நகைக்கடன் தள்ளுபடி? கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடனில் அரசு சர்ப்ரைஸ் தருமா? இப்பவே மக்களுக்கு குஷி
சென்னை: தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைக்கடன் மீதான மதிப்பும், தேவையும் மக்களிடம் குறையவில்லை.. நம்பகத்தன்மை, குறைந்த வட்டி உள்ளிட்ட காரணங்களுக்காக நகைக்கடன் முக்கியத்துவம் குறையாமல் உள்ளது.. இப்படிப்பட்ட சூழலில், தேர்தலும் விரைவில் தமிழகத்துக்கு வர உள்ளதால், நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு தமிழக அரசு தரப்பில் வெளியாகுமா? என்ற ஆர்வம் பெருகி வருகிறது.
உலகம் முழுவதுமே தங்கத்திற்கென்று தனி மதிப்பு அனைத்து காலத்திலும் இருந்து வருகிறது. தற்போது உலகளவிலான பொருளாதாரத்தின் நிலைமை, தங்கத்தின் தேவை, புவிசார் அரசியல் பதட்டங்கள் போன்ற காரணங்களுக்காக தங்கம் நிலையில் தினசரி அடிப்படையில் மாறுதல் ஏற்பட்டு வருகின்றன

ஆனாலும், தேவைப்படும் அவசர காலங்களில் அந்த தங்கத்தை பணமாகவும் மாற்றி பெற்றுக்கொள்ள முடிகிறது என்பதால்தான் தங்கத்தின் மதிப்பு எப்போதுமே குறையாமல் உள்ளது. பொதுமக்களுக்கு அவசரத்துக்கு பணத்தேவை ஏற்படும் நேரத்தில் வங்கிகளில் கடன் வாங்கும் நடைமுறையும் உள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் அடமானம்
பொதுவாக தங்க நகைக்கடனை வங்கியில் பெறுவதற்கு பெரிய அளவிலான நிபந்தனைகள், விதிமுறைகள் கிடையாது.. மற்ற கடன்களை விடவும் தங்க நகைக் கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் குறைவாகும். ஒவ்வொரு வங்கிக்கும் ஏற்ப வட்டி விகிதம் மாறினாலும், அந்தந்த வங்கிகளில் வட்டி விகிதம் இந்தக் கடனுக்குத் தான் குறைவாக இருக்கும்.
எனவேதான், தேசிய அளவிலான வங்கிகள் மட்டுமல்லாது, கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சொசைட்டிகளிலும் தங்க நகைக்கடன் எளிதாகவும், விரைந்தும் வழங்கப்படுகின்றன.
தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், மாநில, மாவட்ட தலைமை கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்டவற்றில், தங்க நகை அடமானம் பேரில், நகைக்கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனை பெரும்பாலான பொதுமக்கள் முக்கியமாக கிராமப்புறங்களில் உள்ளவர்கள், இந்த கூட்டுறவு வங்கியை நாடுகிறார்கள்.
5 சவரன் தங்க நகை தள்ளுபடி
இதற்கு இன்னொரு காரணம், மாநில அரசுகள் கூட்டுறவு வங்கியில் வைக்கப்படும் நகைகடன் தள்ளுபடி செய்துவிடும் என்ற நம்பிக்கையிலும் வைக்கிறார்கள்..
இந்நிலையில் கடந்த முறை திமுக தன்னுடைய தேர்தல் வாக்குறுதியாக, 5 சவரன் வரையிலான தங்க நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தது.. அதன்படியே, 31 மார்ச் 2021 வரை கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 சவரன் அல்லது அதற்கு குறைவான தங்க நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்ய முதல்வர் உத்தரவிட்டார். இதையடுத்து, ரூ.4,818.88 கோடி மதிப்பிலான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதன்மூலம் கிட்டத்தட்ட 13.12 லட்சம் பேர் பயனடைந்தனர்..
இதனை எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்த நிலையில், தமிழக அரசு விளக்க அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.. அதில், "கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுனுக்கு உட்பட்டு நகைக் கடன் பெற்று, 31.03.2021 வரை நிலுவையிலிருந்த நகைக் கடன் ரூ. 6,000 கோடி தள்ளுபடி செய்ய தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டது.
அடமானம் - நகைக் கடன் தள்ளுபடி
அதன்படி, 11.70 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.4,904 கோடி அளவிற்குத் தள்ளுபடிச் சான்றிதழுடன், அவர்கள் அடமானம் வைத்த நகைகளும் திருப்பி வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.
இப்படிப்பட்ட சூழலில், விரைவில் தேர்தல் வர உள்ளது.. இந்த தேர்தலுக்கும் அரசியல் கட்சிகள் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு வரும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.. அதிலும் நகைக்கடன் தள்ளுபடி விஷயத்தில் திமுக தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றியிருப்பதால், மீண்டும் வாக்குறுதி தந்தால் அதை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையும் பரவலாக உள்ளது. எனவே அதற்கான அறிவிப்பு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தபடியே உள்ளது..
நகைக்கடன் தள்ளுபடி
மகளிர் உரிமைத் தொகை திட்டமானது திமுகவுக்கு மிகப்பெரிய அளவில் வாக்கு சதவீதத்தை உயர்த்தி இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.. இந்த நிலையில், பொங்கலுக்கு 5000 பரிசாக கொடுக்கப்படலாம் என்ற மற்றொரு வியூகம் கையில் எடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதேபோல தங்க நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் நம்பப்படுகிறது.
அதுமட்டுமல்ல, தற்போது நிலுவையில் உள்ள நகைக் கடன்கள் எவ்வளவு? என்பது குறித்த பட்டியலை வழங்க அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications