செவ்வாழை பெஸ்ட்.. 48 நாள் சாப்பிட்டால் வீட்டில் குட்நியூஸ்தான்.. சத்துக்களின் குவியல் செவ்வாழைப்பழம்
சென்னை: செவ்வாழையை இரவில் சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா? செவ்வாழை அப்பம் கேள்விப்பட்டிருக்கீங்களா? எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?
செவ்வாழையில் வைட்டமின் C, இரும்பு சத்து, நார்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் நிறைந்திருக்கிறது.. சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்றி, கற்களை தொடர்ந்து சேராமல் தடுக்கிறது இந்த செவ்வாழை. ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது.

ரத்த அழுத்தம்: பொட்டாசியம், மக்னீசியம் இரண்டுமே செவ்வாயில் இருப்பதால், ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. இதயத்தை சீராக வைப்பதால்,பக்கவாதம், மாரடைப்புகளை தடுக்கிறது. தோல் பிரச்சனைகளை சரி செய்கிறது.
நுரையீரல், கல்லீரல், உடலுறுப்புகளுக்கு பலத்தை தருகிறது. மாலைக்கண் உட்பட கண் கோளாறுகளை நீக்குகிறது, ஒரு துண்டு செவ்வாழையை, கண்களின் மேல் சிறிது நேரம் வைத்தாலே கண் எரிச்சலும், கண்ணில் நீர் வழிதலும் நின்றுவிடும். குடலில் நல்ல பாக்டீரியாவின் எண்ணிக்கையை உயர்த்துகிறது. மலச்சிக்கலை போக்கக்கூடியது..
கருப்பை: பெண்களுக்கு கருப்பையை பலப்படுத்துகிறது.. இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், வைட்டமின் B6 கருவுறுதலின் விகிதத்தை அதிகரிக்க செய்வதுடன், கருமுட்டைகள் சிதையாமலும் பாதுகாக்கிறது.
குழந்தைபேறு இல்லாத தம்பதிகள், தினமும் ஒரு செவ்வாழையை சாப்பிட்டு அரை ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், 40 நாட்களுக்குள் கருத்தரிக்க வாய்ப்பிள்ளது. அதேபோல, ஒருநாளைக்கு 2 செவ்வாழையை அரை டீஸ்பூன் தேனுடன், 48 நாள் இரவில் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கான நரம்புகள் பலம்பெற்று, ஆண்மைக்கோளாறுகள் நீங்கிவிடும்..
ஆண்மை குறைபாடு: ரத்த மண்டலத்திற்கும் ஆண்மைக்கான ஊட்டச் சத்திற்கும் தேவையான வேதிப்பொருட்கள் செவ்வாழைப் பழத்தில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால்தான், செவ்வாழைக்கு "குழந்தை பேறு தரும் பழம்" என்பார்கள்.
நரம்பு தளர்ச்சி பிரச்சனை உள்ளவர்களும் இப்படி இரவில் 48 நாட்கள் செவ்வாழையை சாப்பிட்டு வந்தால் தீர்வு கிடைக்கும்.. 21 நாட்களுக்கு செவ்வாழையை சாப்பிட்டு வந்தால், பல் சம்பந்தப்பட்ட நோய்கள், வலிகள் நீங்கிவிடும்.. ஈறுகளும் பலமடையும்... மூல நோய் இருந்தாலும், நிவாரணம் கிடைக்கும். செவ்வாழையில் மற்ற வாழைப்பழங்களை விட மிக குறைந்த கலோரிகளே உள்ளதால், உடல் எடை குறைய உதவுகிறது.
காலை உணவு: செவ்வாழையை காலை 6 மணிக்கு சாப்பிட வேண்டுமாம். இதனால், அன்றைய நாளுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் குறிப்பாக, வைட்டமின்கள், தாது உப்புகளில் 60 சதவிகிதம் கிடைத்துவிடுமாம்.. இத்தனை நன்மைகள் இருந்தாலும், சர்க்கரை நோயாளிகள், சிறுநீரக கற்கள் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் டாக்டர்களின் ஆலோசனையை பெற்ற பின்புதான் செவ்வாழையை சாப்பிட வேண்டும்.
இந்த செவ்வாழையில் மில்க் ஷேக், பாயாசம் செய்வார்கள்.. சிலர் இதில் கேசரியும் செய்வார்கள்.. அதாவது, செவ்வாழை பழத்தை, மிக்ஸியில் கூழாக அரைத்து வைத்து கொள்ள வேண்டும். ஒரு வாணலில் நெய், முந்திரி பருப்பு, திராட்சை சேர்த்து வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.
செவ்வாழை கேசரி: அதே வாணலியில் ரவையை சேர்த்து, வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். மீண்டும் அதே வாணலில், 2 கப் ரவைக்கு 7 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு, ரவையை அதில் கொட்டி கட்டியில்லாமல் கிளற வேண்டும். ரவை வெந்ததும், சர்க்கரையை கொட்டி கிளறி, கேசரி பவுடர், நெய், அத்துடன் அரைத்து வைத்திருக்கும் செவ்வாழைப்பழக்கூழ் சேர்த்து கலக்க வேண்டும். 5 நிமிடம் கிளறிவிட்டு, ஏலக்காய் தூவி இறக்கினால் செவ்வாழை கேசரி ரெடி.
இதே செவ்வாழை கேசரியை வேறு வகையிலும் செய்யலாம்.. ஒரு பழுத்த செவ்வாழையை தோலுரித்து சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும்.
கேசரி: ஒரு வாணலில், நெய் சேர்த்து, ரவையை வறுத்து எடுக்க வேண்டும். இப்போது அதே கடாயில் நெய் ஊற்றி வாழைப்பழத்தை சேர்த்து, சிறிது பால் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பாலில், பழம் கொதித்து வரும்போது, வறுத்த ரவையை அதில் கொட்டி கலக்க வேண்டும். இறுதியில், தேங்காய் துருவல், சர்க்கரை, விருப்பமான எசன்ஸ் சேர்த்து இறக்கினால் கேசரி ரெடி.
அதேபோல செவ்வாழையில் அப்பம் போல செய்யலாம்.. 100 கிராம் வெல்லத்தை அரை கப் தண்ணீரில் சேர்த்து, அடுப்பில் வைத்து கரைக்க வேண்டும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டிஎடுத்துக் கொள்ள வேண்டும்.
அப்பம் : இப்போது ஒரு பாத்திரத்தில் வெல்ல கரைசலை கொட்டி, ஒரு கப் கோதுமை மாவு, ஒரு செவ்வாழைப்பழம், சிறிது ஏலக்காய் பவுடர், சிறிது உப்பு போட்டு நன்றாக பிசைய வேண்டும். இப்போது வாணலில் நெய் ஊற்றி, கலந்து வைத்துள்ள மாவை சிறு சிறு அப்பங்களாக கிள்ளிப் போட்டு சிவக்க வறுத்து எடுத்தால் செவ்வாழைப்பழ அப்பம் ரெடி.












Click it and Unblock the Notifications