Gold Rate Today: இன்று ஒரே நாளில் 2 முறை தாறுமாறாக எகிறிய தங்கம் விலை.. சென்னையில் சவரனுக்கு ரூ.1480 உயர்வு!
சென்னை: தங்கம் விலை இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்த நிலையில் மீண்டும் ரூ.960 அதிகரித்துள்ளது. அதன்படி இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,480 அதிகரித்துள்ளது நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் நேற்று ஆபரண தங்கம் ஒரு சவரனுக்கு ரூபாய் 480 குறைந்தது. கடந்த 5 நாட்களில் ரூபாய் 2,680 விலை குறைந்திருந்தது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

தங்கம் விலை
இந்தியாவில் தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து அதிகரித்து வந்தது. சர்வதேச பொருளாதார நிலைமைக்கு ஏற்ப, அவ்வப்போது தங்கம் விலை பெரிய அளவில் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது, நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் சூழல் போன்றவற்றால் தங்கம் விலை அதிகரித்து வந்தது.
இந்த ஆண்டின் தொடக்கம் முதலே வெகுவாக அதிகரித்து புதிய உச்சங்களை எட்டி வருகிறது தங்கம். ஜனவரி 1 ஆம் தேதி ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை ரூ.57,200 ஆக இருந்தது. தொடர்ந்து அதன் பிறகு அதிரடியாக உயர்வைக் கண்டு வந்தது தங்கம் விலை.
இந்தச் சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்த புதிய வரி விதிப்புகளால் உலக நாடுகளிடையே பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய பங்குசந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் 9 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்தன.
பங்குச்சந்தை சரிவு
பங்குசந்தைகளில் ஏற்படும் சரிவு காரணமாக அனைவரும் பாதுகாப்பான முதலீடு செய்ய விரும்புகின்றனர். இதனால் தங்கத்தின் மீதான முதலீட்டில் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனிடையே தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை கடந்த 5 நாட்களாக குறைந்துள்ளது.
நேற்று மேலும் தங்கம் விலை குறைந்தது. ஏப்ரல் 8 ஆம் தேதியான நேற்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,225-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு சவரன் ரூ.65,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் ஏப்ரல் 9 ஆம் தேதியான இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,290-க்கும், சவரனுக்கு ரூ.520 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.66,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை நிலவரம்
09.04.2025 (தற்போது) - ஒரு சவரன் ரூ.67,260
09.04.2025 (இன்று காலை) - ஒரு சவரன் ரூ.66,300
08.04.2025- ஒரு சவரன் ரூ.65,800
07.04.2025- ஒரு சவரன் ரூ.66,280
06.04.2025- ஒரு சவரன் ரூ.66,480 (ஞாயிற்றுக்கிழமை)
05.04.2025- ஒரு சவரன் ரூ.66,480
04.04.2025- ஒரு சவரன் ரூ.67,200
03.04.2025- ஒரு சவரன் ரூ.68,480
02.04.2025- ஒரு சவரன் ரூ.68,080
01.04.2025- ஒரு சவரன் ரூ.68,080












Click it and Unblock the Notifications