மோசமானது! மயோசிடிஸ் நோயின் அறிகுறிகள் என்ன? 8 மாதங்களாக நரக வேதனை.. நடிகை சமந்தா கண்ணீர்
சென்னை: மயோசிடிஸ் நோயின் தீவிர அறிகுறிகள் குறித்து நடிகை சமந்தா கண்ணீர் மல்க பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கோலிவுட்டில் பிரபலமான நடிகை சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பசங்களில் நடித்துள்ளார். இவர் சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர். இவர் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் படித்துள்ளார்.
மேலும் இவர் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். சூர்யா, விஜய், அதர்வா, நானி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோருடன் நடித்துள்ளார்.

நாகார்ஜுனா
இவர் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு கோவாவில் திருமணம் செய்து கொண்டார். 2021 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிவதாக கூட்டாக அறிவித்தனர். இதையடுத்து சமந்தா யசோதா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த படம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு படமாகும்.

சமந்தா
இந்த நிலையில் திடீரென சமந்தாவுக்கு மயோசிடிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டார். இந்த நோய் ஏற்பட்டால் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்களை தாக்கி தசைகளையும் தாக்கும். மேலும் இது தாங்க முடியாத வலியையும் வீக்கத்தையும் உண்டாக்கும். இதன் காரணமாக இந்த நோயினால் பாதிக்கப்பட்டோர் தசைகள் மிகவும் வலுவிழந்து காணப்படுவர்.

உடற்பயிற்சி
சமந்தா மிகவும் கடுமையான உடற்பயிற்சியை செய்யும் பழக்கம் கொண்டவர். ஆனாலும் இந்த நோயினால் அவர் பாதிக்கப்பட்டது எப்படி என தெரியவில்லை. அவர் இந்த நோய் பாதிதத்து முதல் உடற்பயிற்சி செய்வதில் கூட அவருக்கு சிக்கல்கள் எழுந்தன. இந்த நோய் பாதிப்பால் உடற்பயிற்சியோடு சேர்த்து ஆட்டோ இம்யூன் புரோட்டோக்கால் டயட் என்ற கடுமையான உணவு கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம்
அவர் அண்மையில் புல்லப்பஸ் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த நோய் பாதித்தவர்கள் உடலில் திசுக்கள் மற்றும் செல்களை தாக்கும் விதமாக ஆன்டிபாடிஸ் செயல்படுத்தப்படுகிறது. பொதுவாகவே உடலில் உள்ள நோய் தொற்றுகளுடன் போராடுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள இவை நோய் தொற்று கிருமிகளை தாக்குவதற்கு பதிலாக அந்த நபரின் செல்களையே அழித்துவிடும்.இதனால் உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

எதை சாப்பிடக் கூடாது
சீட்ஸ், நட்ஸ், உருளைக்கிழங்கு, தக்காளி, முட்டை, பால் பொருட்கள் ஆகியவற்றை முழுவதுமாக தவிர்த்துவிடுதல் வேண்டும். காய்கறிகள், பழங்கள், இயற்கை இனிப்புகள், வினிகர் உள்ளிட்டவற்றை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த நிலையில் இந்த நோயின் அறிகுறிகள் குறித்தும் அவர் பட்ட கஷ்டங்கள் குறித்தும் நடிகை சமந்தா பகிர்ந்துள்ளார்.

மயோசிடிஸ் நோய்
அவர் கூறுகையில் மயோசிடிஸ் நோய் பாதிப்பு காரணமாக எனது உடல்நிலை மோசமாகிவிட்டது. எந்த அளவுக்கு என்றால் என்னுடைய தசைகள் பயங்கர வலியை கொடுத்தன. எலும்புகள் பலவீனமாகி நான் சோர்ந்துவிட்டேன். சில நாட்களில் படுக்கையில் இருந்து கூட எழுந்து செல்வதற்கு சிரமமாக இருந்தது. கடுமையான ஒற்றைத் தலைவலி ஏற்பட்டது. இந்த தலைவலியால் எந்த செயலையும் செய்ய முடியாது.

குண்டாக இருந்தேன்
ஒரு நாள் குண்டாகவும் ஒரு நாள் ஒல்லியாகவும் இருக்கிறேன். கண்களில் கூட இது வலியை ஏற்படுத்துகிறது. கண்களில் ஊசி குத்துவது போன்ற வலியுடன் தான் காலை படுக்கையிலிருந்து எழுவேன். கண்கள் வீங்கி சில நாட்கள் மோசமாக இருந்துள்ளன. இந்த 8 மாதங்களாக எப்படியெல்லாம் அவதிக்குள்ளாக்கினேன் என்றார் சமந்தா. இந்த நோய் தசை அழற்சி நோயாகும். தசைகளில் ஏற்படும் வீக்கம் ஆகும். இந்த நோய் எலும்புகளை இணைக்கும் தசைகளை தாக்கும் மயோபதி நோயாகும்.

நோய் பாதிப்புகள்
இந்த நோய் எதனால் ஏற்படுகிறது என்ற உறுதியான காரணம் தெரியவில்லை. சுற்றுச்சூழல் மற்றும் மரபணு இந்த நோய் ஏற்பட முக்கிய காரணமாகிறது. இது முகம், மார்பு, கழுத்து, முதுகில் ஊதா நிறத்தினாலான தடிப்புகளை ஏற்படுத்தும். எடை குறையும், கரடுமுரடான தோல், சோர்வு, தசை வலி, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு ஆகியவை அறிகுறிகளாகும். இந்த நோய் பெண்களை விட அதிகமான ஆண்ளை பாதிக்கிறது. 50 வயதிற்கு மேற்பட்டவர்களை பாதிக்கிறது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications