அலறவிட்ட எய்ட்ஸ்.. உசுருக்கே உலை வைத்த உயிர்க்கொல்லி.. இந்த அறிகுறியெல்லாம் இருக்கா? டேஞ்சர் ஹெச்ஐவி
சென்னை: உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றுதான் எய்ட்ஸ் (AIDS- Acquired Immuno Deficiency Syndrome)... குணப்படுத்த முடியாத கொடிய நோய் என்றாலும், இந்த தீவிரத்தை கட்டுப்படுத்தலாம்.. எய்ட்ஸ் நோயின் ஆரம்ப கால அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? எச்ஐவி தொற்று பற்றி அறிந்து கொள்ள என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
எய்ட்ஸ் என்ற பெயரை கேட்டாலே உடலில் நடுக்கம் கொள்ளும் அளவுக்கு, மிகப்பெரிய ஆபத்தான நோய் இது.. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் ஏராளம் உண்டு.. எனினும், இந்த நோயை தடுக்கவும், குணப்படுத்தவும் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன...

கொடிய நோய்: நோயெதிர்ப்பு உயிரணுக்களை அழிக்கக்கூடிய பயங்கரமான வைரஸ்தான் இந்த எச்ஐவி.. உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்திகள் குறைய குறைய, உயிரிழப்புவரை கொண்டுசென்றுவிடும்.. இந்த வைரஸ், உடலில் பரவி, 2 அல்லது 3 மாதங்களுக்கு பிறகுதான், அதன் அறிகுறியே வெளியே தெரிய ஆரம்பிக்கும்.. கடுமையான தொற்றாக இது உருவெடுத்து, அதற்கு பிறகு, கொடிய நோயாக மாற, கிட்டத்தட்ட 10 வருட காலமாகிவிடுமாம்.
பாதுகாப்பற்ற உடலுறவு, பாதுகாப்பில்லாத வாய்வழி, ஆசனவழி உறவு, தகாத உறவு, ஓரின சேர்க்கை, எச்ஐவி பாதிப்புக்குள்ளான ரத்தம் செலுத்துவது, பிறர் பயன்படுத்திய ஊசியை சுத்திகரிக்காமல் பயன்படுத்துவதன் மூலம் இந்த எச்ஐவி எனப்படும் வைரஸ் பரவுகிறது. இதனால், வயிற்றிலுள்ள குழந்தைக்கும், தாயின் மூலம் பரவ வாய்ப்புள்ளது. அதேபோல, குழந்தைக்கு பாலூட்டும்போதும் வைரஸ் தொற்று ஏற்படுகிறது.
லேசான அறிகுறிகள்: எய்ட்ஸ் நோய் இருப்பவர்கள் எச்ஐவி கொண்டிருப்பார்கள். ஆனால் எச்ஐவி கொண்டுள்ள அனைவருமே எய்ட்ஸ் பெற்றிருப்பார்கள் என்பது அவசியமில்லை. தலைவலி, காய்ச்சல், தொண்டை வலி, தசைவலி, மூட்டுவலி, வாய், பிறப்புறுப்பில் புண்கள், வயிற்றுப் போக்கு, இரவில் கடும் வியர்வை, ஆகியன சாதாரண அறிகுறிகளாகும்.
கடுமையான அறிகுறிகள்: தலைவலி, பார்வை குறைபாடு, இருமல் மற்றும் மூச்சடைப்பு, நனைக்கும் அளவுக்கு வியர்வை, பல வாரங்களுக்கு 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் காய்ச்சல், எடை குறைவு, களைப்பு, சருமத்தில் சொறிகள் போன்றவை கடுமையான அறிகுறிகளாகும்.
இதில், உடல் எடை வழக்கத்தை விடவும் வேகமாக குறைந்து வந்தால், சற்றே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த எச்ஐவி கிருமியின் பாதிப்பை உங்கள் நகங்களில்கூட கண்டுபிடிக்க முடியும்.. நகம் பிரிவதும், அவற்றின் நிறங்கள் குறைவதும்கூட ஒரு அறிகுறியாகும்.
பெண்கள்: தலைவலி எப்போதுமே இருந்தால், சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.. பெண்களுக்கு, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்றாலும் கவனமாக இருக்க வேண்டும். எச்ஐவிக்கான ஆரம்ப அறிகுறியாக இருப்பதால், ஏஆர்எஸ் (ARS) டெஸ்ட் செய்துகொள்ள பரிந்துரை செய்யப்படுவார்கள்.
தடுக்க வழிமுறைகள்: பாதுகாப்பான உறவு மூலம் இந்த தொற்றை தடுக்கலாம்.. ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு ரத்தத்தை பெறும்போது, எய்ட்ஸ் உள்ள நபரா? என்பதை பரிசோதிக்க வேண்டும்.. அதேபோல, கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஊசியை பயன்படுத்துவதன் மூலம் எய்ட்ஸ் பரவாமல் தடுக்க முடியும். தாயிடமிருந்து குழந்தைக்கு பரவுவதையும், தகுந்த சிகிச்சை மூலம் தடுக்க முடியும்.
முன்பெல்லாம் நிறைய குழந்தைகள் எச்ஐவி தொற்றுடன் பிறந்தார்கள்.. ஆனால், இப்போது இந்த எண்ணிக்கை குறைந்து வருகிறது.. இதற்கு காரணம், விழிப்புணர்வுகள் அதிகமாகி உள்ளது.. அதனால்தான், நிறைய பேர் ரத்தப்பரிசோதனைகளை தாங்களாகவே மேற்கொள்கின்றனர்..
பரிசோதனை முறைகள்: எய்ட்ஸ் கிருமிகள் உடம்பில் இருக்கிறதா என்பதை உறுதிசெய்வதே ரத்த பரிசோதனைகள்தான்.. எலீசா, வெஸ்டர்ன் பிளாட் பரிசோதனைகளை இதற்காக செய்வார்கள்.. ஆனால், டைபாய்டு, மஞ்சள் காமாலை பாதிப்பு இருந்தால், இந்த டெஸ்ட் எடுக்கக்கூடாது.. அப்படி செய்தால், தவறான ரிசல்ட் வந்துவிடும். எச்ஐவி டெஸ்ட் செய்து 6 மாதத்திற்கு பிறகு, மறுபடியும் எச்ஐவி டெஸ்ட் செய்து உறுதிபடுத்தி கொள்ள வேண்டும்.
எச்ஐவி அல்லது எய்ட்ஸ் பற்றிய குழப்பங்கள் தீர வேண்டுமானால், ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையத்தை முதலில் அணுக வேண்டும். அங்கு (நம்பிக்கை மையம்) எச்ஐவி பற்றிய தகவல்களும் எச்ஐவி பரிசோதனைக்கு முன்பான ஆலோசனை மற்றும் தகவல்களையும் தருவார்கள்.. அதற்கு பிறகு, சுயவிருப்பத்தின் அடிப்படையில் எச்ஐவி டெஸ்ட் மேற்கொள்ளப்படும். இந்த டெஸ்ட் முடிவினை ஆலோசகர், சில ஆலோசனைகளை தந்து, தனிப்பட்ட முறையில் எச்ஐவி நிலைப்பற்றி ரகசியமாக சொல்வார்.
நோயின் ஆரம்ப கால அறிகுறிகளை உணர்ந்து கொண்டாலே, சிகிச்சை செய்வது மிகவும் எளிதாக இருக்கும். அரசு மருத்துவமனைகளில் எச்ஐவி பரிசோதனை செய்யவும், உரிய சிகிச்சையளிக்கவும் வசதிகள் நிறைய இருக்கின்றன. அதுமட்டுமல்ல, நோயாளிகளின் பதிவேடுகள் ரகசியமாக பராமரிக்கவும் வசதிகளும் உள்ளன.
விழிப்புணர்வு: வருடந்தோறும் மே 18-ம் தேதி உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. எய்ட்ஸ் நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்பட வேண்டியதன் தேவையையும், அவசியத்தையும் எடுத்துச் சொல்லும் வகையிலும், இந்த உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் அனுசரிக்கப்படுகிறது.
அதுமட்டுமல்ல, இந்த வைரஸை ஒழிப்பதற்காக, தொடர்ந்து உழைத்து வரும் மருத்துவர்கள், அறிவியல் அறிஞர்கள் மற்றும் தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications