இனி தங்கம் வாங்க முடியாது.. இரவோடு இரவாக இறக்குமதி வரி 6% இருந்து 15% உயர்த்திய மத்திய அரசு..ஷாக்
டெல்லி: பொதுமக்கள் தங்கம் வாங்குவதை குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுரை வழங்கி இருந்தார். இந்நிலையில் தான் மக்கள் தங்கம் வாங்குவதை தவிர்க்கும் வகையில் இரவோடு இரவாக தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றின் மீதான அடிப்படை சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீதான அமெரிக்காவின் போர் காரணமாக நம் நாட்டுக்கான கச்சா எண்ணெய் மற்றும் கேஸ் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் 60 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய், கேஸ் மட்டுமே உள்ளன. அதுமட்டுமின்றி சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டி உள்ளது. வரும் நாட்களிலும் விலை உயர வாய்ப்புள்ளது. இதனால் வெளிநாடுகளின் கச்சா எண்ணெயை நம்பி இருக்கும் நம் நாடு எதிர்காலத்தில் பெரும் பிரச்சனையை எதிர்கொள்ளலாம். அதாவது கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றை வாங்க அதிக அந்நிய செலாவணியை செலவிட நேரிடலாம்.
ஒரு நாட்டுக்கு அந்நிய செலாவணி என்பது மிகவும் முக்கியம். வர்த்தகம், முதலீடு உள்ளிட்டவற்றில் உள்நாட்டு கரன்சியை வெளிநாட்டு கரன்சிக்கு ஏற்ப மாற்றி கொடுக்கும் செயல்முறைக்கு அந்நிய செலவாணி அடிப்படையில் தான் நடக்கும். அந்நிய செலவாணி இருந்தால் மட்டுமே நாம் பிற நாடுகளிடம் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய முடியும். இதனால் தான் தற்போது அந்நிய செலவாணி கையிருப்பை காக்க பொதுமக்கள் உதவ வேண்டும் என்று மோடி கூறியுள்ளார்.
அதன்படி ஹைதராபாத்தில் பேசிய மோடி ''பெட்ரோல் மற்றும் டீசலை சேமிப்பதன் மூலமாக அதற்கான அந்நிய செலாவணி செலவை குறைக்கலாம். இதனால் பெட்ரோல், டீசல் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்கள் பொதுபோக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்ற வாய்ப்பு வழங்க வேண்டும். ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை நிறுத்த வேண்டும்'' என்றார். வெளிநாடுகளில் இருந்து அதிகப்படியான தங்கத்தை நம் நாடு இறக்குமதி செய்யும் நிலையில் அதற்காக அந்நிய செலவாணி செலவாகிறது. இதனால் தங்கம் வாங்குவதை குறைக்க வேண்டும் என்று மோடி கூறினார்.
மேலும் பொதுமக்கள் தங்கம் வாங்குவதை தடுக்கும் வகையில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை இரவோடு இரவாக அதிரடியாக உயர்த்தி உள்ளது. அதன்படி தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய வரி விதிப்பில், 10 சதவீத அடிப்படை சுங்க வரியும், கூடுதலாக 5 சதவீத வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரியும் (AIDC) சேர்க்கப்பட்டுள்ளது.
இதனால் வெளிநாடுகளில் இருந்து தங்கம் வாங்கும்போது கூடுதல் செலவாகும். இது அப்படியே நம் நாட்டில் எதிரொலிக்கும். இதனால் இன்று முதல் மீண்டும் நம் நாட்டில் தங்கம் விலை கிடுகிடுவென அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தியாவை பொறுத்தவரை அதிகளவில் தங்கம் வாங்கும் நாடுகளில் 2வது இடத்தில் உள்ளது. ஏற்கனவே தங்கம் விலை உச்சத்தில் உள்ள நிலையில் தற்போதை வரி உயர்வு கொண்டு வரப்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் தங்கம் வாங்குவதை குறைப்பார்கள் என்று மத்திய அரசு கணக்குப்போடுகிறது. இந்நிலையில் தான் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தங்கம் பிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
-
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications