இன்னும் 5 நாள்தான்.. ஏப்ரல் முழுக்க தங்கம் விலை தறிகெட்டு உயரப்போகுது.. வல்லுனர்கள் கணிப்பு
சென்னை: ஏப்ரல் மாதம் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் ஒரு அவுன்ஸ் தங்கம் அமெரிக்க விலையில் $3,100-ஐ எட்டக்கூடும். தற்போது இது 3000 டாலராக உள்ளது.
ஒரு அவுன்ஸ் ஸ்பாட் தங்கம் 1000 (GMT) இல் ஒரு அவுன்ஸ் $3,024.39 ஆக இப்போது உள்ளது. அடுத்த ஏப்ரல் மாதம் முழுக்க தங்கத்தின் விலை தாறுமாறாக உயரும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க சந்தைகளில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,60,164 ஆக உயர்ந்து உள்ளது. உலக வரலாற்றில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை இவ்வளவு அதிகம் உயர்வது இதுவே முதல்முறை.
1 அவுன்ஸ் என்பது 28 கிராம் ஆகும். அதாவது கிட்டத்தட்ட மூன்றரை பவுன் ஆகும். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கட்டணக் கொள்கைகளால் பொருளாதார நிலையின்மை உண்டாகி உள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பலரும் பாதுகாப்பான முதலீட்டை நோக்கி செல்ல தொடங்கி உள்ளனர். இதனால் அமெரிக்காவில் தங்கத்தின் விலை ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக $3,000 (ரூ. 2.6 லட்சம்) மதிப்பைத் தாண்டி அங்கே விற்பனை ஆகிறது. இதனால் வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் சரியும் அபாயம் உள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க பொருளாதார வல்லுனர்கள் பல கணிப்புகளை வெளியிட்டு உள்ளனர். முக்கியமாக ஏப்ரல் 2ம் தேதி வர்த்தக போர் உச்சம் அடைய உள்ளது. இந்தியா வரியை குறைக்க போவதாக தகவல்கள் வருகின்றன.. அப்படியே இந்தியா வரியை குறைத்தாலும்.. நாங்கள் இந்தியா மீது கண்டிப்பாக வரி விதிப்போம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மீதான கட்டணங்களை இந்தியர்கள் கணிசமாகக் குறைக்கப் போகிறார்கள் என்று நான் நம்புகிறேன், ஆனால் ஏப்ரல் 2 ஆம் தேதி, அவர்கள் எங்களிடம் இப்போது வசூலிக்கும் அதே கட்டணத்தை நாங்கள் அவர்களிடம் வசூலிப்போம்.. அவர்கள் குறைத்தாலும் குறைக்கவிட்டாலும் நாங்கள் இந்தியாவை விட மாட்டோம்.. அவர்கள் வசூலிக்கும் கட்டணம் அளவிற்கு உயர்த்துவோம் என்று டொனால்ட் டிரம்ப் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையில், நாங்கள் விரைவில் பரஸ்பர கட்டணங்களை அறிவிப்போம். ஏனென்றால் அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள், நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறோம்.
இதனால் அதற்கு பின் தங்கம்தான் ஒரே பாதுகாப்பு என்பதால் பலரும் தங்கத்தை நோக்கி ஓடுவார்கள். இதனால் தங்கம் விலை ஏப்ரலில் இருந்து கடுமையாக உயரும்.
தங்கம் விலை உயர்வு
அமெரிக்காவில் வட்டியை நிர்ணயிக்கும் ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டி (FOMC) ஃபெடரல் வட்டி நிதி விகிதத்தை 4.25% முதல் 4.5% வரையிலான இலக்கு வரம்பிற்குள் வைப்பதாக அறிவித்தது. அதாவது தற்போது உள்ள வட்டி விகிதத்தை குறைக்கவோ , ஏற்றவோ இல்லை.
ஆனால் இந்த ஆண்டின் இறுதிக்குள் மொத்தம் 50 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுவும் ரெபோ ரேட் போலத்தான். இந்த வட்டி புள்ளிகள் குறைக்கப்பட்டால்.. கண்டிப்பாக டாலர் மதிப்பு சரியும். வரும் நாட்களில் இனி தொடர்ந்து டாலர் மதிப்பு சரியும்.
இந்த ஆண்டின் இறுதிக்குள் மொத்தம் 50 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்படும் என்று ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டி (FOMC) ஃபெடரல் அறிவித்து விட்டதால் இனி டாலர் விகிதம் சரிவை நோக்கியே செல்லும். இதனால் டாலர் மதிப்பு சரிவது உறுதியாகிவிட்டது. இதனால் தங்கத்தின் மதிப்பிலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். தங்கத்தின் விலை உயரும். வரும் நாட்களில் தங்கத்தின் விலை உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications