Coimbatore Gold rate: கோவை, மதுரையில் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? பாதியாக குறைவது எப்போது?
மதுரை/கோவை: மதுரை மற்றும் கோயமுத்தூரில் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 7) சவரனுக்கு ரூ 200 குறைந்து, ஒரு சவரன் ரூ 66,280-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் 103-க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களில் சவரனுக்கு ரூ 2200 குறைந்துள்ளது.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் , பணவீக்கம், பொருளாதார மந்தநிலை உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டு முதலே தங்கத்தின் விலை அதிகளவில் ஏற்றம் கண்டு வரும் நிலையில் கடந்த பிப் 1 ஆம் தேதி தங்கம் விலை சவரன் ரூ 62 ஆயிரத்தை தாண்டியது.
ஞாயிற்றுக்கிழமை சந்தை விடுமுறை
தங்கத்தின் விலை தினந்தோறும் மாற்றம் கண்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் சர்வதேச சந்தைக்கு விடுமுறை என்பதால் அன்றைய தினம் மட்டும் தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் இருக்கும்.
சென்னை, கோவை, மதுரை தங்கம் விலை
சென்னை, கோவை, மதுரையில் தங்கம் விலை குறித்த விவரங்கள் தினந்தோறும் வெளியாகிறது. அந்த வகையில் மதுரை மற்றும் கோவையில் ஏப்ரல் 7ஆம் தேதி 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 200 உயர்ந்து ஒரு சவரன் விலை ரூ 66,280-க்கு விற்பனையானது. அது போல் கிராமுக்கு ரூ 25 குறைந்து, ஒரு கிராம் ரூ 8,285-க்கு விற்பனையாகிறது.
ரூ 2000 குறைவு
கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை கடந்த இரு தினங்களாக சவரனுக்கு ரூ 2000 குறைந்தது. நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் விடுமுறையால் தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் இருந்த நிலையில் இன்று முதல் நாளே தங்கம் விலை குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை
கோவையிலும் மதுரையிலும் 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ 9,038-க்கும், ஒரு சவரன் விலை ரூ 72,304-க்கும் விற்பனையாகிறது. அது போல் கோவையில் 18 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ 6,830-க்கும், ஒரு சவரன் விலை ரூ 54,640-க்கும் விற்பனையாகிறது. கடந்த மார்ச் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக மார்ச் 1ஆம் தேதி ரூ 63,520-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக கடந்த 31 ஆம் தேதி ரூ 67,600-க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.
புதிய உச்சம்
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வந்ததற்கு காரணம் அதற்கான டிமான்ட் அதிகம் உள்ளது. இதனால் சர்வதேச சூழலுக்கு ஏற்ப விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. தங்கத்தின் மீதான முதலீட்டை திரும்பப் பெறுவது போன்ற காரணங்களால்தான் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது.
தங்கத்தின் விலை 38 சதவீதம் வரை குறையும் என அமெரிக்க பங்கு சந்தை நிபுணர் ஜான் மில்ஸ் கணித்துள்ளார். ஒரு அவுன்ஸ் 3,080 டாலரிலிருந்து 1,820 டாலரை வரை குறையலாம் என அவர் கணித்திருக்கிறார்.
கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
07.04.2025- ஒரு சவரன் ரூ.66,280
06.04.2025- ஒரு சவரன் ரூ.66,480 (ஞாயிற்றுக்கிழமை)
05.04.2025- ஒரு சவரன் ரூ.66,480
04.04.2025- ஒரு சவரன் ரூ.67,200
03.04.2025- ஒரு சவரன் ரூ.68,480
02.04.2025- ஒரு சவரன் ரூ.68,080
01.04.2025- ஒரு சவரன் ரூ.68,080
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications