தங்கம் விலை கூடிட்டேன்னு நினைக்காதீங்க.. இது மட்டும் நடந்தால் ரேட் சட்டென விழுந்துரும்! எக்ஸ்பர்ட்ஸ்
சென்னை: நாள்தோறும் புது உச்சம் தொட்டு வரும் தங்கம் விலையால் நகை பிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். தொடர்ந்து இப்படியே தங்கம் விலை அதிகரித்துக்கொண்டே செல்லுமா? அல்லது தங்கம் விலை குறையுமா? என நகை பிரியர்கள் எதிர்பார்த்து இருக்கும் நிலையில் தங்கம் விலை கூடிக்கொண்டே இருக்குன்னு நினைக்காதீங்க.. ஒன்று நடந்தால் டக்கென்று விலை குறைந்துடும் என்று விபி ரிசர்ச் அனலிஸ்ட் ஜதீன் திரிவேதி கூறியுள்ளார்.
தங்கம் விலையானது வரலாறு காணாத உச்சத்தை மீண்டும் தொட்டு இருக்கிறது. கடந்த இரு தினங்களாக தங்கம் விலை குறைந்தது வந்ததால், இது தங்கம் வாங்குவோருக்கு கொஞ்சம் நிம்மதியை கொடுத்தது. தங்கம் விலை இன்றும் 3வது நாளாக குறையுமா என எதிர்பார்ப்புடன் இருந்தவர்களுக்கு ஒரேயடியாக அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அதிரடியாக உயர்ந்து விட்டது.

குறைய வாய்ப்பு உள்ளதா?
ஏப்ரல் 16-ஆம் தேதி (இன்று) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ஒரு சவரன் விலை ரூ.70 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது. அது போல் கிராமுக்கு ரூ.95 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,815-க்கு விற்பனையாகிறது. கடந்த இரு தினங்களாக தங்கம் விலை குறைந்து கொண்டே இருந்த நிலையில் தற்போது புதிய உச்சம் பெற்றுள்ளது. தங்கம் விலையானது மீண்டும் ஏறுமுகத்தை சந்தித்து இருக்கிறது.
இடையிடையில் குறைந்தாலும் கூட கூடும் நாட்கள்தான் அதிகமாக உள்ளது. இதனால் தினம் தினம் புதிய உச்சத்தில் இருக்கிறது விலை... இப்படியே விலை உயர்ந்தால் சீக்கிரமாகவே தங்கம் விலை 1 லட்சத்தை தொட்டாலும் வியப்பதற்கு இல்லை என்பது வல்லுனர்களின் கருத்தாக உள்ளது. தங்கம் விலை இப்படியே தொடர்ந்து அதிகரிக்குமா? இல்லை குறைய வாய்ப்பு உள்ளதா? என்று விபி ரிசர்ச் அனலிஸ்ட் ஜதீன் திரிவேதி விவரித்துள்ளார்.
திடீர் வீழ்ச்சியை காணலாம்
இது பற்றி அவர் கூறுகையில், "சீனா - அமெரிக்கா வர்த்தக போர் காரணமாக ஏற்பட்டுள்ள பதற்றத்தால் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதி பலரும் அதில் முதலீடுகளை குவிக்க தொடங்கியுள்ளனர். இதுவே தற்போதைய விலையேற்றத்திற்கு காரணமாக உள்ளது. வர்த்தக போர் என்ற பதம் நீடிக்கும் வரையிலும் பரஸ்பர வரி நீடிக்கும் வரையிலும் தங்கம் விலை உச்சத்தில் இருக்கவே வாய்ப்பு உள்ளது. எனினும், வர்த்த விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை நோக்கி கவனம் திரும்பும் நேரத்தில் விலையில், திடீர் வீழ்ச்சியை நாம் காணலாம்" என்றார்.
பரஸ்பர வரி விதிப்பு
கடந்த ஆண்டு ரூ.55 ஆயிரம் என்ற ரேஞ்சில் விற்பனையானது. ஆனால் இந்த ஆண்டு துவக்கத்திலேயே 60 ஆயிரத்தை தொட்டது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து அவர் மேற்கோண்டு வரும் பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கைகளால் சர்வதேச அளவில் பொருளாதார நிச்சயமற்ற தன்மை அதிகரித்துள்ளது. இதனால், தங்கம் விலையானது கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு கிடு கிடுவென அதிகரித்து வருகிறது.
65 ஆயிரத்தை விலை தொட்டு விடுமோ என்ற அச்சப்பட்ட காலம் போய் எங்கு 75 ஆயிரத்தை எப்போது தொடுமோ என நினைக்கும் அளவிற்கு விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்கா - சீனா வர்த்தக போர் காரணமாக ஏற்பட்ட டாலரின் வீழ்ச்சி மற்றும் பரஸ்பர வரி விதிப்பு காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 3 நாட்களில் கிட்டத்தட்ட 3% உயர்ந்து தங்கம் தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் உச்சம் அடைந்து வருகிறது.
-
கோவை குப்பைக்குள் மின்னிய 3 சவரன்.. அப்படியே ஒப்படைத்த தங்கம்! தூய்மை பணியாளருக்கு குவியும் பாராட்டு -
Gold Price: திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சி! சென்னையில் சவரன் என்ன ரேட்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications