தங்கம் விலை அவ்ளோதான்! 2 பெரிய சம்பவங்கள்.. இந்தியா + அமெரிக்கா.. இனி நினைச்சாலும் வாங்க முடியாது

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா பாகிஸ்தான் போர், அமெரிக்காவின் வட்டி விகித நடவடிக்கைகள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,834 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹9,014 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,434 ஆகவும் உள்ளது.

ஒரு பக்கம் அமெரிக்கா

அமெரிக்காவில் வரி விகிதம் குறைக்கப்படும் என்று பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த காலாண்டில் வரி விகிதம் குறைக்கப்பட்டது என்று அந்நாட்டு பெடரல் வங்கி அறிவித்துள்ளது.

வர்த்தகப் போர், நாட்டில் மந்தமான பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலையற்ற பணவீக்கப் போக்குகள் ஆகியவற்றால் வரி விகிதத்தை குறைக்க மாட்டோம் என்று அந்நாட்டு பெடரல் வங்கி அறிவித்துள்ளது. அந்நாட்டு வட்டி விகிதங்களை 4.25% முதல் 4.5% வரை மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்துள்ளனர்.

தீவிரம் அடைந்த சண்டை:

ஏற்கனவே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டு மத்திய வங்கி.. அதாவது இந்தியாவின் ரிசர்வ் வங்கி போன்ற அமைப்பிடம் கடுமையான மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவலுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்து உள்ளார் டொனால்ட் டிரம்ப்.

மத்திய வங்கி மீது போர் தொடுக்க தயாராக இருப்பதாக அவர் வெள்ளை மாளிகை அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளாராம். அவர் விடுத்த எச்சரிக்கையில் அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கி உடனே வரியை குறைக்க வேண்டும். வரி மதிப்பை (நம் நாட்டின் ரெப்போ ரேட் போல) உடனே குறைக்க வேண்டும். இல்லையென்றால் அவரை நீக்க வேண்டி இருக்கும்.

அந்த மத்திய வங்கி வேண்டும் என்றால் சுதந்திரமான அமைப்பாக இருக்கலாம். ஆனால் நான் நினைத்தால் அவரை நீக்க முடியும். அவரை நீக்கி விட்டு வரியை குறைக்க சொல்ல முடியும். அடுத்த சில வாரங்களுக்குள் வரியை குறைக்கவில்லை என்றால் கடுமையான விளைவுகளை அந்த வங்கி சந்திக்கும் என்று அவர் கூறி உள்ளார்.

இதற்கு பவல் அளித்த பதிலில், நாங்கள் வரி குறைப்பை பல ஆலோசனைக்கு பின்பே எடுப்போம். டிரம்ப் சொல்கிறார் என்பதால் செய்ய முடியாது. அதோடு 2026 மே வரை என் பதவிக்காலம் இருக்கிறது. அதற்கு முன் நான் ராஜினாமா செய்யும் திட்டத்தில் இல்லை என்று கூறி உள்ளார்.

India Pakistan war and US Federal bank interest rate will affect Gold Rate massively

வட்டி விகிதம் குறையாது

இப்படிப்பட்ட நிலையில்தான் அந்நாட்டு வட்டி விகிதங்களை 4.25% முதல் 4.5% வரை மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்துள்ளனர். வட்டி விகிதம் பொதுவாக குறைந்தால் டாலர் மதிப்பு சரியும். டாலர் மதிப்பு சரிந்தால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்வார்கள். இதனால் தங்கள் விலை உயரும்.

