என்னங்க நடக்குது? டிரம்ப் செய்த சம்பவம்.. தங்க மார்க்கெட்டில் தாறுமாறாக புயல்.. அடியோடு மாறுது
சென்னை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கிரீன்லாந்து கையகப்படுத்தும் முயற்சியால் சர்வதேச அரசியலில் கடுமையான பதற்றம் ஏற்பட்டு உள்ளது. உலக அளவில் நிலவும் அரசியல் பதற்றங்கள், பாதுகாப்பான முதலீட்டுத் தேவை மற்றும் டாலர் பலவீனத்தால், சர்வதேச மார்க்கெட்டில் தங்கம் ஒரு அவுன்ஸ் $4,800-ஐத் தாண்டி சாதனை விலை எட்டியது.
தங்கம் 1.2% உயர்ந்து $4,818.03 ஆக இருந்தது. இது முன்னதாக $4,836.24 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. பிப்ரவரி மாதத்திற்கான அமெரிக்கத் தங்க எதிர்கால ஒப்பந்தங்கள் 1% அதிகரித்து $4,813.50 ஆக வர்த்தகமாயின.

சர்வதேச அரசியல் பதற்றம்
கிரீன்லாந்தை வாங்கும் தனது நீண்டகால லட்சியத்தை எட்டுவதற்காக, டொனால்ட் டிரம்ப், முக்கிய ஐரோப்பிய நேச நாடுகள் மீது புதிய வரிவிதிப்பை அறிவித்து உள்ளார். டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், நெதர்லாந்து, பின்லாந்து ஆகிய நாடுகள் இந்த வரி அச்சுறுத்தலுக்கு இலக்காகியுள்ளன. இதனால் உலக அளவில் தங்க மார்க்கெட் பெரிய அளவில் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
பிப்ரவரி 1, 2026 முதல் அமெரிக்கச் சந்தைக்குள் நுழையும் இந்தப் பொருட்களுக்கு 10% வரி விதிக்கப்படும். கிரீன்லாந்து வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஜூன் 1, 2026 முதல் இந்த வரி 25% ஆக உயரும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். 'கிரீன்லாந்தை முழுமையாகவும், மொத்தமாகவும் வாங்குவது' என்ற தனது நோக்கத்துடன் இந்த கட்டணங்களை அவர் நேரடியாக இணைத்துள்ளார்.
நட்பு நாடுகளிடம் முன்வைக்கப்பட்ட இந்த கோரிக்கை இதற்கு முன் எப்போதும் இல்லாத ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை தாறுமாறாக உயரும்
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, கிரீன்லாந்தின் தலைநகரிலும், டென்மார்க் முழுவதிலும் கடும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் வெடித்துள்ளன. இது பரவலான எதிர்ப்பை பிரதிபலிக்கிறது. ஐரோப்பிய தலைவர்கள் டென்மார்க்கிற்கு ஆதரவாக ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். இதனால், நேட்டோ கூட்டணிக்குள் கடுமையான ராஜதந்திர பதற்றம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நேட்டோ கூட்டமைப்பே உடையும் சூழலும் ஏற்பட்டு உள்ளது.
இந்த நடவடிக்கையானது புவிசார் அரசியல் பதட்டங்களையும், உலகளாவிய நிச்சயமற்ற தன்மையையும் கூட்டும் என்று சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர். இதன் விளைவாக, முதலீட்டாளர்கள் பாதுகாப்புப் தரக்கூடிய, சந்தைகளில் பாதிப்பு அடையாத சொத்துக்களை நோக்கிச் செல்வதால், தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உயரக்கூடும்.
சர்வதேச நாடுகள்
பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன், கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பாவுக்கு எதிராக டிரம்ப் விடுத்த கடுமையான வரிகள் குறித்த அச்சுறுத்தலைக் கண்டித்துப் பேசினார். ஐரோப்பா மிரட்டுபவர்களுக்குப் பணியாது என அவர் வலியுறுத்தினார்.
உலக அளவில் நிலவும் வர்த்தகப் பதட்டங்கள் அமெரிக்க டாலரை வலுவிழக்கச் செய்து, விலைமதிப்பற்ற உலோகங்களுக்கு மேலும் ஆதரவளிக்கும் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த போர் சூழலில் அமெரிக்கா வலுமாக இருந்தாலும் கூட டாலர் சரியும். டாலர் சரிந்தால் தங்கம் வெள்ளியில் மக்கள் முதலீடு செய்வார்கள். இதனால் அதன் விலை உயரும்.
கிரீன்லாந்து அச்சுறுத்தல்கள் டாலரை மூன்று வார குறைந்த விலைக்குத் தள்ளின. யூரோ மற்றும் சுவிஸ் பிராங்க் எதிராக டாலர் சரிந்ததால், அமெரிக்கச் சொத்துகள், பங்குகள் மற்றும் பத்திரங்கள் அனைத்திலும் பரவலான விற்பனை ஏற்பட்டது. பலவீனமான டாலர் வெளிநாட்டு வாங்குபவர்களுக்கு உலோகங்களை மலிவாக்கும்.
உடனடி வெள்ளி 0.1% உயர்ந்து ஒரு அவுன்ஸ் $94.68 ஆக இருந்தது. பிளாட்டினம் 0.9% அதிகரித்து $2,485.50 ஆகவும், பல்லேடியம் 0.4% உயர்ந்து $1,873.18 ஆகவும் வர்த்தகமாயின. இதனால் உலக அளவில் முக்கியமாக இந்திய மார்க்கெட்டிலும் கூட தங்கம் விலை உயரும். இந்த மாற்றம் இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. முக்கியமாக இந்தியாவில் தங்க விற்பனை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.












Click it and Unblock the Notifications