தங்கம் வேண்டவே வேண்டாம் பேராண்டிகளா.. இந்தியர்களுக்கு வாரன் பஃபெட் விடுத்த பயங்கர வார்னிங்.. பின்னணி
சென்னை: இந்தியர்கள் தங்கம் மீது அதிக மோகம், அதிக ஆர்வம் கொண்டிருக்கும் நிலையில், தங்கம் அவ்வளவு சிறப்பான முதலீடு இல்லை என்று முதலீட்டாளரான வாரன் பஃபெட் தெரிவித்துள்ளார்.
இந்தியர்களுக்குத் தங்கத்தின் மீதான மோகம் என்பது மிக அதிகம். இந்தியர்களுக்கு தங்கம் என்பது பொருளாதார ரீதியாக முதலீடு என்பதை தாண்டி கலாச்சார ரீதியாக முக்கியமான அம்சம் ஆகும்.

ஒவ்வொரு இந்திய வீட்டிலும் தங்கம் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அது தாயின் கை, கழுத்தை அலங்கரிக்கும் வளையல்களாகவோ, நெக்லஸ்களாகவோ, பாட்டியின் பரம்பரை நகைகளாகவோ அல்லது தீபாவளி போன்ற பண்டிகைகளில் வாங்கும் சிறு நாணயமாகவோ இருக்கலாம். காலப்போக்கில், தங்கம் வைத்திருப்பது ஒரு முக்கிய அந்தஸ்தின் அடையாளமாக மாறியுள்ளது. முதலீடு என்பதை தாண்டி இது பெருமை, அந்தஸ்து, பாதுகாப்பு, பெண்களுக்கான சொத்து என்றும் பார்க்கப்படுகிறது.
தங்கம் - வாரன் பஃபெட்டின் பார்வை
ஆனால் உலகின் மிக வெற்றிகரமான முதலீட்டாளரான வாரன் பஃபெட்டின் பார்வையில், தங்கம் என்பது ஒரு சிறப்புமிக்க பொருள் அல்ல. தங்கம் வெறுமனே ஒரு உலோகம். அதன் மதிப்பு உயர்ந்தால் அதை சிறப்பான சொத்தாக கருத முடியாது. தங்கம் ஒரு உற்பத்தி செய்யாத சொத்து. தங்கம் என்பது மார்க்கெட் போல உயரக்கூடியது அல்ல;.
ஆச்சரியப்படும் விதமாக, கடந்த பல ஆண்டுகளாக தங்கம் ஒரு நல்ல முதலீடாகவே நிரூபிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் மோசமாக இருக்கும் போதும் அல்லது உலக அளவில் பதட்டமான சூழ்நிலை நிலவும் போதும் பொதுவாக தங்கம் சிறப்பாகச் செயல்படும். ஆனால் அதை நம்பி இருக்க வேண்டாம்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளதால்.. உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்களுக்குத் தங்கம் அதன் மதிப்பை நிரூபித்திருந்தாலும், எந்த வருமானத்தையும் ஈட்டாததால், இது ஒரு சிறந்த நீண்டகால முதலீடு அல்ல. அதை வெறுமனே வீட்டில் பூட்டி வைத்து எதுவும் செய்ய முடியாது. விற்றால் மீண்டும் வாங்க முடியாது.
தங்கம் ஆப்பிரிக்காவிலோ அல்லது வேறு எங்கோ மண்ணில் இருந்து தோண்டி எடுக்கப்படுகிறது. பின்னர் அதை உருக்கி, இன்னொரு பள்ளம் தோண்டி, மீண்டும் புதைத்து, அதை பாதுகாப்பதற்காகப் பணம் கொடுத்து ஆட்களைப் பணியமர்த்துகிறோம். இதற்குப் பயனே இல்லை. தங்கம் என்பது புதிய எதையும் உருவாக்காத, வருமானம் ஈட்டாத அல்லது வணிகத்தை வளர்க்காத ஒரு உற்பத்தி செய்யாத சொத்து என்று எச்சரித்து உள்ளார்.
எச்சரிக்கை
இதற்கு வாரன் முக்கியமான டேட்டா ஒன்றை உதாரணமாக காட்டுகிறார். கடந்த 15 ஆண்டுகளாக தங்கத்தின் பயணம் பல முதலீட்டாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்தபோது, தங்கம் நிலையான தன்மையைப் பேணி வருகிறது. ஆனால் பங்கு சந்தையே அதிக ரிட்டர்ன் கொடுத்துள்ளது.
தங்கம் vs S&P 500- கடந்த 15 ஆண்டுகால டேட்டா
1 வருடம் - 44% தங்கத்தின் வருமானத்தில் முன்னேற்றம்- 18.20% S&P 500 வருமானத்தில் முன்னேற்றம்
5 ஆண்டுகள் - 103.50% தங்கத்தின் வருமானத்தில் முன்னேற்றம்- 101% 18.20% S&P 500 வருமானத்தில் முன்னேற்றம்
10 ஆண்டுகள் - 259% தங்கத்தின் வருமானத்தில் முன்னேற்றம்- 220% 18.20% S&P 500 வருமானத்தில் முன்னேற்றம்
15 ஆண்டுகள் - 187% தங்கத்தின் வருமானத்தில் முன்னேற்றம் - 465% 18.20% S&P 500 வருமானத்தில் முன்னேற்றம்
அதாவது தங்கம் நிலையான முன்னேற்றம் அடைந்து உள்ளது. ஆனால் பங்கு சந்தைதான் அதிக ரிட்டர்ன் கொடுத்துள்ளது. எனவே தங்கத்தை விட பங்குசந்தையே வேகமான பலன் அளிக்கும் என்று வாரன் கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications