3x2x1 ஈஸி ஃபார்முலா.. ஆரோக்கிய வாழ்வுக்கு 10-3-2-1 விதி.. ரொம்ப சிம்பிள்.. இரவில் நல்ல தூக்கம் வரும்
சென்னை: ஆரோக்கியமான வாழ்வு அமைய, ஆழமான தூக்கம் அனைவருக்கும் தேவைப்படுகிறது.. இதற்கு சுவாசப்பயிற்சி, முறையான உணவுப்பழக்கம், தியானம் போன்றவற்றை கடைப்பிடிப்பதுடன், சில தீய பழக்கவழக்கத்தையும் அடியோடு நிறுத்த வேண்டியிருக்கிறது.. அதேபோல, நிம்மதியான தூக்கத்துக்கு 3-2-1 பார்முலா பெரிதும் கைகொடுப்பதாக சொல்கிறார்கள். அப்படியென்றால் என்ன?
நமக்கு முறையான மற்றும் சரியான தூக்கம் இருந்தாலே ஆரோக்கியமான வாழ்வை பெற முடியும் என்கிறார்கள். அந்த அளவுக்கு தூக்கம் அனைவருக்குமே அத்தியாவசியமானது. இவைகளுடன் சத்தான உணவு, தொடர்ச்சியான உடற்பயிற்சிகள் சேரும்போது, நிம்மதியான ஆரோக்கியமான வாழ்வை பெற முடியும்.

தூங்கும் முன்பு இதை செய்தாலே போதுமே
ஒரு ஆரோக்கியமான மனிதன் தினந்தோறும் 6 முதல் 8 மணி நேரம் இரவு தூங்க வேண்டும் என்கிறார்கள் டாக்டர்கள்.. தூங்கும் நேரம் இதுவென்றாலும், தூங்க செல்வதற்கு முன்பேயே கண்களுக்கு ஓய்வை தந்துவிட வேண்டுமாம். அதனால்தான், கம்ப்யூட்டர், டிவி, செல்போன், டேப்லெட் என எலக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்கிறார்கள். ஏனென்றால், இதிலிருந்து வெளியாகும், "நீல ஒளி" மூளையை களைப்படைய செய்துவிடுவதுடன், ஓய்வுக்கும் இடம்தராது.
அதேபோல, இரவு தூங்க போவதற்கு முன்பு, கால் பாதங்களில், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் இதில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி மசாஜ் செய்து விட்டு தூங்க போனால் ஆழ்ந்த தூக்கம் வரும்..
சோம்பு தண்ணீர் அவ்வளவும் நல்லது
தூங்கும் முன்பு சோம்பு டீ, சோம்பு தண்ணீர் குடிக்கலாம். எளிதான செரிமானம் நடந்து, தேவையற்ற சதைகளை கரைக்க இந்த சோம்பு தண்ணீர் உதவும். அதுமட்டுமல்லாமல், மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் மெலடோனின் எனப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, ஆழ்ந்த தூக்கத்திற்கும் சோம்பு நீர் வழிவகுக்கும்.
தினமும் 8 மணி நேரம் தூக்கத்தை பெற வேண்டுமானால், அதற்கு உதவுவதுதான் "3-2-1" என்ற ஃபார்முலா.. இந்த ஃபார்முலாவை பலரும் பின்பற்ற துவங்கியிருக்கிறார்கள்.
3-2-1 ஃபார்முலா என்றால் என்ன
அதாவது, தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன் மது, இறைச்சி அல்லது செரிமானமாகாத உதவை சாப்பிடக்கூடாது.. இவைகளை 3 மணி நேரத்துக்கு முன்னதாகவே முடித்து விட வேண்டும்.. அதேபோல, 2 இரண்டு மணி நேரத்திற்கு முன்பு மனதை அமைதியாக ஒருமுகப்படுத்த துவங்க வேண்டும்.. இதற்கான ஓய்வான நிலையில் மனதையே வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக, 1 மணி நேரத்திற்கு முன்பாகவே, டிவி, கம்ப்யூட்டர், செல்போன் என எலக்ட்ரானிக் சாதனங்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிட வேண்டும். இதுதான் அந்த 3-2-1 பார்முலாவாகும்.
10-3-2-1 விதி என்றால் என்ன
அதேபோல, தூங்குவதற்கு 10 மணி நேரம் முன்னதாக காபி, டீ, ஜூஸ் குடிப்பதை முடித்து விட வேண்டுமாம்.. காரணம் காபி உள்ளிட்ட பானங்களிலுள்ள காஃபின், தூக்கத்தை கெடுத்துவிடக்கூடியவை.. சீரான தூக்கத்தையும் தரவிடாது. எனவே, 8 மணி நேரம் தூக்கம் அவசியம் என்றால், முதலில் 3-2-1 பார்முலாவை ஒரு வாரத்திற்கு பின்பற்ற துவங்கிவிட்டாலே, நாளடைவில் அதுவே பழகிவிடும்.. அதற்கு பிறகு, 10-3-2-1 பார்முலாவை முயற்சித்தால் எளிதாக பழக்கப்படுத்தி கொள்ள முடியும் என அறிவுறுத்துகிறார்கள் நிபுணர்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications