தாறுமாறு தக்காளி சோறு..தவிக்க வைக்கும் தங்கம் விலை!சல்லுன்னு சரியுமா ரேட்? இது நடந்தால் அது நடக்கும்
சென்னை: இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய சூழலில் ஒரு சவரன் 92,000 கடந்துள்ளது. விரைவில் ஒரு சவரன் ஒரு லட்சம் என்ற நிலையை எட்டலாம் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை குறையுமா என்ற கேள்வி பொது மக்களிடையே எழுந்திருக்கிறது. தற்போதைக்கு தங்கத்தின் விலை ஒரே அடியாக குறைய வாய்ப்பில்லை என்றும், சில விஷயங்கள் நடந்தால் காலப்போக்கில் தங்கத்தின் விலை குறையலாம் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
இந்தியாவில் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.92,640 ஆக உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.11,580, 24 காரட் தங்கம் ரூ.12,632 என்ற நிலையில் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை கூட கடுமையாக உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.1,97,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இந்த உயர்வின் முக்கிய காரணமாக சர்வதேச சந்தையில் நிலவும் நிலை, அமெரிக்காவின் வட்டி விகித மாற்றங்கள், டாலர் மதிப்பின் வீழ்ச்சி, உலக அரசியல் பதட்டங்கள் போன்றவை குறிப்பிடப்படுகின்றன.
தங்கம் விலை இந்தியா
அதே நேரத்தில், திருமண சீசன், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் தங்கத்தின் தேவையும் அதிகரித்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் "இனி தங்க விலை குறையுமா?" என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர். நிபுணர்கள் கூறுவதாவது, தங்கம் குறைக்கப்படும் என்றால் அது சில முக்கிய காரணிகளின் அடிப்படையில் மட்டுமே நடக்கலாம். முதலில், மத்திய வங்கிகள் அல்லது அமெரிக்காவின் FED வட்டி விகிதத்தை உயர்த்தினால், உணவுத் தளத்தில் "நிகர வட்டி" அதிகரிக்கும். இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு எதிராக பணத்தை மாறும் வாய்ப்பு அதிகரிக்கும்.
தங்க முதலீடு
இரண்டாவது, டாலர் மதிப்பு அதிகரித்தால், இந்தியாவில் தங்க இறக்குமதிக்குச் செலவு அதிகரிக்கும். இது விலையை சரி செய்யும் அழுத்தத்தை உருவாக்கும். மூன்றாவது, உலகளாவிய அரசியல் நிலைமை சீராகி, போர்கள், வர்த்தக மோதல்கள் குறையும்போது "பாதுகாப்பான உலோகங்களுக்கு" தேவையும் குறையும்.
நான்காவது, ETF-கள் அல்லது முதலீட்டாளர்கள் பெரிய அளவில் தங்கம் விற்றால் சந்தையில் விலை கீழே சரிவடையும் வாய்ப்பு உண்டு. ஐந்தாவது, திருமண சீசன் மற்றும் திருவிழாக்கள் முடிந்த பிறகு தங்கத்தின் தேவையும் குறையும், இதனால் விலை குறைவதற்கான வாய்ப்பு ஏற்படும்.
பொருளாதார நிபுணர்கள்
Gold.org மற்றும் Times of India ஆகியவற்றின் முன்கூட்டிய கணிப்பின்படி, "Gold may correct but downside would be limited." என்கிறார்கள். அதாவது, குறுகிய காலத்தில் பெரிய சரிவு நிகழ வாய்ப்பில்லை என தெரிவிக்கின்றனர். தற்போது உலக அளவில் அரசியல், போர் பதட்டங்கள், மத்திய வங்கிகள் தங்க கொள்முதல், வட்டி விகித மாறுபாடுகள் ஆகியவை விலையை அதிகரிக்க வைத்துள்ளன. தற்போதைய சூழலில் தங்க விலை குறைவதற்கான பெரிய வாய்ப்பு இல்லை.
1 சவரன் தங்கம் விலை
குறுகிய காலத்தில் சிறிய சரிவு மட்டும் ஏற்படலாம். ஆனால், உலகளாவிய பொருளாதார சூழல், வட்டி விகித மாற்றங்கள் அல்லது முதலீட்டாளர்களின் பெரும் விற்பனை போன்ற மாற்றங்கள் வந்தால், மிதமான சரிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தங்கம் வாங்க நினைப்பவர்கள் தற்போது சரிவு மிக குறைவான சூழலில் இருக்கின்றதை கருத்தில் கொண்டு, முதலீடு செய்ய வேண்டும் நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதே சமயம் திருமண மற்றும் பண்டிகை காலங்களில் தங்கத்தின் தேவையும் அதிகரிக்கும் என்பதால் விலை மேலே செல்லும் அபாயமும் உள்ளது.
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
ராணிப்பேட்டை வீட்டில் 21 சவரன் தங்கம்.. 2 ஏக்கர் நிலப்பத்திரம்.. பீரோவை உடைக்காமலேயே ட்விஸ்ட் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு












Click it and Unblock the Notifications