கிழங்கில் பெஸ்ட் கருணைக்கிழங்கு.. நிச்சயம் உண்டு கருணை.. அல்சர் முதல் மூலம் வரை ஓட்டும் கருணைகிழங்கு
சென்னை: கருணைக்கிழங்கில் 2 வகைகள் இருக்கின்றன.. என்னென்ன தெரியுமா? அந்த இரண்டு கிழங்குகளின் பயன்கள் என்னென்ன தெரியுமா?
கருணைக்கிழங்கு உடலை குளிரச் செய்யும் உணவாகும்.. அதனால், ஆஸ்துமா இருப்பவர்கள் தவிர்க்க வேண்டுமாம்.. சர்க்கரை நோயாளி, இதய பாதிப்பு உள்ளவர்கள், ரத்த அழுத்தம், ஒவ்வாமை தொந்தரவு உள்ளவர்கள், கிழங்குகள் சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அல்லது டாக்டர்களிடம் ஆலோசனை பெற்று, அதற்கேற்றபடி கிழங்குகளை சாப்பிடுவது நல்லது..

2 வகையான கருணைக்கிழங்குகள் உள்ளன.. காரும் கருணை, காராக் கருணை என்பார்கள்.. இமுதல் வகை, காரும் தன்மை உடையது. காராக்கருணை, பெரிய அளவில் ஒழுங்கற்ற வடிவத்தில் காணப்படும்.. மேல்பாகம் கரடு முரடாக இருக்கும்.. சிலர் சேனைக்கிழங்கு என்றும் சொல்வார்கள்.. கிழங்கில் காரல் இருக்காது.. அத்துடன் மாவுச்சத்துக்கள், புரதச்சத்துக்கள், வைட்டமின்கள் இதில் உள்ளன.
2 வகைகள்: காரும் கருணை, நீண்ட உருளை வடிவில் காணப்படும். இது நமைச்சலை தரக்கூடியது.. அதனால், நன்றாக வேக வைத்து, புளி சேர்த்து சமைக்க வேண்டும்.. அல்லது நறுக்கும்முன்பு, கைகளில் எண்ணெய்யை தடவிக்கொண்டு சீவலாம்.. அல்லது அரிசி கழுவிய நீரில், கருணைக்கிழங்கை வேக வைத்தாலும், நமைச்சல் கட்டுப்படும். அல்லது புளிக்கு பதிலாக சிலர் மோர் பயன்படுத்தலாம்.
ஜீரணசக்தியை அதிகப்படுத்தி ஜீரண உறுப்புகளுக்கும் பலத்தை தரக்கூடியது காரும் கருணைக்கிழங்கு. மூலத்துக்கு மருந்தாக பயன்படுவது இந்த கிழங்குதான்.. சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கருணைக்கிழங்கு லேகியம் என்றால் படுஃபேமஸ். வைட்டமின் C, ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுகள் அதிகம் நிறைந்தவை என்பதால், அல்சரையும் குணப்படுத்தக்கூடியது.. கபம், வாதம், ரத்த மூலத்தை குணப்படுத்தக்கூடியது..
மூலநோய்: மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதை முற்றிலும் குணப்படுத்த விரும்பினால், கருணைக் கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர நிவாரணம் கிடைக்கும். மூல நோய்க்கு மிகச்சிறந்த மருத்துவ உணவாக இருந்துவருகிறது இந்த கருணை..சர்க்கரை நோய் உள்ளவர்கள் எல்லாவகையான கிழங்குகளையும் தவிர்க்க வேண்டும் என்றாலும், இந்த கருணைக்கிழங்கு மட்டும் சிறிய அளவு எடுத்துக் கொள்ளலாமாம்.
முடக்குவாதம் உள்ளவர்கள் வாரம் 2 முறை கருணையை சமைத்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும். இந்த கருணை கிழங்கை கொண்டுதான் மாதவிலக்கு பிரச்னைக்கான மருந்து தயாரிக்கிறார்கள்..
வெள்ளைப்படுதல்: கருணைக்கிழங்கை வேகவைத்து மசித்து, ஒரு ஸ்பூன் எடுத்து, வெல்லத்துடன் கலந்து மாதவிலக்கு முன்பு சாப்பிட்டு வந்தால், கைகால் வலி இடுப்பு வலி, வயிற்று வலி, தலைவலி நீங்கும்.. அல்லது சமையலில் மாதவிலக்குக்கு முன்பேயே சமைத்து சாப்பிட்டு வர வேண்டும். மெனோபாஸ் பிரச்சனையின்போது இழக்கப்படும் ஈஸ்ட்ரோஜன் அளவை இந்த கிழங்கு அதிகப்படுத்துகிறது.. வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வை இந்த கிழங்கு தருகிறது.
தொடர்ந்து கருணை சாப்பிடுவதால், நம்முடைய குடலில் நச்சுக்கள், கிருமிகள், கொழுப்புகள் சேராமல் தடுக்கப்படுகின்றன. இது உடல் எடை குறைப்போருக்கு உதவுகிறது. "குண்டுடல் குறைக்கும் கருணைக்கிழங்கு" என்றே முன்னோர்கள் சொல்வார்கள்.
உடல் எடை குறைய: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, மல்லிவிதை பொடி ஒரு ஸ்பூன், வேகவைத்து அரைத்து மசித்த கருணை கிழங்கு ஒரு ஸ்பூன், சோம்பு 1 ஸ்பூன், பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவந்தால், கொழுப்பு கரையுமாம்.. மூட்டுவலிக்கும், நெஞ்சரிச்சலுக்கும் அல்சருக்கும், ரத்த அழுத்த பிரச்சனைக்கும் மருந்தாகிறது இந்த கருணைக்கிழங்கு.












Click it and Unblock the Notifications