Gold Rate Today: தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. நகை பிரியர்கள் கவலை! இன்று சென்னையில் என்ன ரேட்?
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து கடுமையாக அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்று (ஆகஸ்ட் 13) ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.1,13,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 அதிகரித்து ரூ.14,220க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை மேலும் உயர்ந்து நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு நிலை, கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஆகியவற்றைப் பொறுத்து இந்தியாவில் தங்கம், வெள்ளி விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேற்காசிய போர் உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை ஒரு லட்சத்தை கடந்து விற்பனையாகி வருகிறது.

தங்கம் விலை ஏற்ற இறக்கம்
கடந்த மே மாதம் தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதையடுத்து தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது.
ஆகஸ்ட் 5 ஆம் தேதி தங்கம் விலை பெரிய அளவில் உயர்ந்தது. காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் சேர்த்து சென்னையில் ஒரு சவரன் ரூ.2,240 அதிகரித்தது. இதனால் 5 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,07,840 க்கு விற்பனை செய்யப்பட்டது.
அடுத்த நாளான 6 ஆம் தேதியும் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,160 அதிகரித்தது. இதனால் சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,10,000 ஆக விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.13,750-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து அதிரடி உயர்வு
வெள்ளிக்கிழமை மாலை தங்கம் விலை உயர்ந்தது. சவரனுக்கு ரூ.1,200 அதிகரித்து, ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 200-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.150 அதிகரித்து, ரூ.13,900-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சனிக்கிழமை சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்தது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூபாய் 1,11,720க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.65 உயர்ந்து ரூபாய் 1,3,965க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் 4 நாட்களில் மட்டுமே தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 6,120 உயர்ந்தது.
திங்கட்கிழமை, மார்க்கெட் திறக்கப்பட்டதும் கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் குறைந்து 13,950 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 111,600 ரூபாய்க்கு விற்பனையானது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி காலையில் ரூபாய் 300 அதிகரித்த தங்கம் விலை, மாலையில் குறைந்தது. ஒரு கிராம் 14,150 ரூபாய்க்கும், சவரன் 1,13,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றும் அதிகரிப்பு
நேற்று புதன்கிழமை கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் உயர்ந்து 14,200 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 1,13,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 13) ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.1,13,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 அதிகரித்து ரூ.14,220க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவது நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
வெள்ளி விலை
அதேசமயம், வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்
13.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,760 (இன்று)
12.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,600
11.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,200
10.08.2026 - ஒரு சவரன்- ரூ.111,600
9.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
8.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
7.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
6.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
5.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,07,840
4.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,600
3.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,000
2.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
1.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
31.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,040
30.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,840
29.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,240
28.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,720
27.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,960
26-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,06,400
25-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,06,400
24-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,840
23-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,08,000
22-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,07,440
21-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
19-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,080
18-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,080
17-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,04,800
16-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,200
15-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,440


Click it and Unblock the Notifications
