உலக மார்க்கெட்டே உருளப் போகுது.. தங்கத்தின் ‘பஞ்ச தந்திரம்’.. உலக தங்கக் கவுன்சில் உடைத்த ரகசியம்!
சென்னை: 2025 ஆம் ஆண்டில் வரலாறு காணாத உயர்வை எட்டிய தங்க விலை, 2026 ஆம் ஆண்டிலும் அதே வேகத்தில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்திய சந்தையில், குறிப்பாக எம்சிஎக்ஸ் தங்க விலை ரூ.2,000க்கும் அதிகமாக உயர்ந்து ₹1.38 லட்சத்தை எட்டியிருக்கிறது. இந்த திடீர் உயர்வு சாதாரண நகை வாங்குபவர்களையும், முதலீட்டாளர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
தங்க விலை ஏன் இவ்வளவு அதிகரிக்கிறது? இதற்கு பின்னால் என்ன காரணங்கள் இருக்கின்றன? என்பதையே உலக தங்க கவுன்சில் (WGC) தனது சமீபத்திய அறிக்கையில் தெளிவாக விளக்கியுள்ளது. அதில் தங்கத்தை முதலீட்டு பொருளாக பார்க்க வேண்டிய காரணங்களும் விரிவாக இடம்பெற்றுள்ளன.

2025 ஆம் ஆண்டின் முதல் அறை ஆண்டில் மட்டும் தங்க வர்த்தகம் தினசரி சராசரியாக 329 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இருந்தது என WGC தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் தங்கத்தின் மீது முதலீட்டாளர்கள் காட்டும் நம்பிக்கை உலகளவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தங்கம் விலை உயர்வு
கடந்த 50 ஆண்டுகளாக தங்கத்தின் விலை, அமெரிக்க டாலருடன் ஒப்பிடும்போது வருடத்திற்கு சராசரியாக 8% வரை உயர்ந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் பங்குச் சந்தைக்கு இணையாகவும், பத்திரங்களைவிட மேலோங்கியும் தங்கம் செயல்பட்டு வருகிறது. அதனால்தான் தங்கம் நீண்ட கால முதலீட்டிற்கு மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. வெனிசுலா மீது அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை தங்கத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து இருக்கிறது.
உலக தங்க கவுன்சில்
இந்த நிலையில் தங்கம் ஒரு முதலீடு சொத்து என்ற உண்மையை தெரிந்து கொண்டால் பெரும் நன்மை தரும் என உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது. மேலும் தங்கத்தின் முதலீடு குறித்த சில சுவாரசிய தகவல்களையும் பகிர்ந்து கொண்டுள்ளது. அதன்படி தங்கம் எப்படி பொருளாதார வலிமையை தருகிறது அதனை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்..
நம்பகத்தன்மை
உலக அரசியல் சூழ்நிலையில் பதட்டங்கள் அதிகரித்தால், முதலீட்டாளர்கள் தங்கத்தை நோக்கிச் செல்கிறார்கள். தற்போது அமெரிக்க டாலருக்குப் பின்பு உலகின் இரண்டாவது பெரிய ரிசர்வ் சொத்து தங்கமே என உலக தங்க கவுன்சில் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக வெனிசுலா பிரச்சினையால் ஏற்பட்ட புவிசார் அரசியல் பதற்றமும் தங்க விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஐரோப்பிய மத்திய வங்கி வெளியிட்ட தகவலின்படி, 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தங்கம் யூரோவை விடவும் அதிக நம்பகத்தன்மை கொண்ட ரிசர்வ் சொத்தாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மறு பயன்பாடு
தங்கத்தின் விசேஷம் என்னவென்றால், அது முழுமையாக மறுசுழற்சி செய்யக்கூடிய உலோகம். இதுவரை உலகம் முழுவதும் வெட்டியெடுக்கப்பட்ட கிட்டத்தட்ட ஒவ்வொரு அவுன்ஸ் தங்கமும், இன்னும் ஏதோ ஒரு வடிவில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. நகைகள், மருத்துவ சாதனங்கள், தொழில்நுட்ப கருவிகள் என பல துறைகளில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.
மாத வருமானம் தராத சொத்து
ஆனால் தங்கத்தில் முதலீடு செய்தாலே மாதந்தோறும் வருமானம் கிடைக்கும் என்று நினைத்தால் அது தவறு. தங்கம் ஈவுத்தொகை, வட்டி அல்லது வாடகை போன்ற வருமானத்தை தராது. விலை உயர்ந்த பிறகு அதை விற்றால்தான் லாபம் கிடைக்கும். இதுதான் சில நிதி நிபுணர்கள் தங்கத்தின் குறையாகக் கூறும் முக்கிய அம்சமாகவும் உள்ளது.
தங்க வர்த்தகம்
2025 ஆம் ஆண்டில் தினசரி சராசரி தங்க வர்த்தகம் 329 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இருந்ததாக உலக தங்க கவுன்சில் தகவல் தெரிவிக்கிறது. உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் மற்றும் மத்திய வங்கிகள் சேர்த்து வைத்திருக்கும் தங்கத்தின் மொத்த மதிப்பு 5.1 டிரில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. இதன் மூலம் தங்கச் சந்தை, டவ் ஜோன்ஸ் உள்ளிட்ட பல முக்கிய பங்கு சந்தைகளுக்கு இணையாக மிகவும் திரவமான சந்தையாக திகழ்கிறது என்பது தெளிவாகிறது.
லாப நோக்கம்
பொருளாதார அலைச்சல், புவிசார் அரசியல் பதட்டம், பணவீக்கம் போன்ற சந்தர்ப்பங்களில் மக்கள் நம்பிக்கையுடன் திரும்பிச் செல்லும் முதலீட்டு தங்கம் என்பதால், வருகிற மாதங்களிலும் ஆண்டுகளிலும் தங்க விலை மேலும் உயரும் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். அதே சமயம், தங்கத்தை வாங்கும் முன் அது நீண்ட கால முதலீடு என்பதையும், உடனடி லாப நோக்கில் அணுக கூடாது என்பதையும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
-
தங்கம் விலை 3 நாளில் 300 டாலர் உயர்வு.. அய்யய்யோ..! ஷாக் கொடுத்த Gold Price.. இனி தினமும் அதிரடி தான்! -
Gold Price Today: தங்கம் விலை மளமளவென சரிந்தது.. 2வது நாளாக இன்றும் குறைந்தது.. நகை பிரியர்கள் குஷி! -
தங்க நகை வாங்குவோருக்கு 'ரெட் கார்பெட்' வரவேற்பாம்.. குஷியில் வங்கிகள்.. ஏன் தெரியுமா? -
தங்கம் விலை தொடர் உயர்வா! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாஸ்.. கெவின் வார்ஷ் முடிவில் தான் எல்லாமே இருக்கு! -
இந்தியாவில் வெள்ளி இறக்குமதி 87% அதிரடி வீழ்ச்சி.. நகை விலை உயர்வு.. இனி சிக்கல் மேல் சிக்கல்! -
Gold Price Today: 3 நாள் உயர்வுக்கு பிரேக்.. இன்று குறைந்த தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு? -
Gold Price Today: தங்கம் விலை இன்றும் அதிரடி உயர்வு.. தொடர்ந்து 3 நாட்களாக அதிகரிப்பு! சென்னையில் ஒரு சவரன் என்ன ரேட்? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம்












Click it and Unblock the Notifications