ஆனால் இங்கே அப்படியே எதிர்மறையாக நடந்துள்ளது. வட்டி விகிதம் பொதுவாக குறைக்கப்படாமல் போனால் டாலர் மதிப்பு உயரும். டாலர் மதிப்பு உயர்ந்தால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்ய மாட்டார்கள். இதனால் தங்கம் விலை சரியும் அபாயம் ஏற்பட்டு உள்ளது

இன்னொரு பக்கம் இந்திய போர்

இந்தியா பாகிஸ்தான் இடையே அறிவிக்கப்படாத போர் மூண்டு உள்ளது. இதனால் தங்கம் விலை உயருமா மாறுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. பொதுவாக எந்த நாடாக இருந்தாலும் அந்த நாடு போரில் நேரடியாக ஈடுபட்டால் அவர்களின் பண மதிப்பு குறையும். அவர்கள் ஆயுதங்களை வெளிநாடுகளில் இருந்து வாங்குவதால் டாலர் கையிருப்பு குறையும்.

இதனால் பண மதிப்பு கண்டிப்பாக சரியும். பண மதிப்பு சரிந்தால் தங்கம் விலை புதிய உயரத்தை அடையும். இந்தியா பாகிஸ்தான் போரில் ஈடுபட்டால் இரண்டு நாடுகளின் பண மதிப்பும் சரியும். இதனால் டாலர் கையிருப்பும் குறையும். ஏனென்றால் இரண்டு நாடுகளுமே மேற்கு உலக நாடுகளிடம் இருந்துதான் ஆயுதங்களை வாங்குகின்றன. போர் வந்தால் இரண்டு நாட்டு வர்த்தகம் சரியும். பங்குச்சந்தை சரியும், பண மதிப்பு சரியும். இதனால் கண்டிப்பாக இரண்டு நாடுகளிலும் தங்கம் மதிப்பு உயரும்.

தங்கம் முக்கியம்

1. தங்கம் விலை தொடர்ந்து உயர்வதால் உங்கள் வீட்டில் உள்ள சிறிய சிறிய தங்கம் தொடங்கி பெரிய தங்கம் வரை அனைத்தின் மதிப்பும் வேகமாக உயரும்.

2. SIP தொடங்கி தினசரி trading வரை எந்த ஒரு முதலீட்டிலும் வர முடியாத அளவிற்கு இதில் உங்களுக்கு வீட்டில் இருந்தபடியே வருவாய் வரும்.

3. கடந்த 1 வருடத்தில் மட்டும் தங்கத்தின் விலை 30% அதிகரித்து உள்ளது. இந்த அளவிற்கு ரிட்டர்ன் கொடுக்க கூடிய முதலீடு எதுவும் இல்லை. இதெல்லாம் உங்களுக்கு அடிக்கும் ஜாக்பாட் என்றுதான் சொல்ல வேண்டும்.

4. உங்கள் வீட்டில் உள்ள சின்ன தங்கம் கூட.. உங்களுக்கு மிகப்பெரிய பொருளாதார பாதுகாப்பு. தேவையான நேரங்களில் இதை அடகு வைத்து liquid cash ஆக மாற்றிக்கொள்ள முடியும். பின்னர் மீட்டுக்கொள்ள முடியும்.

5. பொதுவாக உலகம் முழுக்க நிலவும் பொருளாதார பிரச்சனை காரணமாக பணத்தின் மதிப்பு குறையும். அதாவது பணம் என்பது பேப்பர்தான். பணவீக்கம் காரணமாக இன்று நீங்கள் 100 ரூபாய்க்கு வாங்கிய பொருளின் விலை அடுத்த சில மாதங்களில் 200 ரூபாய்க்குத்தான் கிடைக்கும். இந்தியா பாகிஸ்தான் போர் சமயத்தில் அது மேலும் சரியும்.

6. இதன் அர்த்தம் உங்கள் பண மதிப்பு சரியும். அதுவே பணத்தை சேமிப்பதற்கு பதிலாக தங்கத்தை சேமித்தால்.. தங்கம் அதே நேரத்தில் மதிப்பு உயரும்.

7. போர் வரும் போதெல்லாம் பொருளாதார சரிவு ஏற்பட்டு பணம் மதிப்பு சரியும் போதெல்லாம் தங்கத்தின் மதிப்பு உயர்வது வழக்கம். எனவே உங்கள் வீட்டில் உள்ள சிறிய சிறிய தங்கத்தையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது முக்கியம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+