சென்னையில் இல்லத்தரசிகளுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி தந்த தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.3000 சரிவு
சென்னை: தங்கம் விலை கடந்த 10 நாட்களாக தங்கம் விலை பெரிய அளவில் சரிந்து வந்தது. காலையில் ஏறுவதும், மாலையில் கடுமையாக வருவதுமாக இருந்து வந்தது. அக்டோபர் 27 தேதியான நேற்று தங்கம் ஒரு சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 91,600 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் அக்டோபர் 28ம் தேதியான இன்று தங்கம் விலை ஒரே நாளில் 3000 ரூபாய் அளவுக்கு சரிந்துள்ளது. காலையில், தங்கம் ஒரு சவரன் ரூ. 1,200 குறைந்து ரூ. 90,400-க்கும், கிராமுக்கு ரூ. 150 குறைந்து ரூ. 11,300-க்கும் விற்பனையான நிலையில், மாலையில், கிராம் ஒன்றுக்கு ரூ. 225 குறைந்து ரூ. 11,075-க்கும், சவரனுக்கு ரூ. 1,800 குறைந்து ரூ. 88,600-க்கும் விற்பனை ஆகிறது.
தங்கம் என்றும் ஆபத்தான சமயங்களில் கைகொடுத்து வருகிறது. பலரும் அடகு கடைகளில் அடகு வைக்கவும், அவசர தேவைக்கு பணம் புரட்டவும் தங்கத்தை அதிகம் விரும்புகிறார்கள். தங்கம் வெறும் அலங்காரம் மற்றும் ஆபரணமாக இல்லாமல், பலரது வாழ்வினை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. கையில் பணமே இல்லை.. நெருக்கடி நிலை வந்தால், உடனே தங்கத்தை வைத்து பணம் புரட்ட முடியும். பல ஏழை குடும்பங்கள் வாழ்வு மேம்பட தங்கம் முக்கியமான காரணமாக இருக்கிறது. அதனாலயே தங்கம் இல்லதரசிகளுக்கு பிடித்தமான நகையாக பல ஆண்டுகளாக உள்ளது.

ஆனால் தங்கம் விலை தொடர்ந்து ஏறியபடி இருந்தது. குறிப்பாக அமெரிக்கா திடீரென இந்தியாவிற்கு விதித்த வரி, ரஷ்யா அமெரிக்கா இடையிலான மறைமுக மோதல், சீனா அமெரிக்கா இடையில் வர்த்தக போர், இஸ்ரேல் காசா போர், ரஷ்யா உக்ரைன் போர் மற்றும் அமெரிக்காவின் வரி மிரட்டல்கள் போன்ற காரணங்களால் உலக அளவில் தங்கம் விலை வேகமாக ஏறியது.
தங்கம் விலை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஏறியது. ஒரு கட்டத்தில் ஒரு கிராம் 12 ஆயிரத்தை தாண்டி உச்சம் பெற்றது. கடந்த அக்டோபர் 17ம் தேதி அன்று தங்கம் விலை ஒரு சவரன் 97 ஆயிரத்து 600 ரூபாய் என்கிற நிலையை எட்டியது. ஒரு கிராம் 12,200 என்ற ஆக உயர்ந்தது.ஆனால் அடுத்த நாளில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு 1600 ரூபாய் வரை குறைந்தது. இதனால் ஒரு சவரன் அக்டோபர் 18ம் தேதி நிலவரப்படி 96000 ஆக இருந்தது. அக்டோபர் 19ம் தேதி அன்று விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை..
ஆனால் அக்டோபர் 20ம் தேதியான தீபாவளி அன்று ஒரு கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 95 ஆயிரத்து 360 ஆக குறைந்தது. தீபாவளிக்கு மறுநாள் 96000 ஆக விற்பனை ஆனது. அக்டோபர் 22ம் தேதி அன்று ஒரு சவரன் தங்கம் 3680 ரூபாய் குறைந்தது. இதனால் தங்கம் விலை ஒரு சவரன் 92 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த அக்டோபர் 23ம் தேதி அன்று கிராமுக்கு ரூ.100-ம், பவுனுக்கு ரூ.800-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 400-க்கும், ஒரு பவுன் ரூ.91 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது, இதன் மூலம் தங்கம் விலை ரூ.92 ஆயிரத்துக்கு கீழ் சென்றது . அக்டோபர் 25ம் தேதி காலையில் ஒரு சவரனுக்கு 800 ரூபாய் ஏறியது. சென்னையில் 22 காரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் 92800க்கு விற்பனையானது. ஆனால் மாலையில் தங்கம் விலை பழையபடி 800 குறைந்து 92000க்கு விற்பனையானது.
இந்நிலையில் அக்டோபர் 27ம் தேதியான நேற்று சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 91,600 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து, 22 காரட் தங்கம் ஒரு கிராம் 11,450க்கு சென்னையில் விற்பனையானது. இந்நிலையில், அக்டோபர் 28ம்தேதியான இன்று காலை தங்கம் விலை ஒரு கிராமுக்கு 150 ரூபாய் சரிந்தது. இதனால் ஒரு கிராம் தங்கம் ரூ.11,300 ஆக விற்றது. ஒரு சவரன் தங்கம் சென்னையில் ரூ.90,400க்கு விற்பனையானது. இதற்கிடையே மாலையில், கிராம் ஒன்றுக்கு ரூ. 225 குறைந்து ரூ. 11,075-க்கும், சவரனுக்கு ரூ. 1,800 குறைந்து ரூ. 88,600-க்கும் விற்பனை ஆகிறது. இதன் மூலம் ஒரே நாளில் சவரனுக்கு தங்கத்தின் விலை 3000 ரூபாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Gold Price Today: தங்கம் விலை 2-வது நாளாக இன்றும் உயர்வு.. நகை பிரியர்களுக்கு மீண்டும் ஷாக்! ஒரு சவரன் ரேட் என்ன? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications