பில் இல்லாத பழைய நகைகளை.. இனி அடகு வைப்பது எப்படி? ஆர்பிஐ கொண்டு வரும் விதி.. பெரிய சிக்கல்!
சென்னை: ஆர்பிஐ கொண்டு வந்திருக்கும் தங்க நகை கடனை அடகு வரைவு விதிகளால் மக்கள் பலரும் பழைய தங்க நகைகளை அடகு வைப்பது சிக்கலாக மாறி உள்ளது. பலரும் பில் இல்லாத பழைய நகைகளை அடகு வைப்பது சிக்கல் ஆகி உள்ளது.
ஆர்பிஐ கொண்டு வந்திருக்கும் தங்க நகை கடனை அடகு வரைவு விதிகளின் படி பில் இல்லாத நகைகளை அடகு வைக்க முடியாது. ஒரு நகையை அடகு வைக்கிறீர்கள் என்றால்., அதன் பில் உங்களிடம் இருக்க வேண்டும். இல்லையென்றால் நகை அடகு கடைகள் உங்கள் நகையை எடுத்துக்கொள்ளாது. உதாரணமாக உங்களிடம் 40 வருட பழைய நகை இருக்கலாம்.
அதன் பில் இல்லாமல் போகலாம். ஆனால் அதை அவசரத்திற்கு அடகு வைக்க வேண்டும் என்றால் சிக்கல் ஏற்படலாம். ஆனால் ஆர்பிஐயின் இந்த வரைவு விதியில் சில சலுகைகள் கொண்டு வரப்படலாம் என்று கூறப்படுகிறது. பின்வரும் ஆவணங்களை கொடுத்து நீங்கள் உங்கள் பழைய நகைகளை அடகு வைக்கலாம் என்ற சலுகை கொண்டு வரப்படலாம் என்று கூறப்படுகிறது.
KYC ஆவணங்கள்: உங்கள் அடையாளம் மற்றும் முகவரியைச் சரிபார்க்க ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் ஐடி அல்லது பில்கள் போன்ற நிலையான KYC ஆவணங்களை வழங்கவும்.

உரிமைப் பிரகடனம்: பில் இல்லாத நிலையில், தங்கம் உங்கள் உரிமையான சொத்து என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு ஃபார்மில் நீங்கள் கையெழுத்திட வேண்டும். இந்த தங்கம் என்னுடையதுதான்.. அதை நான் வேறு எவரிடம் இருந்தும் பெறவில்லை. இது எனக்கு சொந்தமானது என்று நீங்கள் கையெழுத்திட வேண்டும்.
தங்க மதிப்பீடு: கடன் வழங்குபவர் உங்கள் தங்கத்தின் தூய்மை மற்றும் எடையை எக்ஸ்-ரே ஃப்ளோரசன்ஸ் (XRF) சோதனை போன்ற முறைகளைப் பயன்படுத்தி மதிப்பிடுவார். இந்த மதிப்பீடு தங்கத்தின் மதிப்பைத் தீர்மானிக்கிறது. சிலர் கைகளில் வைத்தே மதிப்பிடுவார்கள். பொதுவாக, கடன் வழங்குபவர்கள் RBI வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, தங்கத்தின் மதிப்பிடப்பட்ட மதிப்பில் 75% வரை வழங்குவார்கள்.
இதன் வழியாக நீங்கள் உங்களது பில் இல்லாத நகைகளை பெறுவதற்கு ஏற்ற வகையில் சலுகைகள் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
விதிகள் என்னென்ன?
தங்க நகை லோன் வழங்குவதற்கு ஆர்பிஐ புதிய வரைவு விதிமுறைகளை வெளியிட்டு உள்ளது. இந்த வரைவு விதிமுறைகள் அமலுக்கு வரும் பட்சத்தில், நகையை அடகு வைத்து கடன் வாங்குவது மிகவும் கடினமான விஷயமாக மாறும்.
ஆர்பிஐ வெளியிட்ட இருக்கும் புதிய வரைவு விதியின்படி தங்க நகை மதிப்பில் 75% வரை தான் கடன் கொடுக்க வேண்டும். அதாவது பல நகை கடன் கடைகள் 80 சதவிகிதத்திற்கும் மேல் கடன் வழங்குகின்றனர். தெரிந்த முகங்கள், நண்பர்கள், பாரம்பரிய வாடிக்கையாளர்கள் என்ற காரணங்களுக்காக பல நகை கடன் கடைகள் 80 சதவிகிதத்திற்கும் மேல் கடன் வழங்குகின்றனர். ஆனால் இனி அப்படி வழங்க முடியாது.
உங்களின் நகை 1 லட்சம் ரூபாய் என்றால்.. அதில் 75 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே கடன் வழங்க முடியும். அதேபோல் தங்கம் விலை இன்று திடீரென உயருகிறது என்றால்.. உதாரணமாக இன்று 10000 ரூபாய் உயருகிறது என்றால்.. அதை வைத்து நீங்கள் நகையை அடகு வைக்க முடியாது. கடந்த ஒரு மாத தங்க விலையை சராசரியாக கணக்கிட்டு மதிப்பிட வேண்டும். அதாவது கடந்த 1 மாதத்தில் தங்கத்தின் விலை எவ்வளவு இருக்கிறது என்ற சராசரியாக பார்த்துவிட்டு மட்டுமே கடன் கொடுக்க வேண்டும்.
அதேபோல் நீங்கள் வெறுமனே போய் எல்லா இடத்திலும் நகை அடகு வைக்க முடியாது. நகையை அடகு வைக்க அதன் பில்லை காட்ட வேண்டும். அந்த பில்லில் கடன் கேட்பவரின் பெயர் அவரின் தந்தை பெயர் இருக்க வேண்டும். நகையின் விவரங்கள் அனைத்தும் அந்த கடன் பத்திரத்தில் இருக்க வேண்டும்.
தங்க நகை பற்றிய முழு விவரமும் கடன் ஆவணத்தில் இருக்க வேண்டும். அதேபோல் ஒரு நகை மீது புதிய கடன் வாங்க அதன் மீது முழு வட்டியும் செலுத்த வேண்டும். தங்க பார்களை அடகு வைக்க முடியாது என்ற விதிகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications