்க இருப்புக்களின் பாதுகாப்பு மையமாக சீனா தன்னை நிலைநிறுத்தி வருகிறது. நட்பு நாடுகள் தங்கத்தை வாங்கவும், சேமிக்கவும் ஊக்குவிப்பதன் மூலம், உலகளாவிய நிதித்துறையில் தனது பங்கை விரிவுபடுத்தவும், அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் சீனா முடியும். அதாவது சீனா இந்த தங்கத்தை வைத்திருப்பதன் மூலம் சீனாவின் நிதி உயரும். அதோடு பண மதிப்பும் உயரும்.

ஏற்கனவே உலகிலேயே தங்கத்தை அதிகம் பயன்படுத்தும் நாடான சீனா, அமெரிக்க டாலரை சார்ந்திருக்கும் தனது கையிருப்பை குறைக்கும் நோக்கில், தங்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி உரிமங்களுக்கான விதிமுறைகளை தளர்த்த திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான வரைவு அறிக்கை, சீன மக்கள் வங்கி (PBOC) மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் சீனா மிக எளிதாக தங்கம் வாங்க முடியும். அதை நகைகளாக மாற்றி எளிதாக விற்பனையும் செய்ய முடியும். சீனாவின் மத்திய வங்கி தொடர்ந்து தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. இடையில் கொஞ்சமாக தங்கத்தை மார்க்கெட்டில் விற்ற சீனா மீண்டும் தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளது. சீனாவின் மத்திய வங்கி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தனது தங்க இருப்பை பல மாடனுக்கு அதிகரித்ததாக தகவல் வெளியிட்டது. இந்த நடவடிக்கை, தங்கத்தின் மீதான சீனாவின் ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+