அணு ஆயுதத்தை விட தங்கம்தான் பவர் புல்.. இந்த 8 நாடுகள்தான் உலகை ஆட்டிப்படைக்க போகுது! கோல்டு அரசியல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வதேச அளவில் பெரிய ஆயுதங்களை, அணு ஆயுதங்களை வைத்து இருக்கும் நாடுகளை விட, தங்கத்தை அதிக அளவில் வைத்து இருக்கும் நாடுகள்தான் உலக அரசியலை கட்டுப்படுத்தும் என்று உலக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

உலக தங்க கவுன்சிலின் சமீபத்திய தரவுகளின்படி, உலகின் முதல் எட்டு பெரிய தங்க இருப்பு வைத்திருக்கும் நாடுகள், கிட்டத்தட்ட 25,000 டன் உலோகத்தை கூட்டாகக் கட்டுப்படுத்துகின்றன. இது இதுவரை வெட்டி எடுக்கப்பட்ட மொத்த தங்கத்தில் சுமார் 20% ஆகும். இது வெறும் பொருளாதாரம் பற்றியது மட்டுமல்ல. உலக அரசியலை இந்த நாடுகள்தான் தீர்மானிக்க போகின்றன.

gold rate silver investment

தங்க இருப்பில் அமெரிக்கா இன்னமும் முன்னணியில் உள்ளது. அமெரிக்கா 8,133.46 டன் தங்கத்துடன் மற்ற நாடுகளை விட முன்னணியில் உள்ளது. இந்த எண்ணிக்கை பல வருடங்களாக மாறாமல் உள்ளது. பெரும்பாலும் ஃபோர்ட் நாக்ஸ் மற்றும் நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கியில் சேமிக்கப்பட்டுள்ள இந்த தங்கம் மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்க கருவூலத்தின் தங்க இருப்பு மதிப்பு 1 டிரில்லியன் டாலரைத் தாண்டிவிட்டது. ஃபோர்ட் நாக்ஸ் கருவூலத்தில் மட்டும் 4000 டன் தங்கத்தை அமெரிக்கா சேமித்து வைத்து உள்ளது. இந்த ஆண்டு தங்கத்தின் விலை 45 சதவீதம் உயர்ந்து, ஒரு அவுன்ஸ் 3,825 டாலராக எட்டியுள்ளது. இதன் விளைவாக, அமெரிக்க அரசாங்கத்தின் தங்க இருப்பு மதிப்பு இதுவரை இல்லாத சாதனை அளவை எட்டியுள்ளது.

உலக அரசியலை கட்டுப்படுத்தும் 12 நாடுகள்

அதிக தங்க இருப்பு வைத்திருக்கும் 12 நாடுகளின் எளிய பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது. :

அமெரிக்கா - 8,133 டன்கள்

ஜெர்மனி - 3,353 டன்கள்

இத்தாலி - 2,452 டன்கள்

பிரான்ஸ் - 2,437 டன்கள்

ரஷ்யா - 2,330 டன்கள்

சீனா - 2,260 டன்கள்

சுவிட்சர்லாந்து - 1,040 டன்கள்

ஜப்பான் - 846 டன்கள்

இந்தியா - 800 டன்கள்

நெதர்லாந்து - 612 டன்கள்

துருக்கி - 590 டன்கள்

தைவான் - 423 டன்கள்

சீனா வேகம்

சர்வதேச அளவில் பெரிய ஆயுதங்களை, அணு ஆயுதங்களை வைத்து இருக்கும் நாடுகளை விட, தங்கத்தை அதிக அளவில் வைத்து இருக்கும் நாடுகள்தான் உலக அரசியலை கட்டுப்படுத்தும் என்று உலக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதை மனதில் வைத்தே சீனாவின் மத்திய வங்கி தொடர்ந்து தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. இடையில் கொஞ்சமாக தங்கத்தை மார்க்கெட்டில் விற்ற சீனா மீண்டும் தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளது. சீனாவின் மத்திய வங்கி, மே மாதத்தில் தனது தங்க இருப்பை பல மாடனுக்கு அதிகரித்ததாக தகவல் வெளியிட்டது. இந்த நடவடிக்கை, தங்கத்தின் மீதான சீனாவின் ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது.

தங்க இருப்பு சேகரிப்பில் சீனாவின் வியூகம்

கடந்த ஆண்டில் தங்கத்தை வாங்குவதை சீன மத்திய வங்கி தீவிரமாக கையாண்டுள்ளது. இதன் மூலம் தங்கத்தின் இருப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தங்கத்தின் இருப்பு அதிகரிப்பது உலகப் பொருளாதாரத்தில் சீனாவின் செல்வாக்கை பிரதிபலிக்கிறது. அதோடு சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயரவும் காரணமாக அமைந்து விடுகிறது.

சீனா தங்கம் வாங்குவதால் தேவை அதிகரித்து, அதன் விலையும் உயருகிறது. உலக தங்க கவுன்சிலின் முதுநிலை ஆய்வாளர் கிரிஷன் கோபால், மே மாதத்தில் கிட்டத்தட்ட 2 டன் தங்கம் சீனாவால் வாங்கப்பட்டுள்ளது என்று கூறினார். இதன் மூலம் இந்த ஆண்டில் மட்டும் 17 டன் தங்கம் வாங்கப்பட்டுள்ளது. மொத்த தங்கத்தின் இருப்பு சீனாவில் 2,296 டன்னாக உயர்ந்துள்ளது என்று கிரிஷன் கோபால் தெரிவித்தார்.

மே மாதம் இறுதியில் சீனாவின் தங்க இருப்பின் மதிப்பு 241.99 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஏப்ரல் மாத இறுதியில் இது 243.59 பில்லியன் டாலர்களாக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் தங்கத்தின் விலை உயர்ந்ததால் கையிருப்புகளின் மதிப்பும் அதிகரித்தது.

முன்னதாக, சீன மக்கள் வங்கி 18 மாதங்கள் தொடர்ந்து விடமால் தங்கம் வாங்கியது. பின்பு ஆறு மாதங்கள் கொள்முதல் செய்வதை நிறுத்தியது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு நவம்பர் மாதம் மீண்டும் தங்கத்தை வாங்கத் தொடங்கியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+