இரவோடு இரவாக அமெரிக்கா எடுத்த முடிவு.. தங்கத்தின் விலை தாறுமாறாக உயரப்போகிறது.. என்ன நடந்தது?
நியூயார்க்: சர்வதேச அளவில் அமெரிக்கா எடுத்துள்ள முடிவு தங்கத்தின் விலையை தாறுமாறாக உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் முழுக்க இதனால் தங்கத்தின் விலை உயரும் வாய்ப்புகள் உள்ளன.
அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) அந்நாட்டு வட்டி விகிதங்களை மாற்றாமல் அப்படியே வைத்திருக்க நேற்று முடிவு செய்தது. தொடர்ந்து ஆறாவது முறையாக பெஞ்ச்மார்க் ஃபெடரல் ஃபண்ட்ஸ் விகிதத்தை 4.25%-4.5% என்ற அளவிலேயே பராமரிக்க முடிவு செய்துள்ளது.

வட்டி விகிதக் குறைப்பு குறித்த எதிர்பார்ப்பு
2025 ஆம் ஆண்டில் மொத்தம் 50 அடிப்படைப் புள்ளிகள் வரை வட்டி விகிதக் குறைப்பு இருக்கும் என்று ஃபெடரல் ரிசர்வ் அதிகாரிகள் கணித்துள்ளனர். ஆனால், 2026 ஆம் ஆண்டுக்கான கணிப்பை 25 அடிப்படைப் புள்ளிகளாகக் குறைத்துள்ளனர். முன்னதாக, 50 அடிப்படைப் புள்ளிகள் வரை குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை 1 அடிப்படை புள்ளி கூட குறைக்கப்படவில்லை.
பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களைக் குறைக்கும்போது, முதலீட்டாளர்கள் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் சேமிப்புகளில் குறைந்த வருமானத்தைப் பெறுவார்கள். இதனால் பலர் டாலரை விட்டு வெளியேறுவார்க்ள. இதனால் டாலர் தேவை குறையும். இதனால் தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கும். இப்போது வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை, அதே சமயம் உயர்த்தப்படவும் இல்லை. இதனால் டாலர் மதிப்பில் இப்போது உள்ள நிலையற்ற தன்மை நீடிக்கும்.. இதனால் தொடர்ந்து தங்கத்தின் விலை உயரும் வாய்ப்புகள் உள்ளன.
டாலருக்கான தேவை குறைவு = டாலர் பலவீனமடைகிறது
மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல், டிரம்ப்பின் வரிக் கொள்கைகள் குறித்த நீண்டகால நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. அமெரிக்க பொருளாதாரத்தில் காணப்படும் பலவீனமான அறிகுறிகள் ஆகியவை சவாலான சூழ்நிலையை உருவாக்கியுள்ளன. டாலர் மீது நிச்சயமற்ற தன்மை நிலவி வருவதால் தொடர்ந்து தங்கத்தின் விலை உயரும் வாய்ப்புகள் உள்ளன.
ஈரான் இஸ்ரேல் போர் காரணமாகவும், ரஷ்யா உக்ரைன் போர் காரணமாகவும் உலக நாடுகள் பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி செல்ல தொடங்கி உள்ளன. இந்த போர்களால் பங்கு சந்தைகள் மூச்சு முட்ட தொடங்கி உள்ளன. இதன் காரணமாக, தங்கம் விலை தொடர்ந்து நான்காவது நாளாக உயர்ந்து, கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்து உள்ளது.
அமெரிக்காவில் இன்றும் உயர்ந்த ஸ்பாட் தங்கத்தின் விலை, ஒரு அவுன்ஸ் $3,442.09 ஆக 0.3% உயர்ந்தது. இது ஏப்ரல் 22ஆம் தேதிக்குப் பிறகு கண்ட அதிகபட்ச விலையாகும். அமெரிக்க தங்கத்தின் எதிர்கால விலையும் 0.3% உயர்ந்து $3,461.90 ஆக இருந்தது.
பாதுகாப்பான முதலீடாக தங்கம்
புவிசார் அரசியல் காரணிகள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை நிலவும் காலகட்டங்களில் தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. முதலீட்டாளர்கள் மத்தியில் தங்கத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து காணப்படுகிறது. தற்போது தங்கம் விலை கடந்த சில வாரங்களாக குறைந்து மீண்டும் தங்கம் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வருகிறது. இனி தொடர்ந்து கண்டிப்பாக உயரும்.
ஆசிய பசிபிக் மூத்த சந்தை ஆய்வாளர் கெல்வின் வாங் கூறுகையில், "ஈரான்-இஸ்ரேல் மோதல்கள் காரணமாக அரசியல் ஆபத்துகள் அதிகரித்திருக்கின்றன. இது தங்கத்திற்கான பாதுகாப்பான முதலீட்டு தேவையை உயர்த்தியுள்ளது. உலக அளவில் பங்குச்சந்தைகள் மூச்சு முட்ட தொடங்கி உள்ளன. இதனால் பங்கு சந்தைகளில் கடுமையான சரிவுகள் ஏற்படும். போர் காரணமாக ஏற்பட்ட நிலையற்ற தன்மை காரணமாக தங்கத்தின் விலை கண்டிப்பாக உயரும். போர் தீவிரம் அடைய அடைய தங்கத்தின் விலை கண்டிப்பாக உயரும். அதனால் இப்போதே முடிந்த அளவு தங்கம் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
-
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
தங்கத்தில் செய்யப்படும் பெரிய முதலீடுகளுக்கு கட்டுப்பாடு.. செபி அதிரடி! நீங்கள் பாதிக்கப்படுவீர்களா? -
தங்கம் 70% சரிவு.. ஒரே மாதத்தில் தலைகீழ் மாற்றம்.. அடுத்து இதுதான் நடக்கும்! ஆனந்த் சீனிவாசன் நறுக் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications