Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாக்யராஜ் சொன்ன "முருங்கைக்காய்" சமாச்சாரம் நிஜமா? இயற்கையின் "வயாகரா" முருங்கை.. பெஸ்ட் டயட் டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல டைரக்டர் பாக்யராஜ் சொன்ன முருங்கைக்காய் சமாச்சாரம் உண்மையா? நிஜமா? என்பதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், முருங்கைக்காயில் உள்ள அத்தனை மருத்துவமும், இயற்கை நமக்கு வழங்கிய கொடையாக திகழ்ந்து வருவது மறுக்க முடியாத உண்மையாகும்.

2 வருடங்களுக்கு முன் "முந்தானை முடிச்சு" பார்ட்-2 படத்தயாரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது, ரசிகர்கள் கேட்டிருந்த நிறைய கேள்விக்கு கே.பாக்யராஜ் பதிலளித்து வந்தார்.

முருங்கைக்காய்: அப்போது, "முருங்கைக் காய் சீன். இந்தக் காட்சியை எடுக்கும்போதே, இந்த அளவுக்கு ரீச் ஆகும்னு எதிர்பார்த்தீங்களா? எனக்கும் ஒரு டவுட்டு. உண்மையிலேயே, முருங்கைக்காய்ல அப்படியொரு சக்தி இருக்கா, இல்லியா? இல்ல... நீங்களே சும்மா அடிச்சு விட்டீங்களா?" என்று அவரது மகன் சாந்தனு, பாக்யராஜிடமே கேள்வி எழுப்பியிருந்தார்.

Amazing Health benefits of Drumsticks and Do you know the health remedies of drumsticks

அதற்கு பாக்யராஜ், "இல்லப்பா, அதுமாதிரிலாம் அடிச்சுவிடமுடியாது. கடவுள் மேல சத்தியமா சொல்றேன். முருங்கைக்காய் சமாச்சாரம் உண்மைதான். என்னோட அம்மாவோட அம்மா, என் பாட்டி வீட்ல எல்லாருக்கும் சாப்பாடு போடுவாங்க. எங்க மாமாலாம் சாப்பிட உக்கார்ந்திருப்பாங்க. அப்போ, மட்டனோ சிக்கனோ பண்ணிருந்தா, "இன்னும் ஒரு பீஸ் போட்டுக்கோ, இன்னொரு பீஸ் போட்டுக்கோன்னு" போடுவாங்க எனக்கு.

சாம்பார்: ஆனா முருங்கைக்காய் குழம்பு வைச்சிருக்கும்போது, நாமளே கேட்டோம்னாக் கூட, "சாறுடா"ன்னு சாம்பாரைத்தான் ஊத்துவாங்களே தவிர, முருங்கைக்காயை போடமாட்டாங்க. எங்க மாமாவுக்கெல்லாம் போடுவாங்க. எனக்கு போடமாட்டாங்க. எங்க ஊர்ல பெரிய மனுஷன் ஒருத்தர் சின்னப் பசங்க எங்களோட சுத்திட்டிருந்தாரு. அவர்கிட்ட, அண்ணே முருங்கைக்காயை மட்டும் எங்களுக்கு போடமாட்டேங்கிறாங்க. மட்டன், சிக்கன்லாம் போடுறாங்களே ஏன்'னு கேட்டோம்.

அது கொஞ்சம் டிரபிள் பண்ணும்டா. என்ன டிரபிள் பண்ணும் எங்க மாமா எல்லாம் சாப்பிடுறாங்களே அவங்களுக்கு பிரச்சனை இல்லையா? என கேட்டேன். டேய்! அவங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகிடுச்சிடா... டிரபிள் பண்ணா கூட பிரச்சனை இல்ல. உங்களுக்குப் பிரச்சினைடா'ன்னு சொன்னார்.

"புரிஞ்சுக்கடா... சும்மா இதைப்போய் நொய்நொய்னு கேட்டுக்கிட்டே இருக்கே"ன்னு சொன்னார். இதைத்தான் பின்னாடி, "முந்தானை முடிச்சு"ல வைச்சேன் என பாக்யராஜ் விளக்கம் கொடுக்க, உடனே சாந்தனு எல்லாரும் தெரிஞ்சிக்கோங்க, முருங்கைக்காய்க்கு பின்னால இருக்குற சயின்ஸ் உண்மை தான் என சிரித்து கொண்டே கூறியிருந்தார்.

கல்லீரல்: அறிவியல்பூர்வமாக இது எந்த அளவுக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. ஆனால், முருங்கைக்காயில் வைட்டமின் சி மிகுதியாக காணப்படுகிறது.. அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை எலும்புகள் வலிமையடைய உதவுகின்றன. முருங்கைக்காயானது தொண்டை கரகரப்பு, சளி மற்றும் தொண்டை புண் போன்றவற்றுக்கு சிறந்த நிவாரணத்தை தருகிறது. ஆஸ்துமா, கல்லீரல் மற்றும் கணைய வீக்கம், போன்றவற்றை குணப்படுத்துகிறது.

காதல், காமம், கருத்தரிப்புக்கு சித்தமருத்துவம் பரிந்துரைப்பது முருங்கைக்காய்களைதான். முருங்கையின் விதையில் உள்ள 'பென் ஆயில்' சத்து காதலுக்கும் காமத்துக்கும் அருமருந்து என்கிறார்கள்.
கர்ப்பப்பை: முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும் என்றும், இதை முருங்கைப் பூவின் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும். நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குணமாகி கர்ப்பப்பை வலுப்பெறும் என்றும் சொல்லப்படுகிறது.

Amazing Health benefits of Drumsticks and Do you know the health remedies of drumsticks

ஆனால், முருங்கைக்காயில் உள்ள சத்துக்கள் அபரிமிதமானது.. அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் போன்றவை இருப்பதால், எலும்புகள் வலிமையடைய உதவுகின்றன.. மூலநோய் உள்ளவர்கள், சளி பிரச்சனை பாதிப்பு உள்ளவர்கள், ரத்தசோகை, வயிற்றில் புழு பிரச்சனை உள்ளவர்கள், கணையம், கல்லீரலில் வீக்கம் உள்ளவர்களுக்கு முருங்கைக்காய் அருமருந்தாகும்.

நோயாளிகள்: ரத்த சர்க்கரை அளவை சீராக்கி அதை கட்டுக்குள் வைப்பதுதான் முருங்கைக்காயின் பிரதான பயனாகும்.. அதில் உள்ள வைட்டமின் மற்றும் மினரல்கள் பித்தப்பையின் வேலையை மேம்படுத்துவதால் நீரிழிவு நோயாளிக்குக்கும் நன்மைகளை வாரிதருகிறது.

அற்புதக்காய்: முருங்கைக்காய் மற்றும் அதன் இலைகள் ரத்தத்தை சுத்தம் செய்யும் தன்மையைக் கொண்டவை. தொண்டை கரகரப்பு, சளி, தொண்டை புண் ஆகியவற்றை சரிசெய்வதில் முருங்கை சிறந்தது.. கீல்வாதம் மற்றும் மூட்டு வலியால் அவதிப்படும் நபர்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. முக்கியமாக, இந்தியாவில் நிலவும் அதிக காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படும் நுரையீரலுக்கு, சிறந்த தீர்வு முருங்கைக்காய்தான் என்கிறார்கள்.. ஆக மொத்தம், குறைந்த விலையில், அதிக சத்துக்கள் நிறைந்த அற்புதம்தான் இந்த முருங்கைக்காய்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+