தங்கம் விலை.. உச்ச லிமிட்டே இல்லாமல் உயரப்போகிறது.. குறிச்சு வச்சுக்கோங்க.. எச்சரித்த வல்லுநர்!
சென்னை: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அனைத்து நாடுகளையும் குறிவைத்து வர்த்தகத் தடைகளை விதிக்கும் திட்டத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளார். முக்கியமாக ஏப்ரல் 3 முதல் வாகனங்கள் மீது கூடுதல் வரிகள் விதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் சந்தையில் பதற்றம் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இது தங்கத்தின் விலையை மேலும் உயர்த்தக்கூடும் என மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸின் கமாடிட்டி பிரிவு தலைவர் கிஷோர் நார்னே தெரிவித்துள்ளார்.
தற்போது தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இது முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான இடமாக மாறியுள்ளது. உலக பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதால், தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸின் கமாடிட்டி பிரிவு தலைவர் கிஷோர் நார்னே, தங்கத்தின் விலைக்கு உச்ச வரம்பு இல்லை.. அது லிமிட்டே இல்லாமல் உயர்ந்து கொண்டே இருக்கும் என்று கணித்துள்ளார்.

தங்கம் விலை உயர்வு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய வர்த்தக தடைகள், பணவீக்கம் மற்றும் உலக பொருளாதார வளர்ச்சியின் மந்தநிலை குறித்த கவலைகள் காரணமாகவே தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. புவிசார் அரசியல் பதட்டங்கள், நாணய மதிப்பு ஏற்ற இறக்கங்கள் மற்றும் உலகளாவிய கொள்கை மாற்றங்கள் காரணமாக தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. தங்கத்தின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவது காணப்படுகிறது. குறுகிய காலத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் $3,200 என்ற நிலையை சந்திக்க நேரிடலாம் என்று நார்னே கணிக்கிறார். இருப்பினும், சிறிய சரிவுகள் ஏற்பட்டால், அதை தங்கம் வாங்குவதற்கான வாய்ப்பாகவே பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தங்கத்தில் முதலீடு செய்யும்போது நீண்ட கால அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும். முதலீட்டாளர்கள் தங்கள் போர்ட்ஃபோலியோவில் 5-20% தங்கம் மற்றும் தங்கம் சார்ந்த சொத்துக்களை வைத்திருக்க வேண்டும். பல்வேறு முதலீடுகளை வைத்திருப்பவர்கள் தங்கத்தை வாங்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கிஷோர் நார்னே கூறியுள்ளார்.
இந்தியாவில் தங்கம் விலை 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ICICI வங்கியின் உலகளாவிய சந்தைகள் அறிக்கையின்படி, 10 கிராம் தங்கத்தின் விலை ₹1,00,000 என்ற இலக்கை நோக்கி நகர வாய்ப்புள்ளது. தற்போது, தங்கத்தின் விலை ₹96,500 - ₹98,500 என்ற அளவில் உள்ளது.
ICICI வங்கியின் உலகளாவிய சந்தைகள் அறிக்கையின்படி, உள்ளூர் தங்கம் விலைகள் தொடர்ந்து அதிகரித்து, குறுகிய காலத்தில் 10 கிராமுக்கு ₹96,500 முதல் ₹98,500 வரை வர்த்தகமாகி, 2025 இரண்டாம் பாதியில் ₹98,500 முதல் ₹1,00,000 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என்று கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் உலகளாவிய விலைகள் குறைந்தாலும், உள்நாட்டுத் தங்கம் விலைகள் ஜூன் மாதத்தில் 0.6% உயர்ந்தன. இதற்கு ரூபாய் மதிப்பு 0.2% பலவீனமடைந்தது காரணமாக. ஆனால் மே மாதத்தில் இறக்குமதி $2.5 பில்லியனாகக் குறைந்துள்ளது, இது ஏப்ரல் மாதத்தில் $3.1 பில்லியனாக இருந்தது. நகைக்கான தேவை பலவீனமாகவே உள்ளது, அதே நேரத்தில் முதலீடு தொடர்பான கொள்முதல் வலுவாக இருந்தது. அதாவது மக்கள் இதை அணிகலனாக வாங்குவது குறைவாக உள்ளது. ஆனால் முதலீடாக அதாவது பார்களாக வாங்குவது அதிகரித்துள்ளது.
-
ஓசூர்-க்கு ஓடிவந்த இஸ்ரேல் நிறுவனம்.. ஈரான் போருக்கு நடுவில் சூளகிரி-யில் மாஸ்டர் பிளான்! -
தங்க நகை வாங்குவோருக்கு 'ரெட் கார்பெட்' வரவேற்பாம்.. குஷியில் வங்கிகள்.. ஏன் தெரியுமா? -
தங்கம் விலை தொடர் உயர்வா! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாஸ்.. கெவின் வார்ஷ் முடிவில் தான் எல்லாமே இருக்கு! -
இந்தியாவில் வெள்ளி இறக்குமதி 87% அதிரடி வீழ்ச்சி.. நகை விலை உயர்வு.. இனி சிக்கல் மேல் சிக்கல்! -
ரெண்டு நாள்ல அழுகி போற தக்காளிக்கே மவுசு வரும் போது.. தங்கத்துக்கு வராதா? வாங்கி குவிக்கும் வங்கிகள் -
தங்கம் விலை 3 நாளில் 300 டாலர் உயர்வு.. அய்யய்யோ..! ஷாக் கொடுத்த Gold Price.. இனி தினமும் அதிரடி தான்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications