மஞ்சள் காமாலையோடு.. சொறி, சிரங்கையும் ஆற்றும் கீழாநெல்லி.. கில்லி போல நோயை ஓட்டும் கீழாநெல்லி பவுடர்
சென்னை: கீழாநெல்லி மூலிகையை பொறுத்தவரை, கல்லீரல் நோய்களுக்கு மிக முக்கிய மருந்தாகிறது. அதுபோலவே, கண் பார்வை கோளாறுகளையும் இந்த கீழாநெல்லி போக்குகிறது.. எப்படி தெரியுமா?
நம்முடைய உடலின் மிகப்பெரிய உறுப்புகளில் மட்டுமின்றி முக்கியமான உறுப்பு கல்லீரல். அந்தவகையில், கீழாநெல்லி சாறு, கல்லீரலின் பாதுகாவலன் எனலாம்..

காமாலை: கீழாநெல்லியை செய்து, நன்றாக அரைத்து, அந்த விழுதை மோருடன் கலந்து குடித்து வந்தால், காமாலை மட்டுமல்ல நீரிழிவு நோயும் சேர்ந்தே குணமாகும்.. அல்லது கீழா நெல்லி பொடி என்றே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.. இந்த பொடியை நீரில் கொதிக்க வைத்து, சீரகத்தூள், தேன் கலந்து குடித்தாலும் காமாலை குணமாகும்.. அல்லது இந்த செடியை காய வைத்து பொடி செய்து அதை மோரில் கலக்கி சாப்பிட்டாலும் காமாலை தீரும்..
மஞ்சள் காமாலை என்றில்லாமல், ஹெப்படைட்டிஸ்-B, ஹெப்படைட்டிஸ்-C போன்ற நோய்த்தொற்றுக்களை குணப்படுத்தும் தன்மை இந்த கீழாநெல்லிக்கு உண்டு..

ரத்தசோகை : இதை பயன்படுத்தும்போது, கல்லீரலில் ஏற்படக்கூடிய புற்றுநோய்கூட தடுத்து நிறுத்தப்பட்டுவிடுமாம். மதுப்பழக்கத்திற்கு ஆளாகி உள்ளவர்களை தடுத்து நிறுத்துவதற்கும், மீண்டும் இயல்பு நிலைக்கு உடலை கொண்டு வருவதற்கும் கீழாநெல்லி பெரும் பலனை தருகிறது.
கீழாநெல்லியுடன் சமமான அளவு கரிசிலாகண்ணி கீரையும் சேர்த்து அரைத்து, பசும்பாலுடன் 45 நாள்கள் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பலம்பெறும்.. ரத்தசோகை பிரச்சனையும் நீங்கும்.
ஒற்றை தலைவலி: அதுபோலவே, ஒற்றை தலைவலியை போக்கவும், இந்த கீழாநெல்லி பெரிதும் உதவுகிறது.. கீழாநெல்லி தைலம் என்றே கடைகளில் விற்கிறார்கள்.. இந்த தைலத்தை வாரத்தில் ஒரு முறை உச்சந்தலையில் தேய்த்து ஊறவிட்டு, தலைக்கு குளித்து வந்தாலே போதும்.. ஒற்றைத் தலைவலி நீங்கும்..
அல்லது கீழாநெல்லிசாறு, உந்தாமணிச் சாறு, குப்பைமேனி சாறு, இவைகளை சமமாக கலந்து நல்லெண்ணெயில் எரித்து முகர்ந்து வந்தால், தீராத தலைவலியும் தீர்வதுடன், கண்ணில் நீர் வடிதல் பிரச்சனையும் தீரும்..
அசிடிட்டி: கீழாநெல்லிகள், அசிடிட்டி பிரச்சினை உள்ளவர்களுக்கும் கீழாநெல்லி மருந்தாகிறது.. பெரும்பாலும் நம்முடைய உடலில் பித்தம் அதிகமாகிவிட்டால் அசிடிட்டி பிரச்சினை ஏற்படும்.. இதற்கு இந்த கீழாநெல்லி பவுடரில் டீ போல தயாரித்து குடித்து வந்தாலே அசிடிட்டி நீங்கிவிடும். அதேபோல, கீழாநெல்லியின் தளிர்களை அரைலிட்டர் நீரில் போட்டு காய்ச்சி, அந்த தண்ணீரை மட்டும் குடித்து வந்தால் சீதபேதி உடனே நீங்கும்.
வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் கீழாநெல்லி பொடியை வெந்நீாில் கலந்து குடித்து வந்தால், கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்குவதுடன், கண்பார்வை மேம்படும். அல்லது கீழாநெல்லிக்கீரை, பொன்னாங்கண்ணி கீரையுடன் சம அளவு நன்றாக அரைத்து காலை, மாலை புளித்த மோரில் கலந்து தொடர்ந்து 40 நாட்கள் குடித்து வந்தாலும் கண்பார்வை கூர்மை பெறும்.
சரும ஆரோக்கியம்: சருமத்தில் அரிப்பு, தடிப்புகள், காயங்கள், இருந்தால் அதனை இந்த கீழாநெல்லி கீரையை கொண்டே சரிசெய்யலாம். எப்படி தெரியுமா? கீழாநெல்லியில் ஆன்டி பாக்டீரியல், ஆன்டி ஃபங்கல் பண்புகள் போன்றவை அதிகமாக இருப்பதால், சருமத்துக்கும் கவசம் போல உதவுகிறது..
ஒரு கைப்பிடி கீழாநெல்லிகீரையை சுத்தம் செய்து, ஒரு சிட்டிகை கல் உப்பு சேர்த்து அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்துவிட்டால் எந்தவிதமான சருமப்பிரச்சினைகளும் ஓடிவிடும். அல்லது கீழாநெல்லி இலையில் கல் உப்பு சேர்த்து அரைத்துத் தடவி குளித்து வந்தாலும், சொறி சிரங்கு, நமச்சல் தீரும்.
எண்ணெய்: கீழாநெல்லி வேர்களும் மருத்துவ குணம் நிறைந்தவை.. இந்த செடியின் வேர்களை சுத்தம் செய்து, சிறு சிறு துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால், தலையில் வழுக்கை மறையும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிக ரத்த போக்கு ஏற்படும். இதனால், ரத்தசோகை பிரச்சனையும் அதிகமாகிவிடும். இந்த் இரண்டிற்குமே ஒருசேர தீர்வு தருகிறது கீழாநெல்லி.. கீழாநெல்லியை பொடியாக அரைத்து, அதனுடன் 3 முதல் 6 கிராம் வரை தேனில் கலந்து சாப்பிட்டாலே, அதிக ரத்தப்போக்கு கட்டுப்படுவதுடன், வெள்ளைப்படுதல் பிரச்சனையும் சீராகும்..!!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications