இதை பார்க்காமல்.. தங்கத்தை வாங்கவே வாங்காதீங்க.. அமெரிக்காவில் கையில் எடுக்கும் ஃஷேடோ தியரி!
சென்னை: உலக அளவில் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தங்கம் விலை வரும் வருடங்களிலும் தீவிரமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தங்க விலை உயர்விற்கு பின் அமெரிக்காவின் "Shadow Theory" என்ற ஒரு திட்டமும் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனா மீது 100% வரிகளை விதித்து, இந்தியா மீது 50 வரிகளை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளார். அதேபோல் அமெரிக்க மென்பொருள் ஏற்றுமதிக்கான வரம்புகளை டிரம்ப் அறிவித்து உள்ளார். இதனால் உலக மார்க்கெட்டில் தங்கம் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $4,000-ஐ தாண்டி மேலும் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வர்த்தக மோதலால் டாலர் மதிப்பு சரிந்து வருகிறது. இதன் விளைவாக சந்தைகள் சரிந்துள்ளது, இதனால் முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பாதுகாப்பான முதலீடுகளை நாடி உள்ளனர்.

தங்கம் விலை உயர்விற்கு காரணம்?
பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி மந்தநிலை, மற்றும் அமெரிக்க மத்திய வங்கி விரைவில் வட்டி விகிதங்களைக் குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு போன்ற உலகளாவிய கவலைகளின் பிரதிபலிப்பே இந்த தங்கம் விலை உயர்வுக்கு காரணம் தங்கம் மீண்டும் ஒருமுறை மிகப்பெரிய பாதுகாப்பான முதலீடாக மாறியுள்ளது. டாலர் அல்லது பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம் ஏற்படும் என்று மக்கள் பயப்படும்போது, அவர்கள் தங்கத்தின் பக்கம் திரும்புவார்கள்.
இந்தத் தங்க விலை உயர்வில் சீனாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டிலிருந்து அந்நாட்டின் மத்திய வங்கி தனது தங்க இருப்புக்களைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் மூலம் அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதை சீனா குறைத்து வருகிறது. இதுவும் தங்கம் விலை உயர்விற்கு காரணம் ஆகும்.
தங்கம் பொருளாதார நிபுணர் எட் யார்டெனி
பொருளாதார நிபுணர் எட் யார்டெனி, தங்கத்தின் விலை 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒரு அவுன்ஸ் $5,000 ஆகவும், 2028-ஆம் ஆண்டுக்குள் $10,000 ஆகவும் (சுமார் ₹8,87,000) உயரும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். இது 10 கிராம் தங்கத்தின் விலை ₹3.1 லட்சமாக உயரும் என்பதைக் குறிக்கும், ஏனெனில் ஒரு அவுன்ஸ் என்பது 28 கிராமுக்குச் சமம். அதாவது ஒரு சவரன் கிட்டதட்ட ரூ.2.5 லட்சம் ஆக உயரும்.
மத்திய வங்கிகள் தங்கள் சர்வதேச கையிருப்புகளில் தங்கத்தின் சதவீதத்தை அதிகரித்து வருவதே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என்று யார்டெனி சுட்டிக்காட்டினார். இது தங்கத்தின் மீதான உலகளாவிய தேவையைத் தூண்டி, அதன் விலையை மேலும் அதிகரிக்கக்கூடும் என அவர் கணித்துள்ளார்
தங்கம் விலை எச்சரிக்கை
தங்கம் விலை 2028-ம் ஆண்டுக்குள் அவுன்ஸ் ஒன்றுக்கு $10,000 (சுமார் ₹8.89 லட்சம்) என்ற உச்சத்தை எட்டக்கூடும் என அவர் கணித்துள்ளார். இந்த ஏற்றம், தற்போதைய போக்கு தொடர்ந்தால் 150% வளர்ச்சியாக இருக்கும் என்று கூறி உள்ளார். இந்த தங்க விலை உயர்விற்கு பின் அமெரிக்காவின் "Shadow Theory" என்ற ஒரு திட்டமும் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதாவது அமெரிக்கா தனது கையிருப்பில் உள்ள 8000 டன் தங்கத்தின் விலையை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளது. இப்போது இதன் விலையை 1 கிராமிற்கு 120 ரூபாய் என்று அமெரிக்கா கணக்கில் வைத்துள்ளது. இதை அமெரிக்கா விரைவில் உண்மையான விலையான 12000- 12500 ரூபாய் என்று நிர்ணயிக்க வாய்ப்புள்ளது. அப்படி செய்யும் பட்சத்தில் தங்கத்தின் விலை கட்டுக்கடங்காமல் உயரும். சர்வதேச அளவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
இதை பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை காணவும்!
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications