சீனா, அமெரிக்கா சண்டை! இடையில் மாட்டிக் கொண்ட இந்தியா! ஒரு நாளைக்கு இருமுறை உயரும் தங்கத்தின் விலை!
சென்னை: சர்வதேச அளவில் பல்வேறு காரணிகள் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த காலங்களில் வாரத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் மட்டுமே தங்கத்தின் விலை உயர்வு இருக்கும். ஆனால், தற்போதைய சூழலில் ஒரே நாளில் இரு முறை கூட தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. இதற்கு அடிப்படை காரணம் அமெரிக்காவும் சீனாவும் தான் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
இந்த ஆண்டின் தொடக்கமான ஜனவரி 1, 2025-ம் தேதி முதல் இன்று வரை தங்க விலை இந்திய சந்தையில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,600 மற்றும் பவுனுக்கு ரூ.37,000 வரை விலை உயர்ந்துள்ளது.
தங்கம் மட்டுமல்ல, வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்து வருவது குறிப்பிடத்தகது. இன்னும் வரும் காலங்களில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலையுயர்ந்த உலோகங்களின் விலை மேலும் உயரக் கூடுமென்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

தங்கம் விலை
இதற்குப் பின்புலத்தில் உலகளாவிய அரசியல், பொருளாதார மாற்றங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது தான் முக்கியம். அமெரிக்க பொருளாதார சூழலும், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத் தீர்வுகளும் இந்த விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சமீபத்தில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் குறைத்துள்ளது. மேலும், எதிர்காலத்தில் இது குறைய வாய்ப்பு உள்ளதால் முதலீட்டாளர்கள் தங்கம் போன்ற பாதுகாப்பான உலோகங்களில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர்.
அமெரிக்கா சீனா
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பல அதிரடி அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இதன் எதிரொலியாக உலக நாடுகளின் பொருளாதார நிலைமைகளில் பெரும் மாற்றும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ட்ரம்பின் அறிவிப்புகள் அமெரிக்க டாலரின் மதிப்பை வீழ்ச்சி அடையச் செய்துள்ளது. இதனால் டாலருக்கு மாற்றாக தங்கத்தை சில நாடுகள் நாணயம் போல கருதுகின்றன. இதனால் தானாகவே சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி போன்ற பாதுகாப்பான உலோகங்களின் விலை உயர்வு ஏற்பட்டு தற்போது வரை அது தொடர்கிறது.
வர்த்தக போர்
தங்கத்தின் விலை உயர்வுக்கு மற்றுமொரு முக்கிய காரணம் சீனா. உலகளவில் கனிம வளங்களைக் கட்டுப்படுத்தும் முக்கிய நாடான சீனா, கடந்த அக்டோபர் 9-ம் தேதி தங்களது அரிய கனிமங்களான எர்பியம், துலியம், யூரோபியம் மற்றும் யட்டர்பியம் ஆகியவற்றின் ஏற்றுமதிக்குப் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்கான எதிர்வினையாக ட்ரம்ப் கடந்த சனிக்கிழமை சீனா மீது கூடுதல் 100 சதவிகித வரிகளை விதித்தார். இதனால் மீண்டும் அமெரிக்கா-சீனா வர்த்தக போர் தீவிரமாகும் அபாயம் உருவாகியுள்ளது. இந்த சர்வதேச பரபரப்பு இந்திய சந்தையிலும் பிரதிபலித்து வருகிறது.
தினசரி விலை மாற்றம்
குறிப்பாக சென்னையில், கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை காலை, மாலை என ஒரு நாளுக்கு இரண்டு முறை மாறும் நிலை உருவாகியுள்ளது. கடந்த செவ்வாய் (அக்டோபர் 7) முதல் இன்று வரை, கிராமுக்கு ரூ.625 மற்றும் பவுனுக்கு ரூ.5,000 வரை விலை உயர்ந்துள்ளது. உலக சந்தையில் நிலவும் பயத்தால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் விலை மேலும் உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் ஒரு அவுன்ஸிற்கு $4,000-தை கடந்த நிலையில், இந்திய சந்தை அதனை பிரதிபலித்து விலை மாற்றங்களை அனுபவிக்கிறது.
பொருளாதார நிலை
இதனால், "ஒரே நாளில் இருமுறை விலை மாற்றம்" என்ற பரபரப்பான நிலைமை, அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக பதட்டங்கள் மற்றும் அரசியல் மாற்றங்களால் உருவாகியுள்ளது. எதிர்காலத்திலும் சர்வதேச சந்தையின் நிலைமை சீராகும் ஆகும் வரை, விலை உயர்வும், தினசரி விலை மாற்றங்களும் தொடர வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் ஒரு கட்டத்தில் தங்கம் குறிப்பிட்ட விலையை எட்டியதும் அதன் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது. ஏன் சரிவு கூட ஏற்படலாம். எனவே தங்கம் விலை உயர்ந்து வருகிறது என்பதற்காக அதனை அதிக அளவில் வாங்கி குவிக்காமல், குறிப்பிட்ட அளவு, பகுதி அளவாக முதலீடு செய்வது நலம் பயக்கும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
-
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
தங்கம், வெள்ளி இறக்குமதி கட்டுப்பாடு.. மத்திய அரசின் திடீர் ஆக்ஷன்! தங்கம் விலை தாறுமாறா உயர போகுது? -
Gold Rate Today: காலையிலேயே மிக பெரிய அதிர்ச்சி.. சட்டென எகிறிய தங்கம் விலை.. என்ன இப்படி ஆகிடுச்சு! -
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications