அமெரிக்காவிற்கு மிகப்பெரிய லாபம்... தங்கம் விலை உயராமல் இருக்க என்ன காரணம் தெரியுமா?
சென்னை: அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் உச்சத்தில் இருந்த போதிலும் தங்கம் விலை உயராமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். பொதுவாக போர் வந்தால் தங்கம் விலை உயரும். ஆனால் அதற்கு எதிர்மாறாக தங்கம் விலை கடந்த 12-ந் தேதியில் இருந்து விலை குறைந்து கொண்டே வருவதை பார்க்க முடிகிறது. அதன்படி, தொடர்ந்து 3 நாட்களில் கிராமுக்கு ரூ.360-ம், பவுனுக்கு ரூ.2 ஆயிரத்து 880-ம் குறைந்துள்ளது. பொருளாதாரச் சந்தையில் ஒரு முக்கியமான விதிதான் இதற்கு காரணம்.. இதுபற்றி விரிவாக பார்ப்போம்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரான் மீது போர் தொடுத்துள்ளன. பதிலுக்கு ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவிற்கு சொந்தமான எண்ணெய் கிணறுகள், விமான நிலையங்கள், ராணுவ முகாம்கள் ஆகியவற்றை குறிவைத்து தாக்கி வருகிறது. பொதுவாக போர் வந்தால் தங்கம் விலை கடுமையாக ஆனால் இப்போது போர் பதற்றம் அதிகமாக இருக்கும் நிலையிலும் விலை பெருமளவில் உயரவும் இல்லை. போர் தொடங்கிய பின்னர் கடந்த 15 நாட்களாகவே விலை குறைந்து வருவதையும் பார்க்க முடிகிறது.

டாலரின் மதிப்பு உயர்வு
இதற்கு காரணம் என்ன? என்பது குறித்து பொருளாதார நிபுணர்கள், வியாபாரிகள் கூறிய தகவல்களை பார்க்கலாம்.. சர்வதேச சந்தையில் தங்கம் அமெரிக்க டாலரிலேயே வர்த்தகம் செய்யப்படுவது வழக்ககம் போர்ச்சூழலால் நிலவும் நிச்சயமற்ற தன்மையால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கம் மற்றும் அமெரிக்க டாலர் என இரண்டையுமே கருதுகிறார்கள். தற்போது கச்சா எண்ணெய் தட்டுப்பாடு பிரச்சனை காரணமாக அமெரிக்க டாலரின் மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. டாலர் வலுவடையும்போது, மற்ற நாட்டு நாணயங்களை (ரூபாய் போன்றவை) வைத்திருப்பவர்களுக்கு தங்கம் விலை அதிகமாகிவிடும். இதனால் தங்கம் குறைந்து விலை கட்டுக்குள் இருக்கும்
அமெரிக்கா வட்டி விகிதம்
போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரைத் தாண்டியுள்ளது. இது உலக அளவில் பணவீக்கத்தை அதிகரிக்கிறது. பணவீக்கம் அதிகரிக்கும்போது அதைக்கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்காமல் நீண்டகாலத்திற்கு உயர்த்திவைப்பது வழக்கம். வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும்போது, வட்டி தராத தங்கத்தின் மீது முதலீடு செய்வது லாபகரமாக இருக்காது என்பதால் முதலீட்டாளர்கள் அதிலிருந்து விலகிவிடுகிறார்கள். அதேநேரம் வங்கிகளில் அல்லது கடன் பத்திரங்களில் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் போது, வட்டி தராத தங்கத்தின் மீது முதலீடு செய்ய பெரிய நிறுவனங்கள் விரும்புவதில்லை. இது தங்கம் விலையைக் குறைக்கிறது.
தங்கத்தை விற்று லாபம் பார்த்தனர்
அதேபோல் கடந்த 2025-ம் ஆண்டு முதலே தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. போர் தொடங்கிய ஆரம்ப நாட்களில் தங்கம் விலை புதிய உச்சம் அடைந்தது. அந்த உச்சநிலையில் இருந்தபோது, பல பெரிய முதலீட்டாளர்கள் தங்கள் கையில் இருந்த தங்கத்தை விற்று லாபம் பார்த்தார்கள். இதுவே விலை சரிவுக்கு காரணம் ஆகும். அதாவது தங்கம் விலை உயர்ந்தது. அது போருக்கு முன்பே நடந்துவிட்டது. அதனால் போர் வந்த பின்னர் லாபம் பார்க்க மட்டுமே பயன்பட்டது. இதுவும் விலை குறைய காரணமாக அமைந்தது.
பொருளாதார விதி
சந்தையில் ஏதேனும் ஒரு நிகழ்வு முன்கூட்டியே கணிக்கப்பட்டால், அதன் தாக்கம் ஏற்கனவே விலையில் தாக்கம் தெரியும் என்பது பொருளாதார விதி.. அமெரிக்கா-ஈரான் மோதல் நீண்ட நாட்களாகவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. எனவே முன்கூட்டியே தங்கத்தின் விலையில் சேர்ந்துவிட்டது. எனவே போர் தொடங்கியவுடன் பெரிய அளவில் மாற்றம் ஏற்படாமல் போனது. இருப்பினும், போர் நீண்ட காலத்திற்குத் தொடர்ந்தால், தங்கம் மீண்டும் ஒரு பாதுகாப்பான முதலீடாக மாறி விலை உயரும் அபாயம் இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
-
8 கிராம் தங்கம் + பட்டுப் புடவை திட்டம்.. தவெக அரசு திருமண உதவித் திட்டம் விரைவில் தொடக்கம் -
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
தங்கம் இப்போ வாங்கலாமா? 2 மாத சரிவில் தத்தளிக்கும் கோல்டு ரேட்.. மக்கள் என்ன செய்ய வேண்டும்? -
கோடம்பாக்கத்தில் காதல் பிரச்சனை.. ரொக்க பரிசு... இறுதியாக இரண்டு பேர் போன இடம் புழல் சிறை -
தங்கம் விலை இனி உயருமா? உயராதா? அடுத்த 1 வருடத்தில் நடக்க போகும் சம்பவம்.. ராக்ஃபெல்லர் வார்னிங் -
Gold Price: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. 3-வது நாளாக குறைந்தது.. சென்னையில் ஒரு சவரன் என்ன ரேட்? -
கோவை குப்பைக்குள் மின்னிய 3 சவரன்.. அப்படியே ஒப்படைத்த தங்கம்! தூய்மை பணியாளருக்கு குவியும் பாராட்டு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